சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

நவீன் இயக்கத்தில் அம்மா creations தயாரிக்கும் 23 ஆவது படம் அக்னி சிறகுகள்
Updated on : 02 November 2018

தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை தக்க வைத்து இருக்கும்  நிறுவனமான அம்மா creations தயாரிக்கும் 23ஆவது திரைப் படத்தை "மூடர் கூடம்" நவீன் இயக்க, விஜய் ஆண்டனி நடிக்க உள்ளார். அர்ஜுன் ரெட்டி திரைப் படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் இடையே மிக பிரபலமான ஷாலினி பாண்டே இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இவர்களுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் அருண் விஜய். பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு,சென்றாயன் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த படத்துக்கு அக்னி சிறகுகள்" என்ற தலைப்பு இடப்பட்டு உள்ளது. 



கே ஏ பாட்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் ஷங்கர் இசை அமைக்க, நவீன் கதை, தவிர திரைக்கதை அமைத்து , வசனம் இயற்றி, இயக்கும் இந்த படம் ஒரு action-த்ரில்லர் படம் என்று கூறுகிறார் இயக்குனர் நவீன். 



"அக்னி சிறகுகள்" என்கிற இந்த தலைப்பு எங்களுக்கு கொடுக்கும் உத்வேகம் விவரிக்க முடியாதது.  தலைப்பு தந்த  வீரியம் படம் முழுக்க வெளிப்படும். விஜய் ஆண்டனிக்கென்றே என்று பிரத்தியேகமாக செய்த கதை இல்லை இது. கதை உருவான பிறகுதான் இந்த கதாபாத்திரத்துக்கு விஜய் ஆண்டனி மட்டுமே பொருந்துவார் என தோன்றியது. அம்மா creations நிறுவனத்துக்கு என்று ஒரு படம் இயக்குவது ஒவ்வொரு இயக்குனருக்கும் பெருமையே. நட்சத்திர தேர்வு, கதை கள தேர்வு , என எல்லாவற்றிலும் தயாரிப்பாளர் டி சிவா சாருடைய பங்களிப்பு அதிகம். அருண் விஜய் இந்த படத்துக்கு பிறகு  தமிழ் திரை உலகில் தனக்கென்று தனி இடத்தை நிர்ணயம் செய்து கொள்வார். என்னுடன் தொடர்ந்து பணியாற்றும் அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களும் மீண்டும் இந்த  படத்தில் என்னுடன் இணைகின்றனர்.தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும், கொல்கத்தா மற்றும் கோவா ஆகிய இடங்களிலும் நடக்க உள்ளது.பிரத்தியேகமாக சண்டை காட்சிகள் வெளி நாட்டில் படமாக்கப்பட உள்ளது என்பது குறிப்புடத்தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது " என்றார் இயக்குனர் நவீன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா