சற்று முன்

சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |   

சினிமா செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்காக உலக சாதனை!
Updated on : 03 December 2018

ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துகளை கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு இலவச கல்வி, பெண்கள் முன்னேற்றத்தைக் கூறும் சாதனைப் பெண்கள், சாலையோரம் பசித்திருக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளி திட்டம் போன்றவை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நற்பணிக்கு சான்றுகளாகும். இந்த அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.



சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 3-ம் தேதி, ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு வேல் டெக் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலக சாதனை முயற்சியாக வானமே எல்லை என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால் உலகம் நமக்கு செவி சாய்க்கும் என்பதே வானமே எல்லை நிகழ்ச்சியின் தாரக மந்திரமாகும். மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குரிய உரிமை, நலன்களைப் பெற்று கண்ணியத்துடன் வாழ யாவரும் அணிதிரள வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



உலக அளவில் சக்கர நாற்காலி பயன்பாட்டாளரின் எண்ணிக்கை 3 கோடி பேர் என்ற அளவில் உள்ளது. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரெயின்ட்ராப்ஸ் மற்றும் வேல் டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 1550 பேர் கூடி நின்று பிரம்மாண்ட அளவில் சக்கர நாற்காலி வடிவத்தை உருவாக்கினர். இந்த நிகழ்வு ஆசிய மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக ஆசிய சாதனை புத்தகத்தின் தென் இந்திய தலைவர் விவேக் அவர்களால் அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டு, கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற உள்ளது.



இந்த உலக சாதனை நிகழ்ச்சியின் போது ஏ.ஆர்.ரெஹானா அவர்களின் இசையில், பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளில் உருவான மாற்றுத்திறனாளிகளும் சமூகத்தின் ஒரு அங்கம், அவர்களால் வியத்தகு பல சாதனைகளை படைக்க முடியும் என்ற கருத்துக்கள் பொதிந்த விழிப்புணர்வு பாடலின் ஒளி வடிவம் வெளியிடப்பட்டது. இந்த பாடலை பவதாரிணி மற்றும் அரவிந்த் பாடியுள்ளனர்.



இந்நிகழ்ச்சியில், வேல் டெக் பல்கலைகழகத்தின் நிர்வாக இயக்குனர்கள், ரங்கராஜன் மற்றும் டாக்டர்.சகுந்தலா ரங்கராஜன், விஜிபி குழுமத்தின் தலைவர் விஜி சந்தோசம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, தமிழ் நாடு உதவிக்கரம் உடல் ஊனமுற்றோர் சங்க தலைவர் வரதக்குட்டி, தமிழ் நாடு உதவிக்கரம் உடல் ஊனமுற்றோர் சங்க தலைவர் வரதக்குட்டி, ரெய்ன்ட்ராப்ப்ஸ் அமைப்பின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால், ஆனந்தம் முதியோர் இல்ல நிர்வாகி பாகீரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா