சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

சாக்ஷி அகர்வால் 'வேலன்டைன்ஸ் டே'வை யார் கூட கொண்டாடி இருக்காங்க பாருங்க
Updated on : 14 February 2021

'குட்டி ஸ்டோரி' படத்தையடுத்து சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'சின்ட்ரெல்லா' படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள 'டெடி' படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கேரக்டரில் நடித்துள்ளார். அடுத்ததாக, சாக்ஷி அகர்வால் ஒப்பந்தமாகியுள்ள படம் 'தி நைட்.' விலங்கு ஒன்று முக்கிய கதாபாத்திரமாக நடிக்கப் போகிற அந்த படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்னும் சில நாட்களில் துவங்கவிருக்கிறதாம். 'அரண்மனை 3'யிலும் நடிக்கவிருக்கிறார் சாக்ஷி அகர்வால்.



 





தான் நடித்த 'குட்டி ஸ்டோரி' படம் ரிலீஸான உற்சாகத்திலிருக்கும் அதே உற்சாகத்தோடு, சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள 'நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்' என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி, கலந்து பழகி, அவர்களோடு விளையாடி மகிழ்வித்து திரும்பியிருக்கிறார். அதுதான் தன்னுடைய காதலர் தினக் கொண்டாட்டம் என்கிறார்.



 



 





 





 





 





அவரிடம் பேசினோம்... '' 'வேலன்டைன்ஸ் டே'வை  உலகம் பார்க்கிற பார்வை வேற. நான் அதை மனுஷங்க மேல மனுஷங்க அன்பு செலுத்துறதுக்கான தினமாத்தான் பார்க்கிறேன். யார் வேணாலும் யார் மேல வேணாலும் அன்பு செலுத்தலாம். எனக்கு ஆதரவற்ற குழந்தைகள் மேல அன்பு செலுத்துறது பிடிச்சிருக்கு. அவங்கதான் என்னோட காதலர்கள். அதனால, காதலர் தினத்தை அவங்களோட கொண்டாடுறேன். 





மூணு வருஷத்துக்கு முன்னே, 'ஃபுட் ஃபார் டூ'ங்கிற (Food for Two) கான்செப்ட்ல காதலர் தினத்தைக் கொண்டாடினேன். அதாவது 'ஒரு மனுஷன் இரண்டு பேருக்கு உணவு கொடுத்தாலே போதும்; நாட்டுல ஏழைகளுக்கு பசி பட்டினி இருக்காது'ங்கிற விழிப்புணர்வை உருவாக்குறதுக்காக பண்ணது அது. 



 





போன வருஷ காதலர் தினத்தை, 'எய்ட்ஸ்' பாதித்த பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளுக்கான ஒரு காப்பகத்துல அவர்களைத் தொட்டுப் பேசி பழகி, சாப்பாடு கொடுத்து கொண்டாடினேன். 'எய்ட்ஸ் பாதித்தவங்களை தொடுறதால நமக்கு எய்ட்ஸ் தொற்றாது; அவங்களை தொட்டுப் பழக தகுதியற்றவர்களா நினைக்கிறது தப்பு'ங்கிறதை எடுத்துச் சொல்றதுக்கான முயற்சியா அதை பண்ணேன்.



 





இந்த வருஷம், கிட்டத்தட்ட 100 ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிற 'நியூ ஹோப் அண்ட் நியூ லைஃப்' காப்பகத்துல காதலர் தினத்தைக் கொண்டாடினேன். மனசுக்கு அவ்ளோ ஹேப்பி... இது அடுத்தடுத்த வருஷமும் தொடரும்'' என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா