சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

2018-ம் ஆண்டின் திருமதி சென்னையை தேர்ந்தெடுப்பதற்கான சமையல் ராணி போட்டி
Updated on : 12 November 2018

2018-ம் ஆண்டின் திருமதி சென்னையை தேர்ந்தெடுப்பதற்கான சமையல் ராணி போட்டி சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது. திருமணமான பெண்களின் திறமைகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்கும் வகையில் திருமதி சென்னை போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 6 வாரங்கள் நடைபெறும் போட்டிக்கான போட்டியாளர் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது.



 டிசம்பர் 14-ம் தேதி சென்னை லீலா பேலஸில் நடைபெறும் இறுதிச்சுற்றில் திருமதி சென்னை தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் பிரபலங்கள், வல்லுனர்கள் பங்கேற்று வெற்றியாளரை தேர்ந்தெடுக்க உள்ளனர். 



முதல் 25 இடங்களைப் பிடித்த போட்டியாளர்கள் ஆரோக்கியம், திறமை, பொது அறிவு ஆகியவற்றில் சோதிக்கப்படுவார்கள். பன்முகத் திறமை பெற்ற போட்டியாளரே திருமதி சென்னையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மகுடம் சூட்டப்பட்டுவார். 



திருமதி சென்னையை தேர்ந்தெடுப்பதற்கான சமையல் ராணி சுற்று சென்னை சேத்துப்பட்டு போஷ் அரங்கில் ஞாயிறு அன்று நடைபெற்றது. சர்வதேச சமையல் கலை வல்லுனர் திரு போக்டன் மக்சிமோவிச் மற்றும் பிரபல 

சமையல் கலைஞர் திருமதி மல்லிகா பத்ரிநாத் பங்கேற்று போட்டியாளர்களுக்கு சமையல் கலை குறித்த சிறப்புகளை எடுத்துரைத்தனர். உணவை சுவையாக தயாரிப்பதற்கும்  அழகாக பரிமாறுவதற்கும் ஆலோசனைகளை வழங்கினர். 

போட்டியின் இறுதியில் பிரசித்திப்பெற்ற இத்தாலிய பிரஸ்தாவை தங்களுடைய பாணியில் போட்டியாளர்கள் பரிமாறினார்கள். 



திருமதிகள்  சமைத்த உணவுகளை விருந்தினர்களும், பார்வையாளர்களும் சுவைத்து பாராட்டு தெரிவித்தார்கள். 



திருமதி சென்னை பற்றிய கூடுதல் தகவல்களை அறிய www.mrschennai.com என்ற வலைத்தளத்திற்குள் செல்லுங்கள்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா