சற்று முன்

மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!   |    ‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்   |    150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |    பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ஸ்ருதிஹாசன் குரலில் ‘பவழ மல்லி’ – சாய் அபயங்கர் இசையில் புதிய பாடல்!   |    'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்   |    மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!   |    நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

ஜாகுவாரை தாக்கிய மன்சூரலிகான்
Updated on : 03 August 2018

"தெரு நாய்கள் " படத்தை இயக்கிய ஹரி உத்ராவின் அடுத்த படைப்பு "படித்தவுடன் கிழித்து விடவும் ".



 





இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை , சாலி கிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் விமரிசையாக நடந்தது.



 





விழாவில் பேசிய புரடியூசர் கில்டு அமைப்பின் தலைவர் ஜாகுவார் தங்கம் ., " தமிழ் சினிமாவில் தமிழன் , தமிழ் பெண்கள் தான் நடிக்க வேண்டும், இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் அதற்கு தமிழ் பெண்கள் நடிக்க வருவதில்லை... என்று பதில் வருகிறது. 'அழகான தமிழ் பெண்களை நான் தரவா ? '"தமிழர்கள் தான் லைட் பாய் முதல் டைரக்டர் வரை ... அனைத்து தொழில்நுட்பங்களிலும் பணிபுரிய வேண்டும் . தமிழ்நாட்டில்  தமிழன் தான் ஆள வேண்டும் .... வாழ வேண்டும் . என்று பேசினார்.



 



அவரைத் தொடர்ந்து பேச வந்த நடிகர் மன்சூரலிகான்., இங்கு பேசிய ஜாகுவார் தங்கம் அவர்கள் ., தமிழ் , தமிழன் என்றார். கலைக்கு ஜாதி ,மதம் ,மொழி கிடையாது .... என்பதால் எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றும் முயற்சிக்குக் கூட நான் எதிரானவன் . எம் .ஜி.ஆ,ர் என்.டி .ஆர் ,வி கேஆர் மண்வெட்டி பிடித்து எல்லாம் வளர்த்து எடுத்த சங்கம் அது. எனவே குறுகிய மனப்பாண்மை கூடாது .... என்பது என் கருத்து . மேலும் ஜாகுவார்., இங்கு பேசும் போது ., "தமிழ் சினிமாவில் தமிழன் , தமிழ் பெண்கள் தான் நடிக்க வேண்டும், இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதற்கு, தமிழ் பெண்கள் நடிக்க வருவதில்லை... என்று பதில் வருகிறது. 'அழகான தமிழ் பெண்களை நான் தரவா ? '" எனக் கேட்டார். "அப்போ அமலா பால் . ஹன்சிகா மோத்வானி  .... எல்லாம் வேண்டாமா ? இதற்காக தொழிலை மாத்தி பேரைக் கெடுத்துக்காதீங்க... ஜாகுவார் .... என்பதே என் அட்வைஸ்! .என கிண்டலாக பேசிய மன்சூரலிகான் ., அடுத்து, அதிரடிக்கு தாவினார்.



 



பொதுவா ,நான் எந்த சினிமா விழாவுக்கு  போனாலும் , அந்தப் படத்தை ஆஹா , ஒஹோ அற்புதம் அப்படின்னு சும்மாங்காட்டியும்  பாராட்டி பேச மாட்டேன் .ஆனால், "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ", "வளர்ந்தவுடன் சினதத்து விடவும் ", "சாப்பிட்டவுடன் போய் விடவும் " அப்படிங்கற மாதிரி .,  "படித்தவுடன் கிழித்து விடவும் " எனும் இப்பட டைட்டிலே ., இப்படக் குழுவினரின் துணிச்சலைக் காட்டுகிறது.



 



இப்படித்தான் , "ராஜாதி ராஜ, ராஜமார்த்தாண்ட ராஜகு லோத்துங்க ......" என என் படத்திற்கு வித்தியாசமாக மிகப் பெரிய நீளமான டைட்டில் வைத்திருந்த போது , "தெற்கு தெருமச்சான் " ஷூட்டிங் ஸ்பாட்டில் அதைப் பற்றி என்னிடம் பேசிய நடிகர்சத்யராஜும் , இயக்குனர் மணிவண்ணனும் இது என்னய்யா டைட்டில் ? போய்யா ... என்றனர். ஆனால், அதன் பிறகு ஒரு நாள் சத்யராஜ் என்னிடம் ., ஒரு பங்ஷன்ல என்பேமிலியும் , ரஜினி சார் பேமிலியும் கலந்து கொண்டோம் .... அப்போ , என் பசங்களும் ,ரஜினி சார் பசங்களும் ., உங்க படபேர வச்சு , அதை தப்பு இல்லாது சொல்ற போட்டி நடத்தி சீரியஸா விளையாடினாங்க அப்பவே நினைச்சேன் நீ , ஜெயித்து விட்டாய் .... என்று என என்னைப் பாராட்டினார். அப்படி இந்தப் பட டைட்டிலும் நிச்சயம் எல்லோரையும் பேச வைக்கும். என்று அவர் கூறினார். 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா