சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

ஜிப்ரானுக்கு இசைக்கான கான்ஃபுல்லென்ஸ் எக்ஸலன்ஸ் விருது
Updated on : 28 November 2018

ஜிப்ரான் இசை நேர்த்தியுடன் எப்போதும் இசை ரசிகர்களுக்கு ஒரு இதமான, அமைதியான, இதயத்தை வருடும் ஒரு அனுபவத்தை கடந்த சில ஆண்டுகளாக வழங்கி வருகிறது. ஒரு விதிவிலக்கான் இசையை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு உணர்ச்சி அவரை மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பால் அவரை லைம்லைட்டில் வைத்திருக்கிறது. நல்ல தரமான மற்றும் நேர்மையான ஒலி மற்றும் இசைக்காக கொண்டாடப்பட்ட ஜிப்ரானை, தற்போது லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இசைக்கான  'கான்ஃபுல்லென்ஸ் எக்ஸலன்ஸ் விருது' வழங்கி கவுரவிக்கிறது.



"சர்வ வல்லமையுள்ள கடவுள், இசையை உருவாக்குபவர், இசையமைக்க எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றி. இது போன்ற கௌரவத்தை பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதே வேளையில், என் மீதும், என் இசையின் மீதும் அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கு  இன்னும் சிறப்பு செய்ய வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கிறது" என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான். 



ஜிப்ரான் சமீப காலங்களில் அடுத்தடுத்து சார்ட்பஸ்டர் ஆல்பங்களை கொடுத்து பாராட்டுகளை பெற்று வருகிறார். நேர்த்தியான பாடல்களுக்கு மட்டுமல்லாமல், பின்னணி இசைக்கும் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றிருக்கிறார். மிகத் தீவிரமான உதாரணமாக அவரது சமீபத்திய வெளியீடான 'ராட்சசன்' படத்தை சொல்லலாம். சிறு குழந்தைகள் உள்ளிட்ட பல ஆர்வமுள்ள இசைக்கலைஞர்கள் அவருடைய இசைப் படைப்புகளை மறுபடியும் செய்து பார்க்க  முயற்சித்துள்ளனர். இது ஜிப்ரானின் தலைசிறந்த இசை, 'பின்னணி இசை' அமைப்பில் பலருக்கும் உத்வேகத்தை வழங்கியுள்ளது.



விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான், ஹன்சிகாவின் மகா, மாதவன் நடிக்கும் படம், ஜீவா நடிக்கும் படம், இம்சை அரசன் 24ஆம் புலிகேசி, இத் வேதாளம் சொல்லும் கதை, ஹவுஸ் ஓனர், ஹோம் மினிஸ்டர், உள்துறை மந்திரி (கன்னடம்-தெலுங்கு இருமொழிகளில்) உள்ளிட்ட பல்வேறு வகையான படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜிப்ரான்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா