சற்று முன்

சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |   

சினிமா செய்திகள்

ராஜ் டிவி இல்ல திருமண விழா
Updated on : 27 November 2018

ராஜ் தொலைக்காட்சியின் இயக்குநர் எம்.ராஜரத்தினம்-திருமதி அருணாதேவி தம்பதியின் மகன், தொழிலதிபர் சின்ன நாச்சியப்பனுக்கும், செல்லப்பா-சுஜாதா தம்பதியினரின் மகள் டாக்டர் ராஷ்மிக்கும் சென்னையில்  திருமணம் நடைபெற்றது. 

சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்சன் சென்டர் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் அனுப்பிய வாழ்த்து மடலை, மக்கள் தொடர்பு அதிகாரி தங்கையன் நேரில் வழங்கினார். 

மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவரது செயலர் ராஜகோபால் ஆகியோர் நேரில் வாழ்த்தினர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், டெல்லி மேலிட பிரதிநிதி தளவாய் சுந்தரம், அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். காலையில் நடந்த திருமணத்தின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் மணமக்களை வாழ்த்தினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர்.



தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், பிஜேபி மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், அதிமுக நிர்வாகி ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் நேரில் வாழ்த்தினர்.

தினந்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், போத்தீஸ் உரிமையாளர்களில் ஒருவரான ரமேஷ், நல்லி குப்புசாமி, தொழிலதிபர் வி.ஜி.பி.சந்தோஷம், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தமிழக வ.உ.சி நலப்பேரவை பொதுச் செயாளர் கே.குமார் உள்ளிட்ட பலரும் நேரில் வாழ்த்தினர்.



தமிழக காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், கூடுதல் டிஜிபி ரவி, ஷகில் அக்தர், சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், செய்தி துறை இயக்குநர் சங்கர், சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் நளினி உள்ளிட்ட ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மணமக்களை வாழ்த்தினர். 



திரைப்பட நடிகர்கள் சூர்யா, ஜீவா, ஸ்ரீகாந்த், விஜயகுமார், பிருத்விராஜ், ராஜேஷ், ரமேஷ்கண்ணா, நடிகைகள் ராதிகா சரத்குமார், ப்ரீத்தா ஹரி, சச்சு, திரைப்பட இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாக்யராஜ், பாண்டியராஜன், கே.எஸ்.ரவிக்குமார், திரையரங்க உரிமையாளர்கள் அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர். 



சினிமா தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பிரமிட் நடராஜன், சத்யஜோதி தியாகராஜன், ஏ.எல்.அழகப்பன், பி.எல்.தேனப்பன், சித்ரா லட்சுமணன், பாலு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் மனைவியும், பாடகியுமான சைந்தவி உள்ளிட்ட பலரும் மணமக்களை நேரில் வாழ்த்தினர். விழாவுக்கு வந்த அனைவரையும் ராஜ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர்  எம்.ராஜேந்திரன், இயக்குனர்கள் எம்.ராஜரத்தினம், எம்.ரவீந்திரன், எம்.ரகுநாதன் ஆகியோர் வரவேற்றனர். 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா