சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

பிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை
Updated on : 15 August 2018

பிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை. 83 world cup, என் டி ஆர் சுய சரிதை ஆகிய படங்களை தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படத்தை தயாரிக்கிறது



இந்திய அரசியல் வானில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தலைவி இவர். ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக அவர் சாதித்த சாதனைகள் ஏராளம். அவருடைய சுய சரிதையை படமாக்குவத்தில் மிகுந்த பெருமை கொள்வதாக கூறுகின்றனர் vibri மீடியா நிறுவனத்தினர்.



"டாக்டர் ஜெ ஜெயலலிதா மேடம் தேசிய அளவில் பிரசித்தி பெற்ற பிராந்திய தலைவர்களில் முக்கியமானவர்.உலகெங்கும் உள்ள பெண்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம்.திரை துறையிலும்,அரசியலிலும் அவர் புரிந்த சாதனைகளுக்கு இந்த படத்தை சமர்பிக்கிறோம்.அவர் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த படத்தை துவக்க இருக்கிறோம். அன்றே first look கூட வெளியிட இருக்கிறோம்." என்கிறார் vibri மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிருந்தா பிரசாத்.



தமிழில் பல்வேறு வெற்றி படங்களை தந்த இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகிறது.



"எங்களது vibri நிறுவனத்துக்கு சுய சரிதைகளை படமாக்குவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இந்த கதைக்கான pre production பணிகளில் இயக்குனர் விஜய் ஈடுபட்டு வருகிறார்" என்கிறாய் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி. தென்னிந்தியாவின் பிரதான நட்சத்திரங்களுடன், பிரபல பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.



Vibri media நிறுவனத்தினருக்கு இந்த வருடம் முக்கியமான வருடமாகும். பல்வேறு வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிப்ப்பதோடு,83 உலக கோப்பை என்கிற ஹிந்தி படத்தையும் கபீர் கான் இயக்கத்தில் , ரன்வீர் சிங் கபில்தேவ் வேடத்தில் நடிக்க தயாரிக்கும் இந்த நிறுவனம், "என் டி ஆர் சுய சரிதை" திரைப்படத்தை பாலகிருஷ்ணா நடிக்க, கிரிஷ் இயக்கத்தில தயாரிக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய அனைத்து படங்களும் 2019 ஆம் ஆண்டு வெளி வரும் என்பதே உற்சாகமான சேதி.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா