சற்று முன்

ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |    தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியாகும் 'படை தலைவன்'   |    புதிய கோணத்தில் ஆணவக் கொலையை அணுகும் 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படம்!   |    விக்ரமுக்கு 'சேது' போல உதயாவுக்கு 'அக்யூஸ்ட்' அமையும் - ஆர்.கே. செல்வமணி   |    சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது!   |    'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் கத்தார் அரசு விருதை வென்று சாதனை!   |    'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது!   |    பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது   |   

சினிமா செய்திகள்

என்னை அறிந்தால்... லாபமா, சராசரி வியாபாரமா?
Updated on : 11 February 2015

என்னை அறிந்தால் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து ஒருவழியாக ஓய்ந்துள்ளன. இப்போது படத்தின் பிஸினஸ் பற்றி பலரும் பலவிதமாக எழுத ஆரம்பித்துள்ளனர். சிலர் படம் பிரமாதமான வெற்றி என்றும், சிலர் அப்படியெல்லாம் இல்லை... சராசரிதான் என்றும் கூறி வருகின்றனர். தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் இதுபற்றி எதுவும் கூறாமல் அமைதி காக்கிறார். அவர் எப்போதுமே அப்படித்தான். பெரிய வெற்றி என்றாலும், தோல்வி என்றாலும் மவுனம்தான் அவர் பதில். சரி படம் உண்மையில் எப்படிப் போகிறது? நன்றாகவே ஓடுகிறது. வசூலும் திருப்தியாக உள்ளது. என்னை அறிந்தால் படம், வெளியாகி ஒரு வாரம் முடிந்த நிலையில் ரூ 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது மொத்தமாக. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ 40 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட்டை வைத்துப் பார்க்கும்போது, இது உண்மையிலேயே நல்ல வசூல்தான். வரி போக ரூ 28 கோடி வரை கிடைத்திருக்கிறது. பிற மாநிலங்களில் கேரளா, கர்நாடகாவில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் அமெரிக்காவில் 4 லட்சம் டாலருக்கு மேல் வசூலித்துள்ளது இந்தப் படம். மொத்தமாக ரூ 60 கோடிக்கும் மேல் வசூலித்து, டீசன்டான வெற்றியைப் பெற்றுள்ளது என்னை அறிந்தால். தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் சந்தோஷமாக அஜீத்தின் அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா