சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

பிரகாஷ்ராஜ் மற்றும் ரேவதியின் காதலையும் நட்பையும் காட்டும் அழியாத கோலங்கள் 2
Updated on : 12 November 2018

திரையுலகை கெளரவப் படுத்த அந்தந்த கால கட்டங்களில் ஒவ்வொரு படமாக வரிசை காட்டி வெற்றிக் கொடி நாட்டி இருக்கிறது.



 



நெஞ்சில் ஓர் ஆலயம், அலைகள் ஓய்வதில்லை, காதல் கோட்டை,  புதுவசந்தம், நட்புக்காக, 96  என்று காதலுக்கும் நட்புக்கும் மகுடம் சூட்டிய பல படங்கள் உண்டு. இந்த வரிசையில் உள்ள படங்களை பட்டியலிட்டால் வெகு நீளமாகும்.



 



சமீபத்தில் அழியாத கோலங்கள் 2 படத்தின் சிறப்பு காட்சிக்காக அழைக்கப் பட்டேன்.



 



நாற்பதை கடந்தவர்கள் மட்டுமே திரையில் தெரிவார்கள். அவர்களை வைத்து எந்த மாதிரியான வித்தியாசத்தை காதலில் காட்டி விட முடியும் என்கிற அலட்சியத்துடன் தான் உட்கார்ந்தேன்.



 



டைட்டில் ஓட ஆரம்பித்ததும் திரையில் மின்னிய பெயர்களில் கை தட்ட எந்த பெயருமே இல்லை. இசையமைப்பாளர் காமிராமேன் இயக்குனர் யாருமே பெரிய ஆட்கள் இல்லை.



 



படம் ஆரம்பித்தது. அர்ச்சனா தெரிந்தார். அவார்ட் படம் மாதிரியான ஒரு தோற்றம் தெரிந்தது.



 



மெதுவாக ஆரம்பித்த படம். நட்பையும் காதலையும் இதை விட புனித படுத்தி விட முடியாது என்கிற மாதிரியான ஒரு அழுத்தத்தை மனசுக்குள் ஏற்படுத்தியது.



 



பிரகாஷ்ராஜ் வந்தார். நடித்தார். என்று சொல்ல முடியாது. எழுத்தாளர் கதாபாத்திரத்தில் வாழ்ந்து விட்டார்.



 



போலீஸ் வேடத்தில் நாசர், காக்கி சட்டையின் கடுமையையும், உள்ளத்தின் ஈரத்தையும் பிரதிபலித்து விட்டார். 



 



ஒரு பெண்ணின் பெருமையையும் பொறுமையையும் இவரை விட யாரால் பிரதிபலிக்க முடியும் என்கிற ரேவதி கதாபாத்திரம்.



 



இப்படி நான்கு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து திரையின் நான்கு பக்கங்களையும் கெளரவப் படுத்தி இருக்கிறார் இயக்குனர் M.R.பாரதி.



 



அடிதடி இல்லை, குத்து பாட்டு இல்லை, காமெடி இல்லை, டுயட் இல்லை. 



 



இதெல்லாம் தான் கமர்ஷியல் பார்முலா என்றால்...



 



இது எதுவும் இல்லாமல் இரண்டு மணி நேரம் திரையை நோக்கியே நம் கண்கள் என்றால் அதிசயம் தானே!



 



அந்த அதிசயத்தை அழியாத கோலங்கள்2 நிகழ்த்தி இருக்கிறது.



 



கொண்டாட வேண்டிய படமே இது



 



அர்ச்சனா ரேவதி பிரகாஷ்ராஜ் நாசர் இயக்குனர் M.R.பாரதி ஆகியோர் விருதுகளுக்கு தயாராக இருக்கட்டும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா