சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

சினிமா செய்திகள்

தெறி படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு கபாலி இல்லை
Updated on : 21 April 2016

விஜய் நடித்த தெறி திரைப்படம், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள பல்வேறு  திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும்  திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.



 



இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில், தெறி திரைப்படத்தினைத் திரையிட்ட திரையரங்குகளைத் தவிர மற்ற எந்தத் திரையரங்குகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



 



இதுகுறித்து, திரையரங்க உரிமையாளர் சங்க பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், தெறி படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு கபாலி படத்தை தரமாட்டோம் என தாணு கூறுகிறார். செங்கல்பட்டு ஏரியாவுக்கு கபாலி படத்தை தரவில்லை என்றால், தமிழகம் முழுவதும் அப்படத்தை திரையிட மாட்டோம். மேலும், இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் தலையிடவேண்டும். மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை திரையிட மாட்டோம். சதவீத அடிப்படையில் படத்தை திரையிட வழிவகை செய்ய வேண்டும் என கூறினார்.



 



திரையரங்க உரிமையாளர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையிலான பிரச்சனை தொடர்ந்துக்கொண்டிருப்பதால், இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா