சற்று முன்

சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |   

சினிமா செய்திகள்

RAABA MEDIAவின் கின்னஸ் உலக சாதனை நடன நிகழ்ச்சி
Updated on : 21 November 2018

RAABA MEDIA EVENTS INDIA  பெருமையுடன் வழங்கும் GUINNESS WORLD RECORD - 2018 DECEMBER 22 முதல் 31 வரை நடைபெற உள்ளது .இவ்வுலக சாதனை "DANCE RELAY 222"என்ற பெயரில் நடை பெறுகிறது .



இந்த மாபெரும் உலக சாதனையில் நடன கலைகர்கள் மற்றும் பங்கற்பாளர்கள் தனித்தனியாக "222"மணி நேரம் தொடர்ந்து நடனம் புரிவார்கள் .ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லாமல் ஒவ்வொருவராக நடனம் புரிவார்கள் .



இந்த  DANCE RELAY  என்னும் பெயர் கொண்ட உலக சாதனையை இதற்கு முன்னதாக ஆந்திர மாநிலத்தில் 25 மணி நேரம் 02 நிமிடங்கள் நடனம் புரிந்து சாதனையை பெற்றுள்ளனர் . 



இதை முறியடிக்கும் முறையில்  RAABA MEDIA  இச்சாதனையை முறியடிக்க 26 மணி நேரமே போதும் என்றாலும் பிறர் எவராலும் முறியடிக்க படாத சாதனையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தோடு 222 மணி நேரமாக அதிகரித்து மேலும் வேறு எவரும் முறியடிக்க முடியாத அளவில்  இச்சாதனையை நடத்த திட்டமிட்டுள்ளனர்.



எங்களின் உலக சாதனைக்கான MARATHAN DANCE RELAY  பெயரில் அனுப்பப்பட்ட விண்ணப்பம் GUINNESS WORLD RECORD  குழுவால் சரி பார்க்கப்பட்டு 22.10.18 அன்று எங்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது .



எங்களின் விண்ணப்பத்தின் சரிபார்ப்பு எண் :180909094628LDMR  திரு.பிரசன்னா ராமானுஜம் RAABA MEDIA வின் இயக்குனரின் பெயரில் GUINNESS  WORLD RECORD  குழுவால் அனுப்பப்பட்டது.



இவ்வுலக சாதனை தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள DON BOSCO MATRICULATION HR SEC SCHOOL  கொடுங்கையூரில் நடைபெற உள்ளது .டிசம்பர் 22-12-2018 முதல் டிசம்பர் 31-12-2018 வரை 222 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் என்பதை பெருமையுடன் தெரிவிக்கின்றோம்.



    DANCE RELAY 222  வின் சிறப்பு தனித்துவம் மிகுந்த இச்சாதனையில் பங்கு பெரும் நடன கலைர்கள் தனித்தனியாக அவர்களின் நடன திறமையை வெளிப்படுத்த ஓர் அறிய வாய்ப்பை தருகின்றது .



                 மேலும் ஒரு குறிப்பிட்ட நடன வகைகளுக்கும் ,பாரம்பரிய நடனத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம்  கொடுத்த நிலையில் MARATHON DANCE RELAY  மூலம் அனைத்து வகை  நடனங்களையும் ஊக்குவிக்கும் வகையில் நடைபெற உள்ளது.  



   இவ்வுலக சாதனையில் பங்கு பெரும் அனைத்து நடன கலையிர்களுக்கும் உலக சாதனையில் கலந்து கொண்ட சான்றிதழ் ,கேடயம் மற்றும் நினைவு பதக்கம் வழங்கப்படும் .



              மேலும் இதில் பங்கு கொண்ட மற்றும் நடனத்தை பயிற்சி அளித்த நடன ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் மற்றும் நினைவு பதக்கம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் .



             இச்சாதனையின் நோக்கம் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டது .மேலும்  இச்சாதனையில் மூலம் கிடைக்கும் தொகையை வறுமையின் காரணங்களால் தங்களின் நடன லக்ஷயத்தை மேற்கொள்ள இயலாத நடன கலைக்கற்களுக்கு,RAABA MEDIA  வின் EVENTS INDIA  மூலமாக வாய்ப்புகளும் ,வழி முறைகளும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடனும் ,பெருமையுடனும் தெரிவித்து கொள்கிறோம் . எந்தவித சுயநலமும் இன்றி முழுக்க முழுக்க பொதுநலத்துடன் இச்சாதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது .



        நடன சாதனை நிகழ்ந்து கொண்டிருக்கும் வேலையில் பங்கேற்பாளர்கள் ,பார்வையாளர்கள் அல்லது ஊழியர்கள் சட்ட விரோத செயல்கள் அல்லது எங்களின் விதிமுறையை மீறிய செயல்களில் ஈடுபட்டால் எந்தவித விளக்கமும் இல்லாமல் அந்த தனி நபரை அல்லது குழுவை நீக்கம் செய்யப்படுவர் தேவைப்பட்டால் சட்ட ரீதியான  நடவடிக்கைகளுக்கும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.நடன கலைஜீர்கள் அவர்களது நடனம் முடிந்ததும் உடனடியாக பள்ளி வளாகத்திலிருந்து வெளியேறவேண்டும் .  



       இச்சாதனை முழுக்க  முழுக்க  நல்லெண்ணத்தின் அடிப்படையில் நடைபெறவுள்ளது மேலும் சட்டத்தின் விதிகள் அனைத்தயும் பின்பற்றியே ,சட்டத்தின் அனுமதி பெற்றே நடைபெறவுள்ளது .  இச்சாதனையின் பெயரில் எந்த ஒரு தனி நபர் எங்களின் விதியையோ அல்லது சட்டத்தின் விதியையோ மீறுவதை ஒரு போதும் எங்கள் குழு அனுமதிப்பது இல்லை .மேலும் எந்த ஒரு தனி நபரோ இந்த உலா சாதனையின் பெயரில் களங்கம் ஏற்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .         



    இந்த உலக சாதனையை நல்வழியில் மேற்கொள்ள அணைத்து தரப்பினரும் ,அவ்ர்களால் முடிந்த உதவியை செய்து வருவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம் .



     மேலும் ஊடகங்களின் பெரும் ஒத்துழைப்பு எங்கள் சாதனையை ஒரு  சரித்திரமாகவே மாற்றும் என்ற நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.எங்கள் சாதனை பயணம் நன்றாக தொடங்கி சிறப்புடனும் ,வெற்றியடனும் பயணத்தை முடிப்பதற்கு ஊடகங்கள் ஆகிய உங்களின் பங்கும் ,வாழ்த்துக்களும் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறோம் .   

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா