சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

“மந்திர சுவடுகள்”
Updated on : 21 April 2015




ஒரு பயணியின் வழியில் வாழ்க்கையின் உயிர்துடிப்பை விவரிக்கும்  


“மந்திர சுவடுகள்”- ஜெயஸ்ரீ ரவி









“வாழ்க்கை கடினமானது. அனைவரும் மகிழ்ச்சியான வாழ்வையே வாழ விரும்புகிறோம். வாழ்க்கையின் 16 விதிகளை நாம் அறிந்துகொண்டால், எந்த கஷ்டமும் நமக்கு ஏற்படாது. எந்த அச்சமும் இன்றி  வாழ்க்கையை சந்தோசமாக வாழ தயாராகுங்கள்”.

தென் இந்தியாவில் பட்டுப் புடவைகள் விற்பனையில் மிக வேகமாக வளர்ந்து வரும்  ஸ்ரீ பாலம் சில்க் சாரீஸ் நிறுவனத்தின் நிறுவனரும், வாழ்வியல் கலையில் தனித்திறன் பெற்றவருமான திருமதி. ஜெயஸ்ரீ ரவியின், கைவண்ணத்தில் முதல் முறையாக உருவான “மந்திர சுவடுகள்” என்ற புத்தகத்தின் வண்ணமயமான வெளியீட்டு விழா, இன்று மாலை ( 15ந் தேதி, புதன்கிழமை) 6 மணிக்கு நடைபெற்றது. 

சிக்கல் மிக்க வாழ்க்கையை எளிதாக வாழ சட்ட திட்டங்கள் கைகொடுக்கின்றன. அப்படி இருந்தும் இந்த வாழ்க்கை எளிதாகத்தான் உள்ளதா என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது ஜெயஸ்ரீ எழுதியுள்ள இந்த  “மந்திர சுவடுகள்”-  ஒட்டு மொத்த வாழ்க்கையையும் எட்டாக பிரித்தனர் அன்றைய சித்தர்கள். ஆனால்,  அவற்றை மேலும் நுண்மைப்படுத்தி பிரபஞ்ச நியதிகள் உதவியுடன், ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி திறம்பட நிர்வகிக்க முடியும் என்பதை தியானம் மற்றும் ஆழமான சிந்தனை மூலம்  கண்டறிந்துள்ளார் ஜெயஸ்ரீ ரவி. 

தான் கண்டறிந்ததை 16 தங்க விதிகளாக தொகுத்து தந்துள்ள புத்தகம் தான் “மந்திர சுவடுகள்”. 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என இரு மொழிகளில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற பெருமைமிகு விழாவில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினர்

டாக்டர் நல்லி குப்புசாமி, டாக்டர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, 

டாக்டர் நிர்மலா பிரசாத் மற்றும் திரு.சி.கே.குமரவேல் 

இந்த புத்தகம் பற்றி ஆசிரியர் திருமதி.ஜெயஸ்ரீ கூறுகையில், காரணம் மற்றும் விளைவுகளின் தொகுப்பே வாழ்க்கை என்பதை நான் முன்கூட்டியே உணர்ந்தேன். ஒரு விஷயம் சரியாக அல்லது தவறாக இருக்க முடியும். இரண்டுமாக  இருக்க முடியாது.  இந்த தலைப்பை பற்றி மேலும் அறிய விரும்பிய என்னை பிரபஞ்ச நியதிகள் வழி நடத்தியது. எனினும், வாழ்க்கையின் அனைத்து நிலைகளுக்கும் அவை வழிகாட்டவில்லை என்பதை நான் உணர்ந்தேன். ஆழ்ந்த தியானத்தின் மூலம், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ ரகசிய பகுதியாக திகழ்வது  5 துணை விதிகளே என்ற முடிவுக்கு நான் வந்தேன். இளையோர், முதியோர்  என்றில்லாமல் அனைத்து தரப்பினரையும் இந்த எளிமையான விதிகள் சென்றடைய வேண்டும் என்று விரும்பினேன். வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க இனியும் தாமதிக்கக் கூடாது.

“மந்திர சுவடுகள்” முன்னுரையின் ஒரு பகுதி: 

வாழ்க்கை கடினமானது. ரோஜாக்கள் நிறைந்த படுக்கை அல்ல வாழ்க்கை. வாழ்க்கை உண்மையானதல்ல. இது அனுபவித்தே தீர வேண்டிய ஒரு விதி என்ற மனிதனுக்கு உள்ள தவறான கருத்துக்களை உடைக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு சரி என்று படும் ஒரு விஷயம், மற்றவர் பார்வையில் தவறாக இருக்கலாம். நமக்குள் ஆழமாக நச்சரித்துக் கொண்டிருக்கும் பதில் கிடைக்காத பல கேள்விகள் உள்ளன. வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று எதுவும் உள்ளதா? நாம் ஏன் துன்பப்பட வேண்டும்? எது சரி அல்லது தவறு? என வெறுப்பு ஏற்படுகிறது. வாழ்க்கையின் விதிகளை நாம் அறிந்தால், நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மறுபுறம், வாழ்க்கையின் விதிகளை நாம் அறிந்தால், வாழ்க்கை முழுவதையும் சந்தோசமாக வாழ முடியும்.இதோ இந்த 16 தங்க விதிகள் மூலம், வாழ்க்கையை துன்பம் இன்றி மகிழ்ச்சியாக வாழ முடியும். 

திருமதி. ஜெயஸ்ரீ ரவி பற்றி..

சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஜெயஸ்ரீ ரவி, வாழ்க்கை திறன் பயிற்சியாளர். தென் இந்தியாவில் பட்டுப்புடவைகள் விற்பனையில், மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்ரீ பாலம் சில்க்ஸ் சாரீஸ் நிறுவனத்தின் நிறுவனரான இவர், தனது கணவர், மகன், மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். டாக்டர் நல்லிகுப்புசாமி தம்பதிக்கு மகளாக பிறந்த இவர், குடும்ப பாரம்பரியமான பட்டுப்புடவைகள் விற்பனையோடு எழுத்து துறையையும் விரும்பி தேர்வு செய்தார்.   




 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா