சற்று முன்

மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!   |    ‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்   |    150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |    பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ஸ்ருதிஹாசன் குரலில் ‘பவழ மல்லி’ – சாய் அபயங்கர் இசையில் புதிய பாடல்!   |    'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்   |    மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!   |    நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

அதர்வா நடிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் குருதி ஆட்டம்
Updated on : 04 August 2018

அதர்வா நடிப்பில் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் "குருதி ஆட்டம்". கடந்த வருடம் வெளி ஆன படங்களில் பெரிதும் பாராட்ட பட்ட படம் "8 தோட்டாக்கள்". அந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தமிழ் திரை உலகின் எதிர்கால இயக்குனர்களில் மிக முக்கியமானவராக வருவார் என்கிற கணிப்பும் ஏக மனதாகவே இருந்தது, இருக்கவும் செய்கிறது. அவருடைய அடுத்த படத்துக்கு "குருதி ஆட்டம்" என பெயரிட பட்டு உள்ளது. தமிழ் திரை உலகின் தற்போதைய இளம் கதாநாயகர்களில் உச்ச நிலைக்கு போக தகுதியானவர் என பலரும் போற்றும் அதர்வா இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ராக் போர்ட் என்டேர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் pictures சார்பில் ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை எளிமையான முறையில் நடந்தது.





" இந்த படம் முழுக்க, முழுக்க மதுரை மாநகரின் பின்னணியில் உருவாகும் படமாகும். Commercial மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் படம் இது. ஒரு வெற்றி படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும். நாளுக்கு நாள் தன்னுடைய கதாநாயகன்  அந்தஸ்த்தை உயர்த்தும் அதர்வா இந்த படத்தின் கதாநாயகன், அவருடைய முழு திறமைக்கும் தீனி போடும் படமாக "குருதி ஆட்டம்" அமையும்.கதாநாயகி தேர்வு நடைப் பெற்று கொண்டு இருக்கிறது. இந்த மாதத்தின் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும்"  என கூறினார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா