சற்று முன்

15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |   

சினிமா செய்திகள்

அமேஸான் பிரைம் வீடியோ அதன் முதல் தமிழ் பிரைம் பிரத்தியேகத் தொடர் - வெள்ள ராஜா
Updated on : 01 December 2018

அமேஸான் பிரைம் வீடியோ அதன் முதல் தமிழ் பிரைம் பிரத்தியேகத் தொடர் - "வெள்ள ராஜா" அறிமுகத்தினை அறிவித்துள்ளது  



 ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பாபி சிம்ஹா - பார்வதி நாயர் நடிக்கும் இத்தொடர், டிசம்பர் 7 அன்று, அமேஸான் பிரைம்வீடியோவில் பிரத்தியேகமாக    அறிமுகம் செய்யப்படவுள்ளது ~

 

~ சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள் மற்றும்  தொலைகாட்சி நிகழ்ச்சிகள்,  ஸ்டாண்ட்  அப் காமடி, பிரைம் ஒரிஜினல் நிகழ்ச்சிகள், விளம்பரமின்றிஇசை கேட்டலுக்கான அமேஸான் பிரைம் மியூசிக், தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளின் துரிதமான இலவச   டெலிவரி, டாப் டீல்களுக்கான அணுகுவசதி, பிரைம் ரீடிங் உடன் அன்லிமிடெட் ரீடிங் ஆகியவை அனைத்தும் பிரதி மாதம் ரூ.129 கட்டணத்தில் வழங்கும் மிகச்சிறந்த மதிப்பினை பிரைம் வழங்குகிறது~



டிசம்பர்1, 2018: பிரைம் உறுப்பினர்களுக்கான தனது முதல் பிரைம் பிரத்தியேகத் தொடராக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடனான கூட்டாண்மையில்உருவாக்கப்பட்டுள்ள வெள்ள ராஜா- ன்  அறிமுகத்தினை அமேஸான் பிரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. டிசம்பர் 7, 2018 அன்று 200 நாடுகள் மற்றும்பிராந்தியங்களில் ஒளிபரப்பபடவுள்ள வெள்ளை ராஜா பிரைம் உறுப்பினர்களுக்காக, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும்  கிடைக்கப்பெறும்.



அமேஸான் பிரைம் வீடியோ இந்தியா, உள்ளடக்கப்பிரிவின் இயக்குனர் மற்றும் தலைவர் திரு.விஜய் சுப்ரமணியம் அவர்கள், “எங்களது தமிழ் பிளாக்பஸ்டர்திரைப்படங்கள் தொகுப்புகளின் உள்ளடக்கத்திற்கு நாங்கள் தமிழக நேயர்களிடம் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளோம். இந்தியாவிலிருந்து   கதைகளைஎடுக்கவும் மற்றும் உள்ளுர் விவரணைக்குப் பொருந்தும் அதே நேரத்தில் உலகளாவிய அம்சங்களையும் கொண்டுள்ள கதைகளை உருவாக்கவும்உறுதிப்பாடு மேற்கொண்டுள்ளோம். சிறந்த கதைகளை பல்வேறு மொழிகளிலும் கூறும் அமேஸான் பிரைம் வீடியோவின் உறுதிப்பாட்டினை இது மறுஉறுதி செய்கிறது. சர்வதேச ரீதியிலான, பிராந்திய மற்றும்   உள்ளூர்   தலைப்புகளை தொடர்ந்து இந்தியாவிலும் மற்றும் உலகளாவிய அளவிலும் அறிமுகம்செய்வதில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடவுள்ளோம்” என்று கூறினார்



ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், S.R.பிரபு அவர்கள், “தமிழில், பிரம்மாண்டமான முறையில், ஒரு தைரியமான கதையை சொல்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும்மற்றும் ஆர்வமும் கொண்டுள்ளோம். எங்களது அனைத்து பணிகளிலும், தரமான பொழுதுபோக்கினை வழங்க நாங்கள் அயராது முயற்சிக்கிறோம். வழக்கம்போல், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் ஆழமாக உருவாக்கியுள்ளோம் மற்றும் ஒரு சிக்கல், மர்மம் நிறைந்த போதை மருந்து உலகம் குறித்து, சிற்சில புன்னகை நேர்வுகளுடன் இந்த பிரைம் பிரத்தியேக தொடரை வடிவமைத்துள்ளோம். ஆர்வமூட்டும் கதை, நம்பத்தக்க   இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் மற்றும் உறுதியான நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டுள்ள இது, பிரைம் வீடியோ நேயர்களால் பெரிதும் விரும்பப்படும் என்றுநம்புகிறோம். மேலும்   இந்த உள்ளுர் கதையை இந்தியாவிலுள்ள நேயர்களுக்கு ஏற்றவாறு மட்டுமின்றி, அமேஸான் பிரைம் வீடியோவில் இணைந்துள்ளஅனைத்து சர்வதேச நேயர்ளுக்கும் ஏற்றவாறு   வடிவமைத்துள்ளோம்” என்று கூறினார்.



வெள்ளை ராஜா குறித்து



வடசென்னையின் மையத்தில் அமைந்துள்ளதொரு பிரபலமான லாட்ஜ், பாவா லாட்ஜாகும். இந்த லாட்ஜில் தங்கி, பணையக் கைதி சூழலில் இருக்கும்நபர்களைச் சுற்றி இக்கதை   அமைக்கப்பட்டுள்ளது. பிரலமானதொரு போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனான தேவா ஒரு கொக்கைன் (Cocaine)சோதனையைத் தொடர்ந்து அங்கு ஒளிந்திருக்கிறான். அவன் காவல்துறையின் மற்றும் தனது எதிரிகளின் தடைகளை மீறி தனது பொருட்களுடன் தப்பிக்கவேண்டும். ட்ரீம்   வாரியர் பிக்சர்ஸால் தயாரிக்கப்பட்டு, குகன் சென்னியப்பன் அவர்களால் இயக்கப்பட்டுள்ள இத்தொடரில், பாபி சிம்ஹா மற்றும் பார்வதிநாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்   நடித்துள்ளனர்.



சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமடி, மிகப்பெரிய இந்திய மற்றும் ஹாலிவுட்திரைப்படங்கள், யுஎஸ் தொலைகாட்சித் தொடர்கள், பிரபலமான இந்திய மற்றும் சர்வதேச குழந்தைகள் நிகழ்ச்சிகள், விருதுகள்   வென்ற அமேஸான்ஒரிஜினல் நிகழ்ச்சிகள்; - என அனைத்தும் விளம்பரங்கள் இல்லாமலும் மற்றும் ஒரு உலகத்தரத்திலான வாடிக்கையாளர் அனுபவத்துடனும் அமேஸான்பிரைம் வீடியோவில் கிடைக்கப்பெறும்.



வெளிவரவுள்ள வெள்ள ராஜா பிரைம் ஒரிஜினல் தொடர், மற்றும் புதிதாக வெளியாகும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள், சமீபத்திய யுஎஸ்தொலைகாட்சி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்  மற்றும் பிற அமேஸான் பிரைம் ஒரிஜினல்களை பார்வையிட தயவு செய்து வருகை   தரவும் www.PrimeVideo.com அல்லது அமேஸான் பிரைம் வீடியோ ஆப்பை இன்றே டவுன்லோடு செய்யவும் மற்றும் பிரைம் மெம்பர்ஷிப்பில் ஆண்டிற்கு ரூ.999 அல்லது பிரதி மாதம் ரூ.129 கட்டணத்தில் இணையவும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா