சற்று முன்

சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'பயாஸ்கோப்'   |    இயக்குநர் செல்வராகவன் 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் 'மெண்டல் மனதில்'   |    நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி ஃபேண்டஸி திரைப்படம் 'பரோஸ்'   |    சில திட்டங்கள் உங்களை உற்சாகப்படுத்தினாலும் பயமுறுத்தவும் செய்யும் அதுபோல கேம் சேஞ்சர்...   |    கதை, சினிமாவுக்கு எப்படி முக்கியமோ, அதே போல் வாழ்க்கைக்கும் முக்கியம் - எழுத்தாளர் கமலா   |    நடிகர் ஆர்யா அண்ணாநகரில் திறந்து வைத்த பிரியாணி கடை!   |    'THE LEGEND OF CHANDRABABU’ நாவலை படமாக்கும் உரிமையை பெற்றுள்ள ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்’!   |    ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும் - தயாரிப்பாளர் சமீர்   |    ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே 'கூரன் ' படத்தின் கதை!   |    2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம்......#ஜீவிபி100 எனும் சாதனை பயணம்!   |    சமுத்திரகனியை திட்டினால் படம் ஜெயித்து விட்டது என அர்த்தம்! - இயக்குநர் சரண்   |    சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’   |    நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் 'மாமன்'   |    ரசிகர்களின் ஆரவாரக் கொண்டாட்டத்துடன் பாக்ஸ் ஆஃபிஸ் - இல் கலக்கும் 'மிஸ் யூ'!   |    வித்தியாசமான தோற்றத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் தோன்றும் 'மெண்டல் மனதில்'   |    கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகும் மோகன்லாலின் 'பரோஸ்'   |    வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிக்கும் பிரமாண்டமான தயாரிப்பு 'படையாண்ட மாவீரா'   |    ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்திய 'வீர தீர சூரன்' படத்தின் டீசர்!   |    விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ராஷ்மிகா மந்தனாவின் 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் டீசர்!   |    இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில் முதல் ஆன்மிக ஆல்பம் 'அஷ்ட ஐயப்ப அவதாரம்'!   |   

சினிமா செய்திகள்

நடிகர் சங்கத்திலிருந்து சிம்பு விலகக்கூடாது: டி.ராஜேந்தர்
Updated on : 22 April 2016

 



தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று நடிகர் சிலம்பரசனுக்கு, அவரது தந்தை டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



 



 



இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:



 



"எனது மகன் சிம்பு தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து விலக இருப்பதாக ஒரு தகவல் வெளியானதற்குப் பின்னால், நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதிலே நடிகர் சங்க தலைவர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் என்னைத் தொடர்பு கொண்டபோது நானும், எனது மகனும் இந்த பீப் சாங்க் விஷயத்தைச் சட்டரீதியாக எதிர்கொள்கிறோம் என்று சொன்னதாக சொல்லியிருந்தார்கள். அது உண்மைதான். நான் சட்டரீதியாக எதிர்கொள்கிறேன் என்று சொன்னேன், சொன்னபடியே இறைவன் அருளால் அத்தனை நீதிமன்றங்களில் ஏறி இறங்கி வழக்குகளையும், வந்த விமரிசனங்கள் அத்தனையையும் சந்தித்தோம். இன்னும் வழக்கு நிலுவையில் உள்ளது.



 



இந்நிலையில் என் மகன் பீப் சாங்கை வெளியிடவில்லை. யாரோ திருடி வெளியிட்டுவிட்டார்கள் என்பதே உண்மை. அதற்காகதான் வழக்கு மன்றத்திலேயே போராடி கொண்டு இருக்கிறோம். அப்படியிருக்க உண்மை நிலை என்ன என்பதை, உள்நோக்கி ஆராய்ந்து பார்க்காமல் சிம்பு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று விஷால் ஒரு கருத்து சொன்னது என்ன நியாயம்? செய்யாத தப்புக்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே எங்கள் வாதம். இந்த வருத்தம் எனக்கும் இருந்தது, என் மகனுக்கு இருந்தது. ஒரு சங்கம் என்று இருந்தால், ஒன்று பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்யவேண்டும். இல்லையென்றால் ஒதுங்கிக்கொள்ளவேண்டும். விஷால், எதிர் காலத்திலாவது என் மகன் விஷயத்தில் நடந்து கொண்டதைப் போல, மற்ற உறுப்பினர்கள் ஒருவேளை யாராவது பாதிக்கப்படும் விஷயத்தில் நடந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது.



 



என் மகன் சிம்பு, நடிகர் சங்கத்திலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்தவுடன் என்னையும், என் மகனையும் தொடர்புகொண்டு இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று எடுத்துச்சொல்லி, எங்கள் மீது அக்கறைக்காட்டிய மூத்த நட்சத்திரங்களுக்கும், கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேளையில் ஒரு மூத்த கலைஞன் என்ற முறையில் ஒரு கருத்தை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். என் மகன் சிம்பு ஆனாலும் சரி, யாராக இருந்தாலும் சரி தேர்தலில் வெற்றி பெற அணியினரை மட்டும் பார்க்ககூடாது. மிக குறைந்த வாக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் கூட, சிம்புவுக்காக வாக்களித்த அத்தனை நல்ல நெஞ்சங்களையும் எண்ணிப் பார்க்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக என் மகனுக்காக தாயுள்ளத்தோடு முன்வந்து, நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று நல்ல மனதுடன் சொன்ன நடிகர் சங்க தலைவர் நாசரையும் எண்ணிப் பார்க்கவேண்டும். அப்படி நல்ல இதயம் படைத்த நாசரும் நடிகர் சங்கத்தில்தான் இருக்கிறார்.



 



கடைசியாக ஒன்று, சிம்புவைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு சேர்த்த தந்தையும் நான்தான். இளம் பருவத்திலேயே நடிகர் சங்கத்திலே சென்று நடிகனாக சேர்த்துவிட்ட கலைஞனும் நான்தான். நடிகர் சங்கத்துக்கு நாம் என்ன செய்தோம் என்பதைத் தான், நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். நடிகர் சங்கம் நமக்கு என்ன செய்தது என்பதைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது. இளம் பருவத்திலிருந்து காலம் தொட்டு இந்நாள் வரை நடிகர் சங்கத்துக்காக சிம்பு, நீ ஆடி இருக்கிறாய், பாடி இருக்கிறாய், ஓடி ஓடி உழைத்திருக்கிறாய், இது வரலாறு. நம்முடைய முன்னோர்கள் மறைந்து விட்ட கலைவாணர், எம்ஜி.ஆர், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா போன்ற எண்ணற்ற தென்னிந்தியக் கலைஞர்கள் கட்டிக் காத்தது நமது தென்னிந்திய நடிகர் சங்கம். அதை விட்டு விலக வேண்டாம், உன் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பதே உன் தந்தை என்ற முறையில் என் கருத்து. இதற்கு மேல் உனக்கென்று தனிக் கொள்கை இருக்கலாம், சுயமரியாதை உணர்வு இருக்கலாம். அதை நான் மதிக்கிறேன்.



 



ஈழத்தமிழர் பிரச்னைக்காக மந்திரி பதவிக்கு இணையான மாநில சிறுசேமிப்புத்துறை துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தவன் நான். ஆனாலும் கடவுள் அருளால் காலம் என்னைப் பக்குவப்படுத்தியிருக்கிறது. அதனால்தான் ஒன்று சொல்கிறேன். வேகத்தை விட விவேகம் தான் வெல்லும்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா