சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

முதல் முறையாக 40 குழந்தைகள் நடிக்கும் அலிபாபாவும் 40 குழந்தைகளும்
Updated on : 04 December 2018

இடியேட்ஸ் கிரியேட்டஸ் என்ற பட நிறுவனம் சார்பாக போஸ் தயாரிக்கும் படத்திற்கு   “ அலிபாபாவும் 40 குழந்தைகளும் “ என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர்.



இந்த படத்தில் புதுமுகம் போஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. மற்றும் அப்புகுட்டி, மொட்ட ராஜேந்திரன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, மனோபாலா, மயில்சாமி இவர்களுடன் இன்னும் ஏராளமான நகைச்சுவை நடிகர்களும் நடிக்க உள்ளனர்.



ஒளிப்பதிவு    -         சங்கர்      



இசை           -        ஜெய்குமார்



பாடல்கள்    -        யுகபாரதி



எடிட்டிங்     -        வீரசெந்தில்ராஜ்



ஸ்டண்ட் -            இடிமின்னல் இளங்கோ



நடனம்        -        தினேஷ், சிவசங்கர்.



மக்கள் தொடர்பு  - மணவை புவன் 



தயாரிப்பு மேற்பார்வை -        பாண்டியன்



தயாரிப்பு    -   இடியேட்ஸ் கிரியேட்டஸ்.



மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய L.G.ரவிச்சந்தர்  கதை, திரைக்கதை வசனம் எழுதி இந்த படத்தை இயக்குகிறார். இவர் இயக்கிய “ நான் அவளை சந்தித்த “ போது படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அவர் இயக்கும் நான்காவது படம் இது.



படம் பற்றி இயக்குனர் பேசியதாவது...



நான் இயக்கிய மூன்று படங்களுமே வெவ்வேறு கதையம்சம் கொண்டவை. இந்த படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க உள்ளோம். “ உழைப்பே உயர்வு உழைக்காமல் எவராலும் முன்னேற முடியாது என்ற உலகம் அறிந்த உண்மை  தத்துவமே இந்த படத்தின் திரைக்கதை.



குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க உள்ளோம். முதல் முறையாக 40 குழந்தைகள் நடிக்கிறார்கள் இவர்களுடன் பஸ் ஒன்று முக்கிய கதாப்பாத்திரமாக வர இருக்கிறது.



படப்பிடிப்பு ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடைபெற உள்ளது என்றார் L.G.ரவிச்சந்தர். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா