சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

மெட்ராஸ் மீட்டரின் லூசு பொண்ணு
Updated on : 26 November 2018

'ஃபேரி டேல்ஸ்' எப்பொழுதும்  பெண்களுடன் வந்து பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும்,  ஆனால் எந்த வகையிலும் அது உண்மைக்கு ஒத்து போவதில்லை. இது தான் உண்மையாக இருந்தாலும், திரைப்படங்களில் அந்த அவதாரங்கள் ரசித்திருக்கிறோம். இது தான் மெட்ராஸ் மீட்டர் சமீபத்திய யூடியூப் வீடியோவான 'லூசு பொண்ணு'க்கு அடிப்படை. ஒரு திரைப்பட இயக்குனர் கலை கண்ணன் (சம்பத்), நீலா (இந்துஜா) மற்றும் தீபக் (வைத்தியா) ஆகிய மூன்று கதாபாத்திரத்திரங்களை கொண்டு, 7 நிமிட வீடியோவை நாம் ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் இங்க்மர் பெர்க்மனை நடிகை இங்க்ரிட் பெர்க்மென் என தவறாக புரிந்து கொள்ளும் இயக்குனர் கலை கண்ணன், லூசுப் பெண்ணாக இந்துஜாவின் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு ஆகியவை நம்மை ரசிக்க வைக்கிறது.



ராஜா ராமமூர்த்தி இந்த வீடியோவின் கருவை எழுதியிருக்கிறார். குருராஜ் எடிட்டிங் உடன் சேர்த்து இந்த வீடியோவை இயக்கியிருக்கிறார்.



"லூசு பொண்ணு' என்பது 'மானிக் பிக்ஸி ட்ரீம் கேர்ள்' இணையான ஒரு இந்தியன் வீடியோ ஆகும். 'லூசு பொண்ணு' என்ற பெயர் குறிப்ப்டுவது போலவே '2 வயது குழந்தை மனநிலையில்' இருக்கும் நாயகியை, நாயகன் மீட்டெடுக்க வேண்டும். தமிழ் சினிமாவின் எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பெண்களின் யதார்த்தமான வாழ்க்கையையும், வலுவான பெண் கதாபாத்திரங்களையும் எழுதி வருகிறார்கள். சம்பத் மற்றும் இந்துஜா இந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, மிகச்சிறப்பாக நடித்துக் கொடுத்ததற்கு நன்றி. குரு மற்றும் மெட்ராஸ் மீட்டர் குழுவினர் மிகவும் அற்புதமான வேலையை செய்துள்ளனர் என்றார் ராஜா ராமமூர்த்தி.



மெட்ராஸ் மீட்டர் யூடியூப் சேனல் ஒப்பீட்டளவில் அதிக சந்தாதாரர்களை கொண்ட, அன்லிமிடெட் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் மிகப்பெரிய சேனலாக உருவாகியுள்ளது. 



ட்ரெண்ட்லௌட் சிஇஓ எம்.சிதம்பரம் கூறும்போது, "மெட்ராஸ் மீட்டர் முற்றிலும் சீரமைக்கப்பட்ட ஒரு சேனல். இந்த மெட்ராஸ் மீட்டர்ஸ் வெற்றிக்கு முதுகெலும்பாக உள்ள விசுவாசமான பார்வையாளர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பயணத்தை மெட்ராஸ் மீட்டர் 

2.0 என்று சொல்லலாம். இந்த சேனலில் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களை பார்க்கும், நிறைய ஆச்சரியப்பட வைக்கும் வீடியோக்களை இனி வழங்க இருக்கிறோம். மொத்தத்தில் மெட்ராஸ் மீட்டர் இஸ் பேக்.



ருசியான உணவுகள் சமைக்கும் சமையல் நிகழ்ச்சிகள், சமகால பிரச்சினைகளை பிரதிபலிக்கும்  நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை என அனைத்தும் கிடைக்கும் தளமாக மாற இருக்கிறது மெட்ராஸ் மீட்டர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா