சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் இரண்டாவது தயாரிப்பான ப்ரொடக்‌ஷன் நம்பர் 2 படப்பிடிப்பு சென்னை ஃபிலிம் சி
Updated on : 30 November 2018

"கனா" படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. கிருஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் மாதம் கனா படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் இரண்டாவது தயாரிப்பான 'ப்ரொடக்‌ஷன் நம்பர் 2' படப்பிடிப்பு சென்னை ஃபிலிம் சிட்டியில் பூஜையுடன் துவங்கியது. சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் டி.வி புகழ் ரியோ மற்றும் ஷீரின் ஜோடியாக நடிக்கிறார்கள். அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் உட்பட இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். அவருடன் ராதாராவி, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் சில நடிகர்களும் நடிக்கிறார்கள். இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார். யுகே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஃபென்னி ஆலிவர் எடிட்டராகவும், கமல்நாதன் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள். ஒரு சில முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இறுதி செய்த பிறகு அவர்களை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும். இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ஏற்கனவே Blacksheep YouTube சேனலில் தனது படைப்புகள் மூலம் பொதுமக்களிடம் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா