சற்று முன்

நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

நட்சத்திர கிரிக்கெட் போட்டி; சென்னை சிங்கம்ஸ் அணி வெற்றி!
Updated on : 18 April 2016

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நேற்று நடந்து முடிந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியை, சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணி வென்றது.



 



சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளில் சென்னை சிங்கம்ஸ், மதுரை காலேஜ், நெல்லை டிராகன்ஸ், தஞ்சை வாரியர்ஸ், திருச்சி டைகர்ஸ், ராமநாடு ரைனோஸ், சேலம் சீட்டாஸ் மற்றும் கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடின.



 



இதில் இறுதியாக, சூர்யா தலைமையிலான சென்னை சிங்கம்ஸ் அணி போட்டியை வென்றது. இறுதி போட்டியில் வெற்றிப்பெற்ற சென்னை சிங்கம்ஸ் அணிக்கு நடிகர் கமல்ஹாசன் பரிசு கோப்பையை வழங்கினார்.



 



முன்னதாக, கிரிக்கெட் போட்டியின்போது பத்ம விபூஷன் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் மரியாதை செலுத்தும் விழா நடைபெற்றது. மேலும், நேற்று நடிகர் விக்ரமுக்கு பிறந்தநாள் என்பதால், நடிகர் சங்கம் சார்பில் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.



 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா