சற்று முன்

சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |   

சினிமா செய்திகள்

சீதக்காதி படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகும் சுனில்!
Updated on : 20 November 2018

சந்தேகத்திற்கு இடமின்றி, விஜய் சேதுபதி தனது சீதக்காதி படம் மூலம் அனைவரையும் தனது உலகிற்கு கொண்டு வந்திருக்கிறார். படத்தில் மிகப்பெரும் நடிகர்கள் நடித்துள்ளனர், அவர்களின் கதாபாத்திரங்களை வரிசையாக வெளியிட்டு, ஒரு ஆழமான நுண்ணறிவை ரசிகர்களுக்கு வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. டிசம்பர் 20 அன்று உலகமெங்கும் வெளியிட  திட்டமிடப்பட்டுள்ள இந்த நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை கொண்ட  படத்தில் வில்லனாக, இதுவரை அறியப்படாத ஒரு நடிகர் நடிப்பது வியப்பில் ஆழ்த்தியள்ளது. ஆம், நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில், இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.



"உண்மையில், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை கண்டுபிடிப்பது மிகப்பெரிய ஒரு சவாலாக இருந்தது. இது கதாபாத்திரத்தின் இயல்பு அதற்கு முக்கிய காரணம். திரைக்கதையை எழுதும்போதே, இந்த கதாபாத்திரம் வழக்கமான ஒன்றாக இல்லாமல், புதுமையாக இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வை இருந்தது. இந்த கதாபாத்திரம் உங்களை வெறுப்புக்கு ஆளாக்காமல், சிறு புன்னகைக்கு ஆட்படுத்தும். தோற்றத்தை பொறுத்தவரை சில அசாதாரண தேர்வுகளை செய்தோம். இந்த கதாபாத்திரத்துக்கு நாங்கள் சில பிரபலமான பெயர்களை கூட பரிசீலனை செய்தோம். அவர்களுக்கு கதாபாத்திரம் பிடித்திருந்தாலும் அவர்களது கால சூழலால் இதை செய்ய முடியவில்லை. ஒரு எதிர்பாராத திருப்புமுனையாக  நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில் அவர்களை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தேன். உடனடியாக என் வில்லனை அங்கு கண்டேன். ஆடிஷன் செய்ய அவருக்கு தயக்கம் இருந்தது. இறுதியில் அந்த முயற்சியை மேற்கொண்டார். அந்த கதாபாத்திரத்தில் பொருந்தினார். குறுகிய கால நடிப்பு பயிற்சியோடு இந்த படத்துக்குள் வந்தார்.  ரசிகர்கள் படம் முடிந்து போகும்போது சீதக்காதி (விஜய் சேதுபதி) கதாபாத்திரத்தை மட்டுமல்லாமல் இந்த வில்லன் கதாபாத்திரத்தையும் நினைத்துக் கொள்வார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பக்ஸ் கதாபாத்திரம் அளவுக்கு இந்த கதாபாத்திரமும் இருக்கும், பேசப்படும் என்றார் இயக்குனர் பாலாஜி தரணீதரன். 



பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் இந்த சீதக்காதி படத்தை தயாரித்திருக்கிறது. ஏற்கனவே விஜய் சேதுபதியின் தோற்றம் மூலம் படத்தின் மீதான நமது ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் முதல் சிங்கிள் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, ரசிகர்களிடம் அதிகமான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா