சற்று முன்

முனீஸ்காந்த் நடிக்கும் புதிய ஃபேண்டஸி காமெடி படம் – பூஜையுடன் தொடங்கியது   |    ரூ.50 கோடி வசூல் – 480 திரைகளில் வெற்றிகரமாக ஓடும் ‘தாய் கிழவி’   |    டார்க் சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் ‘மண்டவெட்டி’ – படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு   |    Insomniac’s Dream Creations தயாரிக்கும் புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பூஜையுடன் தொடங்கியது!   |    மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!   |    ‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்   |    150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |    பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ஸ்ருதிஹாசன் குரலில் ‘பவழ மல்லி’ – சாய் அபயங்கர் இசையில் புதிய பாடல்!   |    'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்   |    மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!   |    நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |   

சினிமா செய்திகள்

ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
Updated on : 05 August 2018

ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றியடைவது என்பது மிக அரிதாகவே நிகழ்கிறது. இந்த அரிய நிகழ்வு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் அரங்கேறியிருக்கிறது. ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத், சீயான் விக்ரம் மற்றும் இயக்குநர் ஹரியின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘சாமிஸ்கொயர் ’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டாகியிருக்கிறது.



இது குறித்து ஆடியோ தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலரிடம் கேட்டபோது,‘ ராக் ஸ்டார் டி எஸ் பியின் இசையில் வெளியாகும் தெலுங்கு பட பாடல்கள் எப்போதும் ஆல்பமாகத்தான் ஹிட்டாகின்றன. அதே போன்றதொரு மேஜிக்கை இவர் தமிழிலும் நிகழ்த்தியிருக்கிறார். இவர் இசையமைப்பில் வெளியான ‘சாமிஸ்கொயர் ’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.



‘சாமிஸ்கொயர் ’முதலில் வெளியான ‘அதிரூபனே...’ என்ற மெலோடி பாடலுக்கும். அதைத் தொடர்ந்து வெளியான ‘மிளகாபொடியே..’ என்ற பெப்பி நம்பருக்கும் பல மில்லியன் லைக்குகள் பெற்று இசையுலகை அதிரவைத்தது.



அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியான ‘டர்னக்கா..’ என்ற பாடலும், ‘புது மெட்ரோ ரயிலு..’ என்ற பாடலும் ஏகோபித்த ஆதரவை அள்ளியது. இந்த பாடலை எழுதியவர் வேறு யாருமில்லை நம்முடைய டிஎஸ்பி தான். தமிழில் இதுவரை அவர் பல பாடல்களில் வரிகளை எழுதியிருந்தாலும் முழு பாடலையும் எழுதியது இதுவே முதல்முறை. தெலுங்கில் தான் எழுதிய பாடலுக்கு சிறந்த பாடலாசிரியர் விருதை டிஎஸ்பி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இனி தமிழில் நிறைய பாடல்களில் டிஎஸ்பியின் எழுத்துக்களை பார்க்கலாம் என்கின்றது சினிமா வட்டாரம். 



அதேபோல் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்ட  அம்மா ஸ்பெஷல் பாடலான ‘அம்மா அம்மா..’  என்ற பாடலுக்கும் மில்லியன் கணக்கிலான லைக்குகள் கிடைத்து டிரெண்டிங்கில் இருக்கிறது.



அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆல்பமாக ஹிட்டான படங்களின் பட்டியலில் சாமிஸ்கொயரும் இடம்பெற்றிருக்கிறது என்பதை உறுதியாக சொல்லலாம்.’ என்றார்.



ரசிகர்களும், திரையுலகினரும் இதை ஆமோதிக்கிறார்கள்.

இதனிடையே ஆகஸ்ட் =2 ஆம் தேதி பிறந்த நாளைக் கொண்டாடிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு இந்த சாமிஸ்கொயர் படத்தின் பாடல்கள் ஆல்பமாக ஹிட்டானது அவருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதை அவரது அமெரிக்க இசைப்பயணம் மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்நிலையில் அவர் இந்த ஆண்டும் அமெரிக்காவில் இசை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.



ஆகஸ்ட் 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 1, 8, 16 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிலுள்ள முன்னணி நகரங்களில் ராக் ஸ்டாரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.



இதற்கான பயிற்சி மற்றும் ஒத்திகையில் முழு மூச்சாக ஈடுபட்டிருக்கும் தேவி ஸ்ரீபிரசாத்திடம்,‘ இந்த ஆண்டு நடைபெறும் இன்னிசை நிகழ்ச்சியில் புதிதாக என்ன செய்யவிருக்கிறீர்கள்? என்று கேட்டபோது,‘ அதை இப்போதே சொல்லமாட்டேன். தமிழ், தெலுங்கு படங்களிலிருந்து ரசிகர்கள் விரும்பும் பாடல்கள் இதில் இடம்பெறும். ஏனைய விசயங்கள் சஸ்பென்சாக இருப்பது தான் ரசிகர்களுக்கு திரில்லிங்காக இருக்கும்.’ என்றார்.



 ராக் ஸ்டார் டி எஸ் பியின் திரைப்பட பாடல்களில் இருக்கும் மியூசிக்கலி எமோஷன் அவருடைய ஸ்டேஜ் ஷோவிலும் இருக்கும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா