சற்று முன்

இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |   

சினிமா செய்திகள்

வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' படத்துக்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ்!
Updated on : 11 December 2018

நிச்சயமாக, வெங்கட் பிரபுவின் ஒவ்வொரு படமும், அது எந்த வகை படமாக இருந்தாலும் சரி, அது ஒரு பார்ட்டி உணர்வை வழங்கும். தற்போது அவருடைய படத்தின் பெயரே 'பார்ட்டி' என்பதால் அது மிகப்பெரிய பொழுதுபோக்கை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. வழக்கமாக குழந்தைகளை யாரும் 'பார்ட்டி'க்கு அழைக்க மாட்டார்கள். ஆனால் வெங்கட் பிரபு அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். ஆம், வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்த்து மகிழும் ஒரு அழகான பொழுதுபோக்கு விழாவாக இருக்கும்.



இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா கூறும்போது, "வெங்கட் பிரபு பெரியவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைத்து  மிகைப்படுத்தி எந்த படத்தையும் எடுத்ததில்லை. அவரது முந்தைய திரைப்படங்களை பார்த்தாலே மிகவும் தெளிவாக தெரியும், அவரின் இலக்கு எப்போதும் அனைத்து தரப்பு மக்களுக்குமான படத்தை தருவது தான். நிச்சயமாக, பார்ட்டி படத்தின் கதை நடக்கும் பின்னணியால் படம் கிளாமர் விஷயங்களை கொண்டிருக்கும். சிபிஎஃப்சி உறுப்பினர்கள் எங்கள் படத்தின் முதல் பார்வையாளர்களாக இருந்து படத்தை சரியாக மதிப்பிட்டிருப்பது எங்கள் குழுவுக்கே மகிழ்ச்சியளிக்கிறது. 



படத்தின் கதையை பற்றி தயாரிப்பாளர் டி சிவா கூறும்போது, "கதையை பற்றிய எதையும் இப்போது வெளிப்படையாக கூறமுடியாது. ஆனால், ஒரு புத்தாண்டு கொண்டாத்தின் போது கதை நடக்கிறது.  அதில் நிறைய கதாபாத்திரங்கள், ட்ராமா, ஆக்‌ஷன், காமெடி மற்றும் வெங்கட் பிரபுவின் பேக்கேஜ் நிச்சயமாக இருக்கும்" என்றார். 



பார்ட்டி படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், சம்பத் ராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 



பிரேம்ஜி அமரனின் இசையில் பாடல்கள்  ஏற்கனவே ஒரு முழுமையான பார்ட்டி உணர்வை உருவாக்கியுள்ளது. ஃபிஜி தீவுகளை ராஜேஷ் யாதவ் தனது ஒளிப்பதிவால் மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். பிரவீன் KLன் சிறப்பான எடிட்டிங் படத்தை சரியான வேகத்தில் கொண்டு செல்லும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா