சற்று முன்

சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |   

சினிமா செய்திகள்

உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது - தீர்ப்புகள் விற்கப்படும்
Updated on : 17 November 2018

'தீர்ப்புகள் விற்கப்படும்' என்ற புதிய படம் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜை நமக்கு காட்டும். அவர் விதிகளை மீறி, மரபுகளை உடைத்து, இந்தியாவின் மகள்களான பெண்களுக்காக போராட இருக்கிறார்.

 

ஹனிபீ கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் கூறும்போது, "சத்யராஜ் சாரை எங்கள் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அனைவருக்கும் பரவக்கூடிய நேர்மறையான சக்தி அவருக்குள் இருக்கிறது. இந்த ஸ்கிரிப்ட் அவரை இந்த படத்தில் கோரியது. இயக்குனர் தீரஜ் இந்த கதையை என்னிடம் கூறியபோது, சத்யராஜ் சார் மட்டுமே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என நாங்கள் உறுதியாக நம்பினோம். அனத அளவு ஒரு மெசேஜ் இந்த படத்தில் இருக்கிறது, அதை சொல்லும் அளவுக்கான சக்தி அவருக்கு இருக்கிறது. ஒரு தயாரிப்பாளராக நான் இந்த படத்தை தமிழில் தயாரிக்க  விரும்பிய காரணம், இந்த படம் மிகப்பெரிய அளவில் சென்று சேரும் என்று உறுதியாக நம்புவது தான். மேலும், தமிழ்நாடு எப்போதும் சமூக நீதியை நிலை நிறுத்தும். டிசம்பர் மத்தியில் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறோம்" என்றார். 



இயக்குனர் தீரன் கூறும்போது, "என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்த தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் சாருக்கு நன்றி. ஒரு தைரியமான நடிகரையும் தாண்டி இந்த திரைக்கதை ஒரு தைரியமான தயாரிப்பாளரை கோரியது. சஜீவ் மீராசாஹிப் சார் ஒரு தயாரிப்பாளராகவும், சத்யராஜ் சார் ஒரு ஹீரோவாகவும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர். படத்தின் கதாநாயகன் சமுதாய நீதியின் போர்வீரன். சத்யராஜ் சார் சமரசமற்ற மனோபாவம் கொண்ட ஒரு மனிதர் என்ற ரீதியில் ஒரே தேர்வாக இருந்தார். நான் அவரது எளிமை, அவரது முயற்சியால் ஈர்க்கப்பட்டேன். எங்கள் படத்தின் தலைப்பை அறிவிப்பதற்கு ஒரு நிஜ கள போராளி தேவைப்பட்டார் உடனே சமூக ஆர்வலர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை  படத்தின் தலைப்பை வெளியிட முடிவு செய்தோம். "கருடவேகா" (தெலுங்கு) புகழ்  ஒளிப்பதிவாளர் ஆஞ்சி ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாத் எஸ்.என் (யாமிருக்க பயமே மற்றும் காட்டேரி) இசையமைக்கிறார். எடிட்டர் ரூபன் உதவியாளர் சரத் எடிட்டராக அறிமுகமாகிறார். சுரேஷ் கல்லெரி (குட்டி புலி, ஜெயில்) கலை இயக்குனராகவும், நிஹிதா வின்சென்ட் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.



தீரன் மேலும் கூறும்போது, "தீர்ப்புகள் விற்கப்படும்" உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது. சமூக விஷயங்களை உள்ளடக்கிய ஒரு தரமான பொழுதுபோக்கு படத்தை வழங்கும் எங்கள் நோக்கம் இந்த ஆக்‌ஷன் திரில்லர் படத்தின் மூலம் தெரிய வரும். இந்த படம் முழுக்க ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் "என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா