சற்று முன்

சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |   

சினிமா செய்திகள்

யோகிபாபு எமனாக நடிக்கும் தர்மபிரபு முழுக்க முழுக்க நகைச்சுவை படம்
Updated on : 03 November 2018

ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் “தர்மபிரபு”. ஏற்கனவே நாணயம், கள்வனின் காதலி, இராமேஸ்வரம் மற்றும் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த இவர் பல படங்களை தமிழ்நாடு உரிமை பெற்று ரிலீஸ் செய்தும் உள்ளார். மேலும் 100-க்கும் அதிகமான படங்களின் வெளிநாட்டு மட்டும் சேட்டிலைட் உரிமையும் வாங்கி வியாபாரம் செய்வது என்று சுமார் 18 வருடம் அனுபவம் பெற்றவராக , முதன்முதலாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.



இப்படத்தை முத்துகுமரன் இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் ஏற்கனவே விமல் நடித்து

 வரும் ‘கன்னிராசி’ படத்தை இயக்கியுள்ளார். அப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இப்படத்தை 2-வது படமாக இயக்குகிறார்.



எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அது வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமனுக்கு போட்டி போடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார்கள்.... தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்பதே கதை.



இந்த கதையை கேட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிரிக்கத்தான் தோன்றும். அதுவும், சமீபத்தில் தன் உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும், குரல் வளத்தாலும் பார்த்த உடன் அனைவரையும் தன் பக்கம் ரசிகர்களாக மாற்றி கொண்டிருப்பவர் யோகிபாபு. இவர் திரையில் வந்தாலே சிரிக்க தோன்றுகிறது. அப்படிப்பட்ட இவர் இந்த எமன் கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளது படத்திற்கு மிக பெரிய பலம். நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் கருணாகரனும் நடிப்பது மிக பலம் வாய்ந்த கூட்டணியாக அமைந்துள்ளது.



இப்படத்திற்காக ஸ்டூடியோவில் பல ‘செட்’டுகள் அமைக்கப்படுகிறது. முக்கியமாக எமலோகம் செட் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இதற்காக கலை இயக்குநர் C.S.பாலசந்தர் அரங்க அமைப்பிற்க்கான  வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.



டிசம்பர் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும். சில பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது.



இசை : ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு : மகேஸ் முத்துசாமி

படத்தொகுப்பு : சான் லோகேஷ்

பாடல்கள் : யுகபாரதி

நிர்வாக தயாரிப்பு : ராஜா செந்தில்

தயாரிப்பு : P.ரங்கநாதன்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா