சற்று முன்
சினிமா செய்திகள்
சதீஷ் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் ஜாங்கோ
Updated on : 03 August 2018
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக "ஜாங்கோ" எனும் புதிய படத்தை தயாரிப்பாளர் சீ.வி.குமார் தயாரிக்க இருக்கின்றார். இவர் இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுப்பட்டி படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய மனோ கார்த்திக்கேயன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இன்று இதன் படப்பிடிப்பு பூஜை போடப்பட்டு இனிதே துவங்கியது.
"ஜாங்கோ" படத்தின் படப்பிடிப்பை பாரதிய ஜனதா கட்சி தமிழக இளைஞர் அணி தலைவரும், மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான திரு. சதிஷ் குமார் போன்ஸ்லே துவங்கி வைத்தார்.
இதில் சதிஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த
படத்தில் கருணாகரன், ராம்தாஸ், RJ ரமேஷ், ஹரிஷ் பெராடி, துளிசி, சந்தான பாரதி, சிவாஜி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகள்
மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் மிகப்பெரிய மல்டி ஸ்டார்ரர் திரைப்படமான ‘பேட்ரியாட்’ படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர், மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் நேற்று காலை 10 மணி முதல் ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் வெளியிடப்பட்டன. அதில் நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது.
இந்த படத்தில் நயன்தாரா வலுவான மற்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரேவதி, கிரேஸ் ஆண்டனி, கீதீ சங்கீதா, ஸ்ரீ பார்வதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் செரின் ஷிஹாப் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் மகளிர் தினத்தில் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.
முன்னதாக வெளியான செகண்ட் லுக் போஸ்டரில் மம்முட்டி, மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் மாஸ் ஆக்ஷன் தோற்றத்தில் இடம்பெற்றிருந்தனர். அந்த காட்சிகளின் பின்னணி (BTS) வீடியோவும் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஸ்பை த்ரில்லர் திரைப்படத்தில் மம்முட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா மற்றும் ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படம் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, அசர்பைஜான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் 18 ஆண்டுகளுக்கு பிறகு மம்முட்டி மற்றும் மோகன்லால் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிப்பதும், அதில் நயன்தாரா இணைந்திருப்பதும் படத்தின் முக்கிய சிறப்பாகக் கருதப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளதுடன், ஒளிப்பதிவை மனுஷ் நந்தன் மேற்கொண்டுள்ளார். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி மற்றும் கிச்சப்பு பிலிம்ஸ் நிறுவனங்களின் சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இந்த படம், மலையாள சினிமாவில் சர்வதேச தரத்தில் உருவாகும் மிகப்பெரிய ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது.
‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் எதிர்பாராத கிளைமாக்ஸ் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தை இயக்கி பாராட்டுகளை பெற்ற இயக்குநர் ஸ்ரீ செந்தில், இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். நடிகர் பரத் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் அஜய் கார்த்தி நடித்துள்ளார். ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை சங்கீதா, நீண்ட இடைவேளைக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகளும் அதிரடியும் கலந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான போஸ்டரில் நடிகர்களின் தோற்றம், படம் ஒரு விறுவிறுப்பான திரில்லர் அனுபவத்தை வழங்கும் என்பதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளதுடன், புரொடக்ஷன் டிசைனை G. துரைராஜ் கவனித்துள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த திரைப்படத்தை SKY PICTURES நிறுவனம் சார்பில் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் K. செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ போன்ற வெற்றி படங்கள் வெளியானதால், ‘காளிதாஸ் 2’ திரைப்படத்திற்கும் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள இந்த திரைப்படம், கோடை விடுமுறை ஆரம்பத்தில் வெளியாகவுள்ளதால் திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘அறிவு’. கழுகு திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இப்படத்தை இயக்குகிறார். உறியடி படத்தின் மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி இப்படத்தில் நாயகன்–நாயகியாக இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.
Movietron Production நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், பெண் உரிமைகளை மையமாகக் கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் உருவாக உள்ளது. சமூக அக்கறையும் விறுவிறுப்பும் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் I.M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதையும், திரைக்கதையும் எழுதி இயக்கும் சத்யசிவா, சமூக கருத்துகளை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்லும் திறமையால் அறியப்பட்டவர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் D. இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தில் ராஜு மேற்கொள்ள, படத்தொகுப்பை வெற்றி கிருஷ்ணன் கவனிக்கிறார். கலை இயக்குநராக S.K. பணியாற்ற, கிரியேட்டிவ் ஹெட்டாக ராமு M. செயல்படுகிறார். இணை தயாரிப்பாளராக சாய்பிரபு ஜெயக்குமார் உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இடுக்கி, தேனி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இயற்கை அழகும் நகர வாழ்க்கையின் நிஜங்களும் இணையும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சமூகப் பொறுப்புணர்வும் விறுவிறுப்பும் இணையும் இந்த திரைப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!
'முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர்களுக்கான திரையிடல் மற்றும் சிறப்பு திரையிடல்களில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தை பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் படத்தை Sakthi Film Factory நிறுவனம் சார்பில் சக்திவேலன் பி வெளியிடுகிறார். மாநிலம் முழுவதும் 150-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் பகிர்ந்து கொண்டதாவது,
“ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் உருவாகியுள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் அதிகளவில் பார்வையாளர்களை சென்றடைவது மிகவும் முக்கியம். அதற்கு அனுபவம்மிக்க விநியோகஸ்தர்களின் ஆதரவு அவசியம். சக்திவேலன் சார் போன்ற முன்னணி விநியோகஸ்தர்களின் ஆதரவு கிடைப்பது எந்த திரைப்பட இயக்குநரும் விரும்பும் விஷயம். சக்தி பிலிம் பேக்டரி பல தனித்துவமான கதைக்களம் கொண்ட, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரைப்படங்களை தொடர்ந்து ஊக்குவித்து, அவற்றை தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. எங்கள் திரைப்படத்தை வெளியிட அவர் முன்வந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. அவருடைய ஆதரவு ’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தை மேலும் பல பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி பகிர்ந்து கொண்டதாவது,
“’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக, முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் பல தருணங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. படத்தின் திரைக்கதை பார்வையாளர்களை கட்டிப்போடும் விதமாக அமைந்துள்ளது என என்னுடன் படம் பார்த்தவர்களும் ரசித்து பாராட்டினர். முழு அணியும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப் படத்திற்காக உழைத்துள்ளது. இந்த படம் திரையரங்குகளில் பார்வையாளர்களை நிச்சயம் மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.
’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் மார்ச் 6, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!
இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில், Rise East Entertainment சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் மார்ச் 12 முதல் Netflix தளத்தில் ப்ரீமியராகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு அனுபவங்களை பகிர்ந்தனர்.
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர்,
“கொரியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது. ஒரு பெண்ணின் கனவு நனவாவதை பற்றி உணர்வுப்பூர்வமான திரைக்கதையை கார்த்திக் படமாக்கியுள்ளார். அவருடன் எனக்கு இது இரண்டாவது படம். கொரியாவில் படமாக்கும்போது சில சவால்களை சந்தித்தோம். ஆனால், அதையும் தாண்டி நடிகர்களின் நடிப்பு, படமாக்கப்பட்ட சூழல் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது.
பிரியங்கா மோகனின் பக்கத்துவீட்டு பெண் போன்ற எளிய தோற்றமே அவரை இந்த கதைக்குள் கொண்டு வந்தது. தமிழ்நாடு மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி ரசிகர்களுக்கும் பிரியங்கா பரிச்சியம் என்பதும் அவரை நாங்கள் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம். உங்களுக்கு ஒரு கனவு இருந்தால் அதற்காக கடுமையான உழைப்பை கொடுத்தால் நிச்சயம் அது ஒருநாள் நிறைவேறும் என்பதுதான் இதில் சொல்லியிருக்கிறோம்” என்றார்.
இயக்குநர் கார்த்திக், “என்னுடைய முதல் படமான ‘நித்தம் ஒரு வானம்’ படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. ’மேட் இன் கொரியா’ என்னுடைய இரண்டாவது படம். சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் கொரியாவில் படமாக்குவது கஷ்டம். இது நான் அங்கு கற்றுக்கொண்ட பெரிய விஷயம். திரையரங்குகளை விட நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ படம் வெளியானபோது இன்னும் அதிக ரசிகர்கள் பார்த்துவிட்டு வாழ்த்தினார்கள். திரைத்துறையிலும் எனக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது.
அதனால், நெட்ஃபிலிக்ஸ் உடன் அடுத்த படம் என்றதும் உடனே ஒப்புக்கொண்டு ‘மேட் இன் கொரியா’ ஆரம்பித்தேன். 13 மொழிகளில் இந்தப் படத்தை டப் செய்தும் 36 மொழிகளில் சப்டைட்டில் உடனும் நெட்ஃபிலிக்ஸ் இந்தப் படத்தை வெளியிடுவதால் அதிக ரீச் கிடைக்கும். அதனால், ஓடிடியில் நேரடியாக இந்தப் படம் வெளியாவது மகிழ்ச்சி. இன்றைய தலைமுறையினர் பலரும் கே-டிராமா ரசிகர்கள். அவர்களுக்கு எல்லாம் ஒருமுறையாவது கொரியா போக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள்தான் இந்தப் படத்தின் மெயின் ஆடியன்ஸ்” என்றார்.
நடிகை பிரியங்கா மோகன் பேசியதாவது, “’மேட் இன் கொரியா’ படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் கொரியன் டிராமா பார்ப்பது, சில வார்த்தைகள் கற்றுக் கொண்டது என தயாரானேன். இயக்குநர் கார்த்திக் கொடுத்த இன்புட்ஸூம் உதவியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் அங்கு படமாக்கினோம். கணிக்க முடியாத காலநிலைதான் அங்கு பெரும் சவாலாக இருந்தது. காலையில் படப்பிடிப்பிற்கு செண்பாவாக சென்று மாலையில் செண்பாவாக திரும்புவேன்.
நாங்கள் அங்கு சென்று கொரிய வார்த்தைகள் நிறைய கற்றுக்கொண்டது போல, ‘தளபதி’ படத்தின் சுந்தரி பாடலையும் நிறைய தமிழ் வார்த்தைகளையும் அங்குள்ளவர்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறோம். இயக்குநரின் மனைவி கொரியன் டிராமா ரசிகை. அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார். செண்பா தன்னை யார் என்று கண்டுபிடிப்பதுதான் ‘மேட் இன் கொரியா’” என்றார்.
ரசிகர்களை கவர்ந்த ஆக்ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!
நடிகர் லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்குவில் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் ரசிகர்களும் கலந்து கொண்டனர். வெளியான டீசர் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை Legend Saravana Stores Productions பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம்பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடகங்களில் பாராட்டுகளையும் குவித்துள்ளது. டீசர் வெளியானதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார்,
"அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம் தான் லீடர். தனது மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு தந்தையை சுற்றி கதை சுழல்கிறது. இன்றைய பார்வையாளர்களை மனதில் கொண்டு, சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமான படமாக இதை உருவாக்கி உள்ளோம். டீசர் ஒரு சாம்பிள் மட்டுமே; படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. முதல் பார்வை மற்றும் கிளிம்ப்சுக்கு கிடைத்த அமோக வரவேற்பளித்த ரசிகர்கள் டீசரையும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 'லீடர்' அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்," என்றார்.
இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர் மற்றும் VTV கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக எஸ். வெங்கடேஷ் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பை பிரதீப் இ. ராகவ் மேற்கொண்டுள்ள நிலையில், சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ வடிவமைத்துள்ளார்.
தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்ட ‘லீடர்’ திரைப்படம் ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக உருவாகி, வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான Amazon Prime Video தனது தமிழ் ஒரிஜினல் காமெடி–டிராமா தொடர் ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸின் உலகளாவிய வெளியீட்டை அறிவித்துள்ளது. மார்ச் 13 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சீரிஸ் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த தொடர், வேகமாக மாறிவரும் டிஜிட்டல் செய்தி சூழலில் தன் மரபை காக்கப் போராடும் ஒரு உள்ளூர் வார இதழை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. Anekdotes உருவாக்கியுள்ள இந்த தொடரை நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கியுள்ளார். Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார்.
இந்த சீரிஸில் ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடரை பிரவீன் முத்துரங்கன் எழுதியுள்ளார். மேலும் அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே, தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி இணைந்து இந்த சீரிஸை உருவாக்கியுள்ளனர்.
‘லோக்கல் டைம்ஸ்’ கதை, ஏழ்மையில் இருந்தாலும் அளவற்ற நம்பிக்கையுடன் வாழும் நான்கு நண்பர்கள் – வீரா, அழகு, வள்ளி மற்றும் முத்து – ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி நகர்கிறது. வீராவின் தாத்தாவுக்கு சொந்தமான ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ‘நம்ம செய்தி’ என்ற உள்ளூர் பத்திரிகையை காப்பாற்ற நால்வரும் முயற்சி செய்கிறார்கள். அவர்களின் குழப்பமான வாழ்க்கை, நகைச்சுவையான சாகசங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அவர்களை வீழ்த்த முயலும் ஒரு வலுவான எதிரி ஆகியவற்றைச் சுற்றியே இந்த தொடரின் கதை நகர்கிறது.
பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் நிகில் மதோக் கூறுகையில்..,
“லோக்கல் டைம்ஸ் என்பது உணர்ச்சி ரீதியாக மனதைத் தொடும் கதை. ஒரு உள்ளூர் வார இதழின் செய்தியை மையமாகக் கொண்டிருந்தாலும், இதன் மைய கருக்கள் நட்பு மற்றும் உறுதியான மனப்பாங்கு என்பதால் அவை உலகளவில் அனைவரும் உணரக்கூடியவை. திறமையான நடிகர்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்ட குழுவுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸ், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கவரும் பிராந்திய கதைகளை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,” என்றார்.
தயாரிப்பாளர் ஜித்தின் துரை கூறுகையில்..,
“லோக்கல் டைம்ஸ் மூலம், நம்பிக்கையை காப்பாற்ற முயலும் சாதாரண மனிதர்களின் எளிய மற்றும் இலகுவான வாழ்க்கை கதையை சொல்ல நினைத்தோம். ஒரு உள்ளூர் பத்திரிகை அமைப்பு நமக்கு பரிச்சயமான உலகை கொடுத்தாலும், இந்த சீரிஸின் உண்மையான இதயம் இந்த நான்கு கதாபாத்திரங்களின் நட்பே. டிரெய்லர் அவர்கள் பயணத்தின் ஒரு சின்ன முன்னோட்டம் மட்டுமே. இந்த சீரிஸ் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் 'இன்ஸ்பெக்டர் ரிஷி'க்கு பிறகு பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.
படைப்பாளர்களான அபிநவ் மற்றும் பிரவீன் கூறுகையில்..,
“ஆரம்பத்திலிருந்தே தமிழ் பார்வையாளர்களுக்காக இலகுவான, மகிழ்ச்சியான ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. லோக்கல் டைம்ஸ் ஒரு எளிமையான, மனநிறைவு தரும் சீரிஸ். சிறிய அலுவலகம், பெரிய கனவுகள், மற்றும் ஈகோ மோதல்களுக்கு இடையே நடக்கும் ஒரு கலகலப்பான பயணம், இவை அனைத்தும் இதில் இடம் பெற்றுள்ளன. இது டிராமா காமெடி என இரண்டையும் இணைத்து சொல்லும், எளிமையான இதயம் தொடும் சீரிஸ். இதைப் பார்வையாளர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறோம்.
இயக்குநராக அறிமுகமாகும் நவீன் ஜார்ஜ் தாமஸ் கூறுகையில்..,
“லோக்கல் டைம்ஸ் கதை, தங்கள் கனவுகளை துரத்திக்கொண்டு நிற்கும் யாருடைய கதையாகவும் இருக்கலாம். நமது கதாநாயகர்கள் வழக்கமான ஹீரோக்கள் அல்ல, அவர்கள் குறைகளுடன் இருப்பவர்கள், பிடிவாதம் கொண்டவர்கள், சில நேரங்களில் முட்டாள்களாக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆழமான அன்பை கொண்டவர்கள். அவர்களின் அவசர குடுக்கைத் தனம் காமெடியாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது உணர்வுப்பூர்வமாக இருக்கும். இந்த சீரிஸ் இயக்குநராக என் முதல் படைப்பு. இந்த சீரிஸ் பிரைம் வீடியோவில் வெளியாவது பெரும் மகிழ்ச்சி என்றார்.”
நட்பு, கனவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த இந்த ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸ் மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில் தமிழ் மொழியில் ஆங்கில சப் டைட்டில்களுடன் உலகம் முழுவதும் வெளியாகிறது.
பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!
புதுமையான கதைக்களத்தில் உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஏற்கனவே ஆர்வத்தை தூண்டியிருந்த இந்த படம், தற்போது வெளியான டீசர் மூலம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையோடு தொடங்கும் டீசர், அடுத்தடுத்து ஆச்சரியம் அளிக்கும் காட்சிகளால் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக, அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பண மிஷின் – பட்டன் அழுத்தினால் கொட்டும் பணம் – என்ற புதுமையான கருத்து கதையை வித்தியாசமான பாதைக்கு இட்டுச் செல்கிறது. உணர்வுப்பூர்வமாக தொடங்கும் இந்த டீசர் பின்னர் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான திருப்பங்களுடன் முடிகிறது.
இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Power House Pictures தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். மங்களூர், சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்து வரும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் நகர வாழ்க்கையின் நிஜங்களை இணைத்து உருவாகும் ‘கான் சிட்டி’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது வெளியான டைட்டில் டீசர், இந்த படம் முழுமையான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது.
ஸ்ருதிஹாசன் குரலில் ‘பவழ மல்லி’ – சாய் அபயங்கர் இசையில் புதிய பாடல்!
நடிகை ஸ்ருதி ஹாசன் தனது நடிப்பிற்கும் இசைத்திறமைக்கும் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார். தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உடன் இணைந்து அவர் பாடியுள்ள “பவழ மல்லி” பாடல் இசை உலகில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“பவழ மல்லி” பாடல் பாரம்பரியத்தின் மணமும் நவீன இசையின் அதிரடியும் இணைந்த ஒரு தனித்துவமான இசை அனுபவமாக உருவாகியுள்ளது. இண்டி இசை உலகில் தனித்துவமான பாணிக்காக அறியப்படும் சாய் அபயங்கர் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த பாடலின் முக்கிய சிறப்பாக அமைந்துள்ளது ஸ்ருதிஹாசனின் குரல். அவரது குரல் பாடலுக்கு தனித்துவமான கவர்ச்சியையும் ஆழமான உணர்ச்சியையும் அளிக்கிறது. மணமகன்–மணமகள் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான ஊடலை மையமாகக் கொண்டு, கேள்வி–பதில் பாணியில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மணமகளின் பதில்கள் ஸ்ருதிஹாசனின் குரலில் இனிமையாக ஒலித்து பாடலுக்கு மேலும் உயிரூட்டுகின்றன.
காதல் வளர வளர, பாடலின் இசையும் பல உணர்வுகளைக் கடந்து பயணிக்கிறது. இடையே மயக்க நிலையை உருவாக்கும் மெலடி பகுதிகள், பின்னர் கலாச்சார மணம் மிக்க வலிமையான இசை பகுதிகளாக மாறுகின்றன. இந்த இசை மாற்றங்களை ஸ்ருதிஹாசனின் குரல் மிகவும் அழகாக இணைக்கிறது.
பாடலின் கவிதை நயமிக்க வரிகளை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். அவரது வரிகள் கொண்டாட்ட உணர்வையும் காதலின் நுட்பமான தருணங்களையும் அழகாக வெளிப்படுத்துகின்றன.
மொத்தத்தில், ஸ்ருதிஹாசன் குரலில் ஒலிக்கும் “பவழ மல்லி” பாடல் பாரம்பரியமும் நவீன இசை முயற்சிகளும் இணையும், கலாச்சார மணம் மிக்க வித்தியாசமான இசை அனுபவமாக உருவாகியுள்ளது.

'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5-இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் வெப் சீரிஸ் ‘தடயம்’ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களிலேயே இந்த தொடர் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.
தமிழில் வெளியாகும் வழக்கமான க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியில் மர்மமும் பரபரப்பும் கலந்த கதைக்களத்துடன் உருவான இந்த சீரிஸ், ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்து வருகிறது. வெளியான குறுகிய காலத்திலேயே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளமை அதன் வெற்றியை உறுதிப்படுத்துகிறது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தது.
இந்நிகழ்வினில்..,
ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது…,
பொதுவாக ஒரு சீரிஸ் வெளியான பிறகு, அதன் முழு வரவேற்பையும் பல வாரங்கள் கடந்த பிறகுதான் நாம் பார்க்க முடியும். ஆனால் தடயம் சீரிஸில், இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டியுள்ளது. இது மிகப் பெரிய சாதனை என்று நான் நினைக்கிறேன்.
இதற்கு முன்பு ZEE5 தளத்தில் பல சீரிஸ்கள் வெளியானது. விலங்கு, அயலி போன்ற சீரிஸ்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை. ஆனால் அவற்றை ஒப்பிடும்போது மிகக் குறுகிய காலத்திலேயே இந்த அளவிலான பார்வை நிமிடங்களை ‘தடயம்’ எட்டியுள்ளது. ஒரு வாரத்திலேயே இப்படிப்பட்ட சாதனைகள் உருவாகியுள்ளது என்பது மிகப்பெரிய விஷயம். இந்த சாதனைக்கு முக்கிய காரணம் பார்வையாளர்கள்தான். அவர்கள் ஆதரவு இல்லாமல் இது நடந்திருக்காது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அடுத்தடுத்து இன்னும் பல நல்ல படைப்புகள் வரப்போகிறது. அதை நீங்கள் தொடர்ந்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
அதே நேரத்தில், இந்த தொடரின் வெற்றிக்கு பங்களித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு குழுவினருக்கும் எனது நன்றி.
Cocktail Cinemas தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா பேசியதாவது..,
இந்த அளவிலான வரவேற்பை ‘தடயம்’ சீரிஸுக்கு கொடுத்ததற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நீங்கள் அனைவரும் சேர்ந்து என்னையும், எங்கள் முழு குழுவையும் மிகப் பெரிய கௌரவத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் இணைந்து இந்த வெற்றியை உருவாக்கியுள்ளனர். இது எனக்கு தயாரிப்பாளராக முதல் முயற்சி. ஆனால் அந்த முதல் முயற்சியே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி ரசிகர்களின் ஆதரவால் மட்டுமே சாத்தியமானது. நீங்கள் இல்லையென்றால் இன்று நாங்கள் இந்த மேடையில் நிற்க முடியாது.
இந்த படைப்பை என்னால் முடியும் என்று நம்பிக்கை வைத்து, எனக்கு வாய்ப்பு கொடுத்த கௌஷிக் சார் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கூற வேண்டும். அவரின் நம்பிக்கையும் ஊக்கமும் இல்லையென்றால் இன்று இந்த தருணம் எனக்கு கிடைத்திருக்காது. அதேபோல் எப்போதும் எனக்கு துணையாக இருந்து, எந்த பிரச்சனை வந்தாலும் தைரியம் கொடுத்து முன்னேற்றிய கனி அண்ணனுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அவரின் ஆதரவும் ஊக்கமும் தான் இன்று நான் இங்கு நிற்க காரணம். இந்த சீரிஸில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் என் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம். இந்த தருணத்தை கொண்டாடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சீரிஸில் வேலை செய்த போது, எங்களுக்கு பல அழுத்தங்கள் இருந்தன. ஆனாலும் நல்லதாக ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முழு ஈடுபாட்டோடு வேலை செய்தோம். இன்று அதன் முடிவு ரசிகர்களை சென்றடைந்துள்ளது என்று பார்க்கும்போது, எங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதை உணர்கிறேன். எங்கள் டீம், இயக்குநர், சேனலிலிருந்து கௌஷிக் சார், முகில் சார், தயாரிப்பாளர் சார் ஆகிய அனைவரும் இந்த முழு பணிச்சூழலிலும், குறிப்பாக போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் இசை பணிகளின் போது எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். அதேபோல் எங்கள் டீம், பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் என எங்களுடன் பணியாற்றிய அனைவரும் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தனர். அவர்களின் ஆதரவும் உழைப்பும் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். நன்றி.
ஒளிப்பதிவாளர் KK பேசியதாவது..,
இந்த வெற்றி விழா மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது முதல் மேடை அனுபவமே ஒரு வெற்றி விழாவாக அமைந்ததற்கு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அஜய் சார், இயக்குநர் ஆகியோருக்கு நான் மிகவும் நன்றிகூற வேண்டும். அவர்களால்தான் இந்த சீரிஸில் நான் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் இயக்குநரும் முழு குழுவும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். இந்த வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி.
எடிட்டர் தினேஷ் குமார் பேசியதாவது..,
இந்த சீரிஸில் நாங்கள் பணியை தொடங்கிய போது, இயக்குநர் நவீன் அண்ணா ஸ்கிரிப்டை கொடுத்து முதலில் படிக்கச் சொன்னார். அப்போது படித்தவுடன் இது ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் நினைத்ததுபோலவே இந்த சீரிஸ் பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த நவீன் அண்ணாவுக்கு நன்றி. பெரிய வாய்ப்புகள் வந்தபோதும் தனியாக செல்லாமல், எங்களையும் கூட சேர்த்துக்கொண்டு சென்றதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல் இந்த சீரிஸில் ஆதரவாக இருந்த அஜய் சார், சரவணன் சார், எங்கள் உதவி இயக்குநர்கள் மற்றும் முழு டீமுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். நன்றி.
இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் பேசியதாவது..,
இந்த வெற்றிக்கு பலரின் ஆதரவு காரணமாக இருந்தது. குறிப்பாக கௌஷிக் சார் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். எந்த நேரமாக இருந்தாலும் — இரவு நேரங்களிலும் கூட — எப்போதும் தொடர்பில் இருந்து ஆலோசனைகள் வழங்கி, இந்த படைப்பை இந்த அளவுக்கு கொண்டு வர முக்கிய பங்கு வகித்தார். இந்த வெற்றியின் முக்கிய காரணங்களில் ஒருவர் கௌஷிக் சார் தான். அதேபோல் ZEE5 அணியில் இருந்து முகில் சார் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து ஆதரவாக இருந்தனர். மேலும் கனி அண்ணா மிகவும் ஆதரவாக இருந்து இந்த படைப்பு வெற்றியாக அமைய முக்கிய காரணமாக இருந்தார்.
என்னுடன் பணியாற்றிய என் முழு குழுவினருக்கும் நன்றி. குறிப்பாக மியூசிக் டைரக்டர், KK சார் இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சீரிஸில் பல முக்கிய தருணங்களில் இசை மிகவும் பெரிய பலமாக இருந்தது. அதேபோல் எங்களுடன் பணியாற்றிய அனைத்து துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என் டீம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறைந்த காலக்கெடுவில் — சுமார் 20 நாட்களுக்குள் — இந்த பணியை முடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால் சில நேரங்களில் நான் கடுமையாக நடந்துகொண்டிருக்கலாம். அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இருந்தாலும் நீங்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த படைப்பை முடித்ததற்கு நன்றி. சில குறைகள் இருந்தால் அதை அடுத்த படைப்புகளில் சரி செய்து இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
நடிகர் ராஜ்கிரண் தாஸ் பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம். இந்த அளவிலான வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையில் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த சீரிஸில் பங்கெடுத்த கௌஷிக் சார், நவீன், அஜய் சர்மா, கனி சார் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாராட்டு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த சீரிஸை தொடர்ந்து ஆதரித்து வரும் மீடியா நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களில் அதை மக்களிடம் கொண்டு சென்ற அனைத்து ரசிகர்களுக்கும் என் நன்றி.
எழுத்தாளர், நடிகை கொற்றவை பேசியதாவது..,
‘தடயம்’ வெப் சீரிஸ் எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் நவீன் குமார் அவர்களுக்கும், ZEE5 நிறுவனத்திற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நிறமும் தோற்றமும் காரணமாக பல தடைகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் இந்த கதாபாத்திரம் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை அளித்தது. இந்த வேடத்தில் ஒரு வித்தியாசமான மாற்றத்துடன் நடிக்க வாய்ப்பு கொடுத்த நவீன் குமார் அவர்களுக்கு என் சிறப்பு நன்றி. என் நடிப்பின் மீது அவர் வைத்த நம்பிக்கை எனக்கும் ஒரு பெரிய தைரியத்தை கொடுத்துள்ளது. என்னாலுமே நன்றாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த வாய்ப்பு எனக்கு தந்துள்ளது. இங்கு வந்திருக்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி.
திரு அழகன் தமிழ்மணி பேசியதாவது..,
என் அருமை சகோதரர், சகோதரி பத்திரிகையாளர்களே… நான் உங்களின் ஒருவன். என் வாழ்க்கை உங்களோடு தான் தொடங்கியது. ஆரம்ப காலத்தில் என்னோடு பணியாற்றிய பலர் இன்று கூட சகோதரர்களாகவே இருக்கிறார்கள். என் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே ஆதரவாக இருந்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
இன்று இந்த மேடையில் என் மகனைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவனை நேரடியாக தயாரிப்பாளராக உருவாக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து சினிமாவின் அடிமட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து, முதலில் என் சீரியல்களில் நடிக்க வைத்தேன். அதன் பிறகுதான் தயாரிப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி வளர்த்தேன். இன்று எந்த உதவியும் இல்லாமல் தனது முயற்சியால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கும் என் மகன் அஜய் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
‘தடயம்’ சீரிஸை நான் வீட்டில் உட்கார்ந்து பார்க்கும்போது, அது ஒரு வெப் சீரிஸ் போலவே எனக்குத் தோன்றவில்லை. ஒரு திரைப்படம் போலவே உணர்ந்தேன். அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தில், முடிவுவரை பார்த்து முடித்த பிறகுதான் எழுந்தேன். அந்த அளவுக்கு இயக்குநரின் கைவண்ணமும், ஒளிப்பதிவாளரின் பணியும், எடிட்டரின் வேலையும் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த சீரிஸை திரைப்பட தரத்தில் உருவாக்கிய முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.
நான் சின்னத்திரைக்கு புதிதானவன் அல்ல. 1999ஆம் ஆண்டிலேயே ‘மங்கை’ என்ற தொடர் மூலம் மதிய நேர மெகா தொடரை தொடங்கியவர்களில் ஒருவன் என்ற பெருமை எனக்கு உள்ளது. சின்னத்திரை தான் என்னை வளர்த்தது. நான் சின்னத்திரையில் சம்பாதித்ததால்தான் பெரியத்திரையில் ஏற்பட்ட கடன்களை கூட அடைக்க முடிந்தது. அந்த சின்னத்திரையையே நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டவனாக நினைக்கிறேன். அதே பாதையில் என் மகனையும் அனுப்பியிருக்கிறேன். அவருடைய பயணத்திலும் நீங்கள் அனைவரும் பங்கெடுத்து, அவருக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
நடிகர் பிரேம் பேசியதாவது..,
இந்த சீரிஸில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. இது எனக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பை அளித்த அஜய் சார், நவீன் சார், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த சீரிஸில் பணியாற்றும் போது அவர்கள் என்னை ஒரு கலைஞராக மட்டும் அல்லாமல், தங்களுடைய சகோதரனைப் போலவே பார்த்துக்கொண்டார்கள். அதற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். அதேபோல் என்னுடன் நடித்த அண்ணன் கனி, அண்ணன் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த குழு இனியும் பல நல்ல படைப்புகளை உருவாக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
நடிகர் சமுத்திரகனி பேசியதாவது..,
ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும். ‘தடயம்’ அந்த நிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்து பல விஷயங்களை சரி செய்த மாதிரி உணர்வைத் தருகிறது. அதுதான் இந்த வெற்றியின் மகிழ்ச்சி. நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். ஆனால் அந்த பயணத்தில் இவ்வளவு நேர்மையாக பாராட்டுகளை கேட்கும் வாய்ப்பு அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது. அவரும், அஜய், நவீன், KK சார் உள்ளிட்ட பலர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அனைவரின் உழைப்பும் சேர்ந்து தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு அப்பாவிடம் இருந்து பிள்ளைக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரிய விஷயம். அந்த அங்கீகாரம் அஜய்க்கு இவ்வளவு சீக்கிரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி இங்கேயே நிற்காமல் இன்னும் பல தூரம் எங்களை அழைத்து செல்லும் என்று நம்புகிறேன். இன்னும் பல வெற்றிகளை சேர்த்து மீண்டும் மீண்டும் சந்தித்து இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம். நன்றி.
‘தடயம்’ வெப் சீரிஸில் சமுத்திரகனி, சிவாதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1990களின் இறுதிக் கால தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள இந்த சீரிஸ், தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயலும் காவல் அதிகாரியின் விசாரணையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













