சற்று முன்
சினிமா செய்திகள்
மிகவிரைவில் வெளியாகவிருக்கும் தடம்
Updated on : 05 August 2018

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "குற்றம் 23" திரைப்படத்தை ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது "தடம்" எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், "தடம்" படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவினருக்கு காண்பிக்கப்பட்டு யு/ஏ (U/A) சான்றிதழ் பெறப்பட்டது. படத்தை தணிக்கை குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள்.
இப்படத்தின் இசை மற்றும் பட வெளியிடு தேதி மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
Director : Magizh Thirumeni
Produced By : Inder Kumar
Production Banner : Redhan – The Cinema People
Director Of Photography : Gopinath
Editing : Srikanth
Art Director : Amaran
Music : Arunraj
Lyrics : Madan Karky / Eknath
Stunt : Stunt Silva / Anbu & Arivu
Choreography : Dinesh
Production Controller : R P Balagopi & E Elangovan
Audiography : T Udhayakumar
Sound Designer : Suren & Alagiakoothan
Costume Designer : Prathista
Stills : Ajay Ramesh
Vfx : Prasad
Publicity Designs : Sasitharan
Costumer : P R Ganesan
Makeup : Ramachandran
Pro : Nikkil
சமீபத்திய செய்திகள்
நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்
நடிகர் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்றிருந்த போது திடீரென்று மயக்கமடைந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரை படக்குழுவினர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ரோபோ சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் ரோபோ சங்கர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் இன்று இரவு சுமார் 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு குறித்து அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் குறைப்பு சிகிச்சை மேற்கொண்டதால் மிகவும் மெலிந்து காணப்பட்டார். பிறகு அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் மீண்டும் பழையபடி உடல்நிலை தேறி வந்து படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது திடீரென்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!
ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தீயவர் குலை நடுங்க' திரைப்படத்தின் அதிரடி டீசர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், இன்று இப்படத்தின் டீசரை சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.
சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் என்பதை மையப்படுத்தும் இந்த க்ரைம் திரில்லர் படத்தின் டீசர், ஆக்சன் கிங் அர்ஜூனின் ஆக்சன் விஸ்வரூபத்தையும், மென்மையான ஐஸ்வர்யா ராஜேஷின் மர்மமிகு பாத்திரத்தையும் அழகாக வெளிப்படுத்துவதோடு, ஒரு விசாரணையை பரபர காட்சிகளுடன், விறுவிறுப்பான திரில்லராக காட்டி, படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. வெளியான வேகத்தில் இந்த டீசர் இணையம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
'ஆக்சன் கிங்' அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, பி எல் தேனப்பன், தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.
'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
தற்போது டீசர் பெரும். வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், படத்தை திரைக்கு கொண்டுவரும் பணிகளில் படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்
இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, “மா வந்தே” எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் உண்ணி முகுந்தன் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற நரேந்திர மோடி அவர்களின் அற்புதமான வாழ்க்கைப் பயணத்தைச் சித்தரிக்கிறது.
சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்றையும் உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஸ்ரீமதி ஹீராபென் மோடி அவர்களுடனான ஆழமான பந்தத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது.
சர்வதேச தரத்திலும், அற்புதமான VFX தொழில்நுட்பங்களுடனும், இந்தியாவின் முன்னணி நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. பான்-இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது.
ஊக்கமூட்டும் இந்த வாழ்க்கை வரலாறு, மறக்கமுடியாத திரை அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் உருவாகிறது.
'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!
என் அம்மாவின் பெயரில் என் மனதுக்கு நெருக்கமான 'கண்மணி அன்னதான விருந்து' இன்று தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுகள் எளியவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. அந்த பிம்பத்தை உடைத்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கண்மணி அன்னதான விருந்தின் நோக்கம். உணவு என்றும் எட்டாக்கனியாக இருக்கக்கூடாது. அது ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையை தர வேண்டும்.
இந்தப் பயணத்தை நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி. பல வகையான உணவுகளை அவர்கள் விரும்பி சுவைத்தது எனக்கு மனநிறைவாக இருந்தது.
உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் அனைவரின் பசியையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் இந்தப் பயணத்தை மனநிறவுடன் தொடர்வேன் என நம்புகிறேன்.
'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிஸ்'. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் பேசியதாவது, "படம் ஜாலியாக இருக்கும். நாங்களும் ஜாலியாக வேலை பார்த்தோம். தியேட்டரில் படம் பார்க்கும்போது உங்களுக்கும் பிடிக்கும்" என்றார்.
எடிட்டர் ஆர்.சி. பிரணவ், "இந்த வாய்ப்புக் கொடுத்த ராகுல் சாருக்கு நன்றி. இரண்டு வருடங்கள் இந்தப் படத்தில் ரொம்பவே ஜாலியாக வேலை பார்த்தோம். சதீஷ், கவின் எல்லோரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஃபேமிலி எண்டர்டெயினராக படம் உருவாகி இருக்கிறது" என்றார்.
கலை இயக்குநர் மோகனம் மகேந்திரன், "ஜாலியான டீமாக சேர்ந்து எல்லோரும் நல்ல படம் எடுத்திருக்கிறோம். எல்லோரும் 'தி பெஸ்ட்' கொடுத்திருக்கிறார்கள். அது டிரெய்லர் பார்க்கும்போதே உங்களுக்கு தெரிந்திருக்கும். படம் நிச்சயம் வெற்றி பெறும்".
நடிகர் ஷக்தி, "கவின் அண்ணாவுடன் படம் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்புக் கொடுத்த கவின் அண்ணா, சதீஷ் சாருக்கு நன்றி. படத்தில் சோஷியல் அவேர்னஸூம் செய்து இருக்கிறேன். அது படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். படக்குழுவினர் அனைவருடனும் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ஜாலியான கலர்ஃபுல்லான படமாக உருவாகி இருக்கிறது 'கிஸ்'. உங்கள் ஆதரவு தேவை" என்றார்.
நடிகை ப்ரீத்தி, "'கிஸ்' மூவி ஜாலியாக எடுக்கப்பட்ட படம். முழுக்க என்டர்டெயின்மென்ட்டாக இருக்கும். படம் முழுக்க சிரித்துக்கொண்டே இருப்பீர்கள். சதீஷ் மாஸ்டருடைய ஃபீமேல் வெர்ஷனாக தான் என்னுடைய கேரக்டர் படத்தில் இருக்கும். ஜென் மார்ட்டின் இசை அருமையாக இருக்கும். தியேட்டரில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.
நடிகர் மிர்ச்சி விஜய், "நானும் கவினும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். இப்போது ஒரு நண்பனாக அவருடன் சேர்ந்து பணிபுரிந்ததும் மகிழ்ச்சி. இன்னும் பல உயரங்கள் செல்ல வாழ்த்துக்கள். சதீஷ் அருமையாக படத்தை இயக்கியுள்ளார். படத்தில் பணிபுரிந்த எல்லோருமே சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். உங்கள் ஆரதவை கொடுங்கள்" என்றார்.
நடிகர் விடிவி கணேஷ், "தூக்கத்தில் கூட எதாவது சேட்டை செய்து கொண்டே தூங்கும் ஹைப்பரான நபர்தான் சதீஷ். நடிகர் விஜய் என்றால் சதீஷ்க்கு ரொம்பவும் பிடிக்கும். நெல்சன் ஒரு டைம் சொன்னால் அதற்கு முன்பே சதீஷ் இருந்தால் விஜய் ஷூட்டிங் ஸ்பாட் வந்துவிடுவார். அவர் செய்யும் சேஷ்டை எல்லாம் பார்த்து விஜய் சிரிப்பார். செட்டே கலகலப்பாக இருக்கும். 'பீஸ்ட்' படத்தில் சதீஷூடன் நான் நடித்த லிஃப்ட் சீன் தெலுங்கில் பார்த்துவிட்டு நிறைய ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். கிஸ் என்றதும் எனக்கு கிடைத்த முதல் முத்தம் தான் நியாபகம் வருகிறது. மகாபலிபுரம் கடற்கரையில் பிரெஞ்ச் பெண் ஒருவரிடம் கேட்டு வாங்கிய முத்தம். என் வாழ்க்கையில் அதை மறக்க மாட்டேன். படக்குழுவினர் எல்லோருமே ஜாலியாக வேலை பார்த்திருக்கிறார்கள். உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை"
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், "கவின் அண்ணாவுடன் மூன்றாவது படம் எனக்கு. டீமே ஜாலியாக இருந்தது. விடிவி சார், ப்ரீத்தி, தொழில்நுட்ப குழு என அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். கவின், சதீஷூக்கு வாழ்த்துக்கள்"
இயக்குநர் சதீஷ், " இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராகுல் சாருக்கு மிக்க நன்றி! 'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது. ஆனால், இந்த கதைக்கு 'கிஸ்' டைட்டில் தான் பொருத்தமாக இருக்கும் என அவரிடம் கேட்டோம். உடனே சம்மதித்தார். அவருக்கு நன்றி! கவினின் முதல் படத்திற்கு நான் கோரியோகிராப் செய்தேன். இயக்குநராக நான் அறிமுகமாகும் படத்தில் அவர் ஹீரோ. இது எனக்கு பெருமையான தருணம். ப்ரீத்தி, விடிவி சார் என எல்லோரும் பெஸ்ட்டாக இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. படம் பார்த்துவிட்டு சப்போர்ட் பண்ணுங்க".
நடிகர் கவின், " உதவி இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஆக்ஷன் மாஸ்டர், தயாரிப்பாளர் ராகுல் என இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. படத்தின் முதல் சிங்கிள் பாடி தந்த அனிருத் சாருக்கும் நன்றி. 'என்னாலே...' பாடல் எழுதி தந்த விக்னேஷ் சிவன் அண்ணன், விஷ்ணு எடவன், அருண் ராஜா காமராஜா, வாய்ஸ் ஓவர் தந்த விஜய் சேதுபதி சார் எல்லோருக்கும் நன்றி. பிஸி ஷெட்யூல்க்கு மத்தியில் இந்த நிகழ்வுக்கு நேரம் ஒதுக்கி வந்த விடிவி சார், ப்ரீத்திக்கு நன்றி. சதீஷ் இயக்குநராக அடுத்தடுத்த உயரங்கள் அடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஜென் இசை இந்த படத்திற்கு பெரிய பலம். அவர் அடுத்தடுத்த உயரங்கள் செல்வார். செப்டம்பர் 19 அன்று படம் ரிலீஸ் ஆகிறது. நிச்சயம் குடும்பத்தோடு நீங்கள் பார்த்து என்ஜாய் செய்யலாம்" என்றார்.
அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!
தனது சூப்பர் ஹீரோ இமேஜ்க்கு ஏற்ப, தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வருகிறார் தேஜா சஜ்ஜா. தயாரிப்பாளர்களுக்கு மாபெரும் லாபத்தைத் தரும் விதமாக, அவர் நடித்த "மிராய்" திரைப்படம் தற்போது சென்சேஷனல் ஹிட்டாகி வருகிறது. கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில், டி.ஜி. விஸ்வ பிரசாத் – கீர்த்தி பிரசாத் தயாரிப்பில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரில் உருவான இந்த படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.
"மிராய்" வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடி வர்த்தக வசூலைத் தாண்டியுள்ளது. ஹனுமேனுக்கு பிறகு, இந்த மைல்கல்லை எட்டிய தேஜாவின் இரண்டாவது படமாகும். புக் மை ஷோ பிளாட்ஃபார்மில் தொடர்ந்து இப்படம் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
அத்துடன், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் $2 மில்லியன் கிளப்பைத் தாண்டியுள்ளது. ஹனுமேனுக்குப் பிறகு, இந்த சாதனையை எட்டிய தேஜாவின் இரண்டாவது படம் இதுவாகும்.
சவாலான ஆக்ஷன் கதாப்பாத்திரத்தில் மீண்டும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள தேஜா சஜ்ஜாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. வில்லனாக நடித்த மனோஜ் மாஞ்சு மற்றும் தாயாக நடித்த ஷ்ரேயா சரண் ஆகியோரும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர். கதாநாயகியாக நடித்த ரித்திகா நாயக், தனது வலுவான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு – மூன்று முக்கிய பங்குகளை ஒரே நேரத்தில் வகித்த கார்த்திக் கட்டமனேனியின் உழைப்பு இப்போது மிகப்பெரிய வெற்றியாக மாறியுள்ளது. தயாரிப்பாளர்கள் தரத்தில் உலகத் தரத்திற்கு இணையான படைப்பை வழங்கியுள்ளனர். இசையமைப்பாளர் கௌரா ஹரியின் அதிரடி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பெரிய திரையில் காண வேண்டிய கதை சொல்லலும், கண்கவர் காட்சிகளும் கொண்ட மிராய், மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் ரசிகர்களை ஈர்க்கிறது. மேலும், இரண்டாவது வாரத்தில் பெரிய போட்டி எதுவும் இல்லாததால், வரும் நாட்களில் படத்தின் வசூல் சாதனைகள் இன்னும் அதிகரிக்கும் என வணிக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் கண்ணா ரவி முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ், வலுவான உணர்ச்சி பூர்வமான கதை சொல்லலையும், ஆழமான நடிப்பையும் இணைக்கும் சக்திவாய்ந்த டிராமாவாக உருவாகியுள்ளது.
மண் சார்ந்த பாரம்பரியக் கதைகளை தைரியமாக சொல்லும் முயற்சியில் தொடர்ந்து முன்னோடியாக பணியாற்றி வரும் ZEE5, வேடுவன் மூலம் அத்தகைய முயற்சியை மீண்டும் மேற்கொண்டுள்ளது. பல அடுக்குகள் கொண்ட மனித உணர்வுகள், எது சரி, எது தவறு என்பதிலான சிக்கல்கள், கடமைக்காக தரப்படும் தனிப்பட்ட விலை போன்ற அம்சங்களை பிரதிபலிக்கும் இந்த சீரிஸ், ஒரு சாதாரண டிராமா மட்டுமல்ல, வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளும் அதன் விளைவுகளையும் ஆழமாக சித்தரிக்கும் ஒரு புது அனுபவமாக இருக்கும்.
“வேடுவன்” சீரிஸ் பற்றி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட கண்ணா ரவி கூறுகையில்..,
“வேடுவன் கதை சொன்ன அந்த நொடியிலேயே இது எனக்கு மிக முக்கியமான படைப்பாக இருக்குமெனத் தோன்றியது. இது ஒரே ஒரு மனிதனின் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல, அவன் எடுக்கும் முடிவுகள், அதன் விளைவுகள், சரி-தவறு இடையேயான மெல்லிய கோடு ஆகியவற்றை ஆராயும் பயணமும்கூட. நடிகராக, இந்த பாத்திரம் என்னை என் கம்ஃபர்ட் ஸோனுக்கு வெளியே கொண்டு சென்று, கதாபாத்திரத்தில் முழுமையாக வாழ வைத்தது. வெடுவன் ஒரு சீரிஸ் மட்டும் அல்ல, நீண்ட நாட்கள் மனதில் நிற்கும் ஒரு அனுபவமாக இருக்கும்.”
“வேடுவன்” சீரிஸை வரும் அக்டோபர் 10 முதல், உங்கள் ZEE5 இல் கண்டுகளியுங்கள் !
தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் “காட்ஸ்ஜில்லா” திரைப்படம்; புதுவிதமான கற்பனையுடன் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு “ரோம்-காம்” வகை. இப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் ‘சரண்டர்’ என்ற படம் மூலம் புகழ் பெற்ற தர்ஷன், மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இயக்குனர் மோகன் குரு செல்வா இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கிய “காட்ஸ்ஜில்லா” திரைப்படம்;சமீபத்தில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டை பெற்ற “பிளாக் மெயில்” படத்தின் வெற்றியை தொடர்ந்து வித்யாசமான “ரோம் காம்” படமான “காட்ஸ் ஜில்லா” படத்தை தயாரிக்கும் சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஜி. தனஞ்ஜெயன் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ். பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் வெளியான 'சரண்டர்' படத்திற்காக நல்ல பாராட்டுகளைப் பெற்ற தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் மோகன் குரு செல்வா இயக்கத்தில் ரோம்-காம் படமான “காட்ஸ் ஜில்லா” படத்தை தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் பூஜை செப்டம்பர் 15ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழிவினர், மற்றும் சினிமா துறையை சேர்ந்த பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்: தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு , FEFSI தலைவர் R.K. செல்வமணி, இயக்குனர் விஜய், இயக்குனர் சசி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ்.மோகன் குரு செல்வா இயக்கத்தில் உருவாகும் “காட்ஸ்ஜில்லா” படமானது, ரோம்-காம், புராணக் கற்பனையும், நகைச்சுவையும், காதலையும் ஒருங்கிணைக்கும் வித்தியாசமான கதை சொல்லலாக இருக்கும்.
காதலில் தோல்வியுற்ற இளைஞன் ஒருவரின் வாழ்க்கையில் தெய்வீக தலையீடு நிகழ்வதன் மூலம் சுயஅறிவு, மீட்பு மற்றும் காதலை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் மையக்கரு என்று படக்குழு தெரிவித்துள்ளது.
தனித்துவமான திரைக்கதைக்கு பெயர் பெற்ற இயக்குநர் மோகன் குருசெல்வா, பொழுதுபோக்கும் உணர்ச்சியும் கலந்த திரைப்படத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.வானுலக கற்பனைக் காட்சிகளும், புவியுலக நிறமிகு காட்சிகளும், ஆன்மீக இசையும், தத்துவம் கலந்த நகைச்சுவையும் இணைந்து, “காட்ஸ்ஜில்லா” இன்றைய இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் விதமாகவும், குடும்பங்கள் ரசிக்கக்கூடிய விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த பூஜையுடன் முதன்மை படப்பிடிப்பு துவங்கியுள்ளதோடு, “காட்ஸ்ஜில்லா” புராணம், கற்பனை, நவீன காதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் புதுமையான திரை அனுபவமாக விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!
உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ள '18 மைல்ஸ்' கடந்த சில வாரங்களாகவே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள '18 மைல்ஸ்'-ல் இருந்து 14 நிமிடங்கள் கொண்ட புரோலாகை சமீபத்தில் திங்க் மியூசிக் வழங்கியது. இது '18 மைல்ஸ்' மீதான எதிர்பார்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இயக்குநர் மணி ரத்னம் '18 மைல்ஸ்' பார்த்துவிட்டு ஒட்டுமொத்த குழுவினருக்கும் தன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பகிர்ந்து கொண்டதாவது, "இயக்குநர் மணி ரத்னம் சார் கொடுத்த பாராட்ட எங்கள் அணியில் உள்ள அனைவருக்குமே மறக்க முடியாதது. மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் புரோலாக் திரையிட்டு காட்டும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததாக மணி சார் பாராட்டினார். கதாநாயகி மிர்னாவில் இருந்து என்னுடைய உதவியாளர் அசோக், எடிட்டர் நாஷ் என அணியில் இருந்த எல்லோரையும் தனித்தனியாக பாராட்டினார். அணியில் ஒவ்வொருவருடைய உழைப்பும் சிறப்பாக உள்ளது என்றார் எங்களுக்கு, இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். நிர்வாக தயாரிப்பாளர் சிவானந்த் சாரும் எங்களை ஊக்கப்படுத்தினார்" என்றார்.
மணி ரத்னம் அவர்களின் 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படம், இயக்குநராக இன்னும் மேம்படுத்திக் கொள்ள தனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக அமைந்தது என்றார் இயக்குநர் சதீஷ் செல்வகுமார். கடல் மற்றும் எல்லைகளைக் கடந்த உணர்வுகளை அழகியலோடு காட்டவுள்ளது '18 மைல்ஸ்'. தற்போது, இயக்குநர் மணி ரத்னமிடம் இருந்தும் பாராட்டு பெற்றுள்ளது.
சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!
இளைமை, சாதுர்யம் மற்றும் நடிப்புத் திறமை ஆகியவற்றை ஒருங்கே பெற்றவர் நடிகை சான்யா ஐயர். அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் திரை வசீகரத்துடன் தென்னிந்திய சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்.
விடாமுயற்சி மற்றும் நடிப்பு மீதான ஆர்வத்துடன் கன்னட சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேலாக தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். 'நம் அம்மா ஷாரதே', 'அரசி', 'புட்டகௌரி மதுவே' போன்ற தொடர்களில் குழந்தை நட்சத்திரமாகவும், 'கஜா', 'முகபுதா' மற்றும் 'விமுக்தி' போன்ற படங்களிலும் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். கன்னட பிக் பாஸ் ஓடிடி சீசன் 1 வெற்றியாளராக அவர் பெற்ற வெற்றியும், 2024 ஆம் ஆண்டில் வெளியான இந்திரஜித் லங்கேஷின் கௌரி திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்ததும் இன்று இந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் சான்யா.
இதுகுறித்து சான்யா பகிர்ந்து கொண்டதாவது, "கன்னட மொழியில் 2025 ஆம் வருடத்திற்கான சைமாவின் நம்பிக்கை நட்சத்திரம் விருது பெற்றிருப்பது பெருமையான விஷயம். இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த சைமாவின் நடுவர் குழுவினர், என்மீது அளவுக்கடந்த அன்பு செலுத்தும் ரசிகர்கள், ஊடகம், என்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி! நிச்சயம் கலைக்கும் சினிமா உலகிற்கும் என்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை தருவேன்" என்றார்.
இந்த விருது சான்யாவின் திறமைக்காக மட்டுமல்லாது அவரின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான அங்கீகாரமாகவும் அமைந்துள்ளது. நமது பாரம்பரிய மற்றும் சமகால நடனத்தில் வலுவான அடித்தளம் கொண்ட நடிகை சான்யா நம்பிக்கை நட்சத்திரமாக மட்டுமல்லாது கலாச்சார முகமாகவும் இருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடிப்பில் புதிய பரிமாணத்தைத் தொடும் சான்யா இந்திய சினிமாவின் முகமாவும் இருக்கிறார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா