சற்று முன்
சினிமா செய்திகள்
ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படத்தில் ஒப்பந்தம்!
Updated on : 11 November 2024
திரையுலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படங்களில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். சலார் பாகம் 2 மற்றும் சலார் பாகம் 2 க்குப் பிறகு அடுத்ததாக பேக்-டு-பேக் படங்களில் இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வு, இதுவரையிலான திரையுலகில் ஒரு நடிகருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையிலான மிகப்பெரிய ஒப்பந்தமாக கருதப்படுகிறது. இது பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே இருவருக்கும் மிக முக்கியமான மைல்கல் அத்தியாயமாகும்.
ஹோம்பாலே பிலிம்ஸ், பல முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில், பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இது இந்திய பார்வையாளர்களுக்கு உயர்தர சினிமா அனுபவத்தை வழங்குவதற்கான ஹோம்பாலேவின் இடைவிடாத முயற்சியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பலதரப்பட்ட ஜானர்களில், கலாச்சார ரீதியாக எதிரொலிக்கும் கதைக்கருக்களுடன் மற்றும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமான திரைப்படங்களை தந்து வரும் தொலைநோக்கு தயாரிப்பு நிறுவனமாக ஹோம்பாலே வளர்ந்து வருகிறது. KGF பார்ட் 1, KGF பார்ட் 2, காந்தாரா, சாலார் 1 ஆகியவற்றின் உலகளாவிய வெற்றியைத் தொடர்ந்து, ஹோம்பாலே ரசிகர்களை ஈர்க்கக்கூடிய திரைப்பட வரிசையை உருவாக்கியுள்ளது. இதில் இப்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காந்தாரா 2 மற்றும் KGF பார்ட் 3 மற்றும் பிரபாஸுடனான அதன் புதிய முயற்சிகளும் அடங்கும்.
இந்திய சினிமாவில் மிகப்பெரும் ஸ்டார்களில் ஒருவரான பிரபாஸ், ஹோம்பாலேவின் லாண்ட்மார்க் படமான சாலார் 2, ராஜா சாப், ஸ்பிரிட், கல்கி 2 மற்றும் ஃபௌஜி உட்பட, அவரது பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹோம்பாலே உடனான பல திரைப்படங்களுக்கான ஒப்பந்தம், இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடனான அவரது வலுவான உறவைப் பிரதிபலிக்கிறது, ஹோம்பாலே பேனரின் கீழ் நான்கு படங்களில் அவர் பணியாற்றுகிறார். பிரபாஸ் போன்ற ஒரு பான் இந்திய ஸ்டாருடன், மூன்று திரைப்படங்களில் ஓப்பந்தமாவதே ஒரு அரிய சாதனையாகும். இந்த இணைவு, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அனைத்து திரைத்துறையையும் இணைத்து, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மார்கெட்டில் இருந்து முக்கிய வணிகத்தைப் பெறக்கூடிய ஒரே நட்சத்திரம் என்பதால், பிரபாஸ் இப்போது மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குகிறார். வேறு எந்த நடிகரும் எட்ட முடியாத உயரம் இது.
கேஜிஎஃப் 1, கேஜிஎஃப் 2 மற்றும் சாலார் பார்ட் 1 போன்ற திரைப்படங்களைத் தந்து, ஹோம்பாலேவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த பிரசாந்த் நீல் இயக்கிய சலார் பார்ட் 2 விலிருந்து, பிரபாஸுடனான இந்த பார்ட்னர்ஷிப் தொடங்குகிறது. ஹோம்பாலேவுடன் சேர்ந்து, பிரபாஸ் மறக்க முடியாத திரைப்படங்களை உலகளவில் பார்வையாளர்களுக்கு கொண்டு வர தயாராகிவிட்டார். ஹோம்பாலே பிலிம்ஸின் நிறுவனர் விஜய் கிரகந்தூர், இந்த திட்டம் குறித்து கூறுகையில்: “ஹோம்பாலேவில், எல்லைகளைத் தாண்டிய கதைசொல்லலை முழுமையாக நாங்கள் நம்புகிறோம். பிரபாஸுடனான எங்கள் ஒத்துழைப்பு, காலத்தால் அழியாத சினிமாவை உருவாக்கும் ஒரு படியாகும், இது எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் மற்றும் மகிழ்ச்சி தரும்.
சலார் பார்ட் 2, காந்தாரா 2 மற்றும் கே.ஜி. எஃப் பார்ட் 3, என ஹோம்பாலே பிலிம்ஸின் அடுத்தடுத்த படங்கள், உலகளவில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அற்புதமான சினிமாவை உருவாக்குவதில் அதன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த திரைப்பட வரிசை, ரசிகர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது, பிரபாஸ் ஹோம்பாலே இணைவு, இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு நினைவு சின்னமாக, இருக்கும்.
கன்னடத்தில் கே.ஜி.எஃப் & காந்தாரா, தெலுங்கில் சாலார், தமிழில் ரகு தாத்தா, மலையாளத்தில் ஃபஹத் பாசிலை வைத்து தூமம் உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்களிலும் மெயின்ஸ்ட்ரீம் ஹிட் கொடுக்க முடிந்த ஒரே தயாரிப்பு நிறுவனமாக ஹோம்பலே பிலிம்ஸ் திரைப்படத் துறையில் பெரும் அதிர்வுகளை உருவாக்குகியுள்ளது. பாகுபலி 1&2, கேஜிஎஃப் 2, கல்கி மற்றும் சாலார் போன்ற உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 20ல் 5ல் பிரபாஸிடன் இணைந்துள்ளது.
பிரபாஸ்-ஹோம்பாலே கூட்டணி, இந்திய சினிமாவில் ஒரு களிப்பூட்டும் புதிய சகாப்தத்தை வெளிப்படுத்துகிறது, இது புதிய வரையறைகளை அமைக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும், தைரியமான கதைசொல்லலின் சக்தியை பெரிய அளவில் எடுத்துச் செல்லும்.
சமீபத்திய செய்திகள்
ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது!
பெரிதும் எதிர்பார்க்கப்படும் கண்ணப்பா படத்திலிருந்து, கடந்த திங்கட்கிழமை ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ப்ரீ-லுக் வெளியானது ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு மஞ்சுவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியப் படமான கண்ணப்பா படத் தயாரிப்பாளர்கள் இப்போது ரிபெல் ஸ்டார் பிரபாஸின், "ருத்ரா" கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டர் பிரபாஸை தெய்வீக மற்றும் பிரமிக்க வைக்கும் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறது, இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ருத்ரா என்று பெயரிடப்பட்ட பிரபாஸின் கதாபாத்திரம், அபரிமிதமான சக்தி மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரம் பொங்கி எழும் புயல் என வர்ணிக்கப்படுகிறது, கடந்த கால மற்றும் எதிர்கால காலங்களுக்கு வழிகாட்டியாக சிவபெருமானின் கட்டளையால் ஆளப்படும் இப்பாத்திரம் தெய்வீகத்தன்மை மற்றும் வலிமையின் சரியான கலவையாகத் திகழ்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரபாஸை மயக்கும் அவதாரத்தில் படம்பிடித்துக் காட்டுகிறது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரபாஸ் ஒரு மலையின் உச்சியில் நின்று, கழுத்தில் ருத்ராட்ச மணிகளால் அலங்கரிக்கப்பட்டு, கையில் தடியை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். அவரது அமைதியான வெளிப்பாடு சிவனின் பின்னணியில் வித்தியாசமாக உள்ளது. இந்த அமைதி பிரமிக்க வைக்கும் மற்றும் சிந்தனையைத் தூண்டும் ஒரு சித்திரத்தை மனதில் உருவாக்குகிறது. இந்த போஸ்டர் அவரது பாத்திரம் பற்றிய ஆவலைத் தூண்டுகிறது.
மோகன் பாபு, அக்ஷய் குமார், மோகன்லால், சரத் குமார், காஜல் அகர்வால், அர்பித் ரங்கா மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மோகன் பாபு மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை, முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார்.
இப்படம் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
#STR49 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சிலம்பரசன் TR பிறந்த நாளில், அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், அவரது அடுத்த படமான #STR49 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிப்பில், பார்க்கிங் படப்புகழ் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் சிலம்பரசன் TR திரும்பி நிற்க, “தி மோஸ்ட் வாண்டட் ஸ்டூடண்ட்” என டேக்லைன் எழுதப்பட்டுள்ளது. இந்த மிரட்டலான போஸ்டர், இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சிலம்பரசன் TR ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.
பார்க்கிங் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், மாறுபட்ட களத்தில், கல்லூரி மாணவனாக விண்டேஜ் சிலம்பரசனை, அதிரடி அவதாரத்தில் அறிமுகப்படுத்தும் வகையில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், கமர்ஷியல் கொண்டாட்டமாக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.
இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
கருத்தாக சொல்லாமல் வாழ்வியலையும் சேர்த்து சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் சக்திவேல் பாலாஜி பேசியதாவது, “நக்கலைட்ஸ் அணியின் மாபெரும் வெற்றிப்படம் இது. அவர்களுக்கும் இது தேவையான விஷயம். அவர்கள் சினிமாவுக்கு வந்து ஜெயித்திருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’, ‘குடும்பஸ்தன்’ இந்த இரண்டு படங்களும் எளிய முறையில் பல அழுத்தமான விஷயங்களை படமாக்கி ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கிறது. கருத்தாக சொல்லாமல் வாழ்வியலையும் சேர்த்து சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி. மணிகண்டன் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மொழி தெரியாமல் கதாநாயகியும் சிறப்பான முகபாவனைகளைக் கொண்டு வந்திருக்கிறார். மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். வெகுஜனம் ஏற்றுக்கொள்ளும்படியான படம் இது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகை சான்வே மேக்னா, “என்னுடைய முதல் படத்திற்கே இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருடனும் இன்னும் 100 படங்கள் நடிக்க விரும்புகிறேன். ஹைதரபாத்திலும் சீக்கிரம் படம் வெளியாக இருப்பதை எதிர்பார்த்திருக்கிறேன். என் கதாபாத்திரத்தை போல மனைவி வேண்டும் என பலரும் சொல்லியிருந்தார்கள். பணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமில்லை என்பதை இந்தப் படம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி”.
தயாரிப்பாளர் வினோத், “ஹீரோவில் இருந்து இயக்குநர் வரை என் படக்குழுவினர் எல்லோருக்கும் நன்றி” என்றார்.
எழுத்தாளர் பிரசன்னா பாலச்சந்திரன், “நக்கலைட்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. ஓயாத இயந்திரத்தைப் போல எங்கள் பின்னால் அணி ஓடிக் கொண்டிருந்தது. நக்கலைட்ஸ் ஆரம்பித்த இந்த எட்டு வருடங்களில் எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. யூடியூபில்தான் நாங்கள் சினிமாவுக்கான பயிற்சியே எடுத்தோம். ’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை. அனைவருக்கும் நன்றி”.
இசையமைப்பாளர் வைசாக், "ராஜேஷ் சாருக்கு நன்றி. மக்களிடம் நிச்சயம் நல்ல படமாக போய் சேரும் என்ற நம்பிக்கையுடன் உழைத்த படம் இது. படக்குழு அனைவரும் சிறப்பாக வேலை பார்த்துள்ளனர். இதற்கான பலன் தான் இந்த சக்சஸ் மீட். எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், குடும்பத்திற்கு நன்றி".
திங்க் மியூசிக் சந்தோஷ், " இந்த வருடம் ஆரம்பித்திருக்கும் போது 'குடும்பஸ்தன்' படம் வார்ம் வெல்கமாக வந்திருக்கிறது. மணிகண்டனுடன் எங்களுக்கு நான்காவது படம். தனியிசைக் கலைஞராக இருந்து வைசாக் இசையமைப்பாளராகவும் அருமையாக இசை செய்திருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்".
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, "படம் பார்த்து கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி. நக்கலைட்ஸ் குழுவுக்கு நன்றி. எங்கள் முதல் படத்தை இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி".
நடிகர் மணிகண்டன், " இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்த குறுகிய காலத்திலேயே எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. படம் வெளியான பின்பும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படக்குழுவினர் நாங்கள் அனைவரும் எளிய பின்னணி கொண்டவர்கள். படம் எடுப்பது தனி போராட்டம் என்றாலும் எடுத்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பது பெரிய போராட்டம். அந்த மலை போன்ற போராட்டத்தை பனி போல எளிமையாக ஆக்கி கொடுத்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. எங்களை சரியான விதத்தில் வழிநடத்திய சுரேஷ் சந்திரா சாருக்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நன்றி" என்றார்.
ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு, அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 'பறந்து போ'
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராமுடன் இணைந்துள்ளது. ராமின் இயக்கத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், அடுத்த படமான ‘பறந்து போ’ படத்தை இணைந்து வழங்குகிறது. இப்படம் இப்போது உலகளவில் பெரும் மரியாதைக்குரிய ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படம், மனதை இலகுவாக்கும் நகைச்சுவையுடன், மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சோஷியல் மீடியா தளங்களில் வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒரு பிடிவாதமான பள்ளி மாணவனும், பண வசதி இல்லாத அவனது அன்பான அப்பாவும், கவலைமிக்க உலகிலிருந்து விடுபட, ஒரு ரோட் டிரிப் மேற்கொள்கிறார்கள். அவர்களின் பயணம் தான் இந்தப்படத்தின் கதை.
ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு 'பறந்து போ' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது குறித்து இயக்குநர் ராம் பேசுகையில்…, 'பேரன்பு' மற்றும் 'ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் பிரீமியர் ரோட்டர்டாம் (IFFR) திரைப்பட விழாவில் அரங்கேறியதைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச திரைப்பட விழாவான ரோட்டர்டாம் IFFR 2024 இல் 'ஏழு கடல் ஏழு மலை' திரையிடப்பட்டபோது, 'பறந்து போ' (ஃப்ளை அவே) திரையிடப்படுமா என்றும், ரோட்டர்டாமுக்கு வருவோமா? என்றும் மிதுல் ரியான் கேட்டார். ஒரு வருடம் கழித்து அவருடைய ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘பறந்து போ’ (ஃப்ளை அவே) IFFR 2025 இன் லைம்லைட் பிரிவில் ப்ரீமியர் செய்யப்படுகிறது. சிவாவும் நானும் வரும் பிப்ரவரி 4, இரவு 8 மணிக்கு de Doelen Jurriaanse Zaal இல் நடக்கும் பிரீமியரில் கலந்து கொள்கிறோம் .
மேலும் படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா பற்றிப் பேசிய ராம், “சிவாவும் நானும் 2007 இல் எங்கள் திரை வாழ்க்கையைத் தொடங்கினோம் - அவருக்கு ‘சென்னை 28’ பட மூலமும், எனக்கு ‘கற்றது தமிழ்’ படம் மூலமும் திரை வாழ்க்கை துவங்கியது. அப்போது ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவா, என்னைப் பேட்டி எடுத்தார். அப்போதிருந்தே நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம், இணைந்து வேலை செய்ய இருவருமே மிகவும் விரும்பினோம். இறுதியாக, அது 2024 இல் 'பறந்து போ' படம் மூலம் நடந்தது.
‘பறந்து போ’ படம் மூலம் இயக்குநர் ராம், முதன்முறையாக காமெடி ஜானரில் களமிறங்கியுள்ளார்.
“இந்தத் திரைப்படம், காமெடி ஜானரில் வித்தியாசமான புதிய குழுவுடன் எனது முதல் முயற்சி. மலையாளத் திரையுலகில் பிரபலமான கிரேஸ் ஆண்டனி, இப்படத்தில் மிகச்சரியான ஒரு அற்புதமான பாத்திரத்தில் நடித்துள்ளார். எப்போதும் போல, அஞ்சலி மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அஜு வர்கீஸ் மற்றும் விஜய் யேசுதாஸ் இருவரும் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் ஆகியவற்றில், சிறப்பான பணியைச் செய்துள்ளனர். மாஸ்டர் மிதுல் ரியானை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஒரு திறமையான இளம் நடிகரின் இயல்பான நடிப்பு நிச்சயமாகப் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும். ஹாட்ஸ்டாருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது - அவர்கள் எனது பார்வையை நம்பி, எனது திரைக்கதைக்கு முழுமையான ஆதரவு தந்தனர். ஒட்டுமொத்த குழுவிற்கும், இப்படம் ஒரு அமைதியான மற்றும் இனிமையான பயணமாக அமைந்தது,” என்று ராம் கூறினார்.
பிரபல இயக்குநர் ராமுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசிய மிர்ச்சி சிவா கூறுகையில்…,
“ராம் சாருடன் பணிபுரிந்தது ஒரு அருமையான மற்றும் சிறந்த அனுபவம். நான் எப்பொழுதும் ராம் சார் தனித்துவ மிக்கவர் என்றே சொல்வேன். அவர் நம் தமிழ் திரையுலகின் சொத்து. இந்த அருமையான வாய்ப்புக்காக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் பிரதீப் சார் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்தில் நான் கையெழுத்திட்டபோது, இந்தக் கூட்டணி எப்படி இருக்கும் என்று நிறையப் பேர் என்னிடம் கேட்டார்கள். ராம் சார் என்னை அணுகியபோது, நானும் அதே கேள்வியைத் தான் கேட்டேன்.
“இப்படத்தின் கதை அருமையாக உள்ளது. இது ஒரு சிறப்பான படைப்பாக உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும். கண்டிப்பாக அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறிய சிவா, இயக்குநர் ராமிற்கு நன்றி தெரிவித்தார்.
இயக்குநர் ராம் எழுதி இயக்கியுள்ள ‘பறந்து போ’ திரைப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்து வழங்குகிறது. செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார், இசை சந்தோஷ் தயாநிதி. மதி VS படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த படத்திற்கு, NK ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைத்துள்ளார்.
அசோக் செல்வனின் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' SUN NXT OTT தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமாகிறது
அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாகத் திரையரங்குகளில் வெற்றியைக் குவித்த படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ்.
இப்படத்தின் ஒடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், இப்படம் தமிழின் முன்னணி ஓடிடி தளமான SUN NXT ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமாகிறது.
ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என, அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக, இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நடிகர் அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார். பாடாலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார்.
ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை எதிர்நோக்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், இப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
“எமக்குத் தொழில் ரொமான்ஸ்” திரைப்படத்தை SUN NXT தளத்தின் மூலம் அனைவரும் பார்த்து ரசியுங்கள்!!
SUN NXT என்பது Sun TV Network-ன் OTT தளமாகும், இதில் 4000+ தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்கள், 30+ நேரடி தொலைக்காட்சி சேனல்கள், மற்றும் பெரும் தொகையான பிராந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை வீடியோக்கள் மற்றும் சிறப்பு உள்ளடக்கங்கள் உள்ளன.
முடியாத அளவிலான பொழுதுபோக்கை அனுபவிக்க SUN NXT-ஐ இப்போது பதிவிறக்குங்கள்:
Android: http://bit.ly/SunNxtAdroid
iOS: இந்தியா - http://bit.ly/sunNXT
உலகின் பிற பகுதிகள் - http://bit.ly/ussunnxt
அல்லது பார்வையிடவும்: https://www.sunnxt.com
இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கிங்ஸ்டன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
இசையமைப்பாளர் - பின்னணி பாடகர்- நட்சத்திர நடிகர் -தயாரிப்பாளர்- என பன்முக ஆளுமை கொண்ட ' இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராசா ராசா..' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி , சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். வசனத்தை தீவிக் எழுத, படத்தொகுப்பு பணியை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி மேற்கொள்ள, அதிரடியான சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து இருக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த டீசரை ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்ததுடன் படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராசா ராசா..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத பின்னணி பாடகரும், இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் மற்றும் பின்னணி பாடகி சுப்லாஷினி ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள். மெலோடியாக வெளியாகி இருக்கும் இந்த பாடல்... அனைத்து தரப்பு இசை ரசிகர்களின் வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் திரை உலகில் பீஷ்மரை போன்றவர் - நடிகர் கார்த்தி
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்குகிறார்.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘தண்டேல்’ வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிடுகிறார்.
இந்த நிலையில், ‘தண்டேல்’ படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, “இது எனக்கு முக்கியமான மேடை. தெலுங்கு திரையுலகிலிருந்து எனக்கு ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது. அந்த அன்பை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்பாக இதனை கருதுகிறேன். இங்கு வந்த பிறகுதான் நாக சைதன்யா என்னிடம், இந்த கதை 2018 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவம் என்று சொன்னார். கேட்பதற்கு இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. நம் ஊரில் மீன் பிடிக்கும் மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் குஜராத்திற்குச் சென்று படகில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள் என்றார். பிறகு அங்கிருந்து எப்படி தப்பித்து வந்தார்கள் என்பதை ஒரு அழகான காதல் கதையாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.
எவ்வளவு பெரிய திரில்லாக இருந்தாலும் அது டைட்டானிக்காக இருந்தாலும் அதற்குள் ஒரு லவ் ஸ்டோரி தேவைப்படுகிறது. அந்த லவ் தான் மனதில் நிற்கிறது. 20 பேரிடம் ரைட்ஸ் வாங்கி அதை ஒரு அழகான காதல் கதையாக உருவாக்கி வழங்கியிருக்கிறார்கள் என்றால் இந்த கதை மீது தயாரிப்பாளர் எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும். இந்தப் படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்த படத்தை இந்தியா முழுவதும் நம்பிக்கையுடன் வெளியிடுகிறார்கள்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இதற்கு முன் இயக்கிய படங்களும் வெற்றி படங்கள் தான். கடல் பின்னணியில் நிறைய படங்களை பார்த்திருக்கிறோம். தற்போது மீண்டும் ஒரு புதிய அனுபவத்திற்கு தயாராகி இருக்கிறோம். இதற்காக அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் திரை உலகில் பீஷ்மரை போன்றவர். திரை உலகிற்கு தயாரிப்பாளர்கள் வருவார்கள், செல்வார்கள். நீண்ட காலம் தாக்குப் பிடிப்பது கடினம். பெரிய பெரிய நிறுவனங்களே படத் தயாரிப்பு வேண்டாம் என நிறுத்திவிட்டார்கள். இந்த சூழலில் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார் அல்லு அரவிந்த். அவர் சினிமாவில் படங்களை வியாபார நுணுக்கங்களுடன் தயாரிக்கிறார். அவர் தேவி ஸ்ரீ பிரசாத் பார்த்து எப்படிடா இத்தனை ஆண்டுகளாக ஹிட்டு கொடுக்கிறாய்? என கேட்கிறார். அதை போல் நான் அவரைப் பார்த்து, எப்படி சார் தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்கிறேன். அவர் வேறு வேறு ஆட்களுடன், வேறு வேறு கூட்டணியுடன், தொடர்ந்து படங்களை பெரு விருப்பத்துடன் தயாரித்து வருகிறார். எல்லா மொழிகளிலும் படங்களை தயாரித்திருக்கிறார். சினிமா மீதான அவருடைய பற்று எனக்கு இன்று வரை ஆச்சரியத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் படங்களை தெலுங்கு திரையுலகிற்கு எடுத்துச்சென்று விளம்பரப்படுத்தும் போது அவர் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பார். ஒரு தயாரிப்பாளர் என்றால் எப்படி இருக்க வேண்டும், அவருடைய படத்தை எவ்வளவு நேசிக்க வேண்டும், படத்தை எப்படி கொண்டு மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும், நடிகர் நடிகைகளை எப்படி பாதுகாக்க வேண்டும், படத்தை தயாரிக்கத் தொடங்க தொடங்கியதில் இருந்து அந்தத் திரைப்படத்தை ரசிகர்களுக்காக திரையரங்கத்திற்கு கொண்டு சேர்க்கும் வரை எப்படி உழைக்க வேண்டும், என்பதனை அவரைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். அவரை எனக்குத் தெரியும் என்பதிலேயே நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக இந்தத் தருணத்தில் அவருக்கு மனதார வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
கருணாகரன் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். அவரும் ஒரு அற்புதமான நடிகர். அவர் தெலுங்கிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆடுகளம் நரேன் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவருக்கு தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களை வழங்கி சீரியசான நடிகராக்கிவிட்டார்கள். ஆனால் அவர் அற்புதமாக காமெடியும் செய்வார். ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் காமெடியில் கலக்கியிருப்பார்.
நான் துருக்கி நாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கும் டிஎஸ்பி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. இதுதான் அவருக்கு கிடைத்திருக்கும் புகழ். அவர் எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பார். அவருடைய ஸ்டுடியோவுக்கு சென்றால்.. இசையை பற்றி மட்டுமே பேசிக் கொண்டே இருப்பார். அவர் இந்த நாட்டிற்கு சொந்தம். அவை எப்போதும் எனர்ஜியுடன் இருக்கிறார். இதற்காகவே நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். இந்தப் படத்தின் பாடல்களும் அற்புதமாக இருக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா இசையமைப்பாளர்களுக்கும் காதல் கதை கிடைத்து விட்டால் போதும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவார்கள். இந்த திரைப்படத்திலும் டிஎஸ்பி தன் திறமையை வெளிப்படுத்தி அனைத்து பாடல்களையும் ஹிட் ஆக்கி இருக்கிறார்.
சாய் பல்லவி மிகவும் ஸ்பெஷல் ஆனவர். அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். காதலிப்பதாகட்டும்.. அதில் காதலை கொட்டி தீர்ப்பார். இதனாலேயே இளைஞர்கள் எல்லாம் உங்கள் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். நடனம் சொல்லவே வேண்டாம். வலியை கடத்துவதாக இருந்தாலும் அதிலும் முத்திரை பதிக்கிறீர்கள். வயதிற்கு மீறிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அனுபவமும் வித்தியாசமாக இருக்கிறது. அமரன் படம் பார்த்துவிட்டு உங்களிடம் பேசியிருக்கிறேன். ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியின் தியாகம் என்ன? என்று பொதுமக்களுக்கு தெரியாது. அதை அமரன் படத்தில் நீங்கள் விவரித்திருந்த விதம் அவர்களின் வலியை எங்களுக்கு புரிய வைத்தது. இதற்காக நன்றி.
நாக சைதன்யா அவருடைய தாத்தா எனக்கு தெரியும். அவரைத் தொடர்ந்து நாகார்ஜுனாவை தெரியும். அவர் 'இதயத்தை திருடாதே' படத்தை பார்த்த பிறகு.. அவரைப் போல் டிரஸ் செய்து கொள்வது.. அதேபோல் ஓடுவது. என பல முயற்சிகளை பலரும் செய்தார்கள். ஆனால் அவர் செய்த ஸ்டைலில் யாராலும் செய்ய முடியவில்லை. அவரைப் போல் அழகாக பேசவும் தெரியாது. அவருடன் தெலுங்கு திரைப்படத்தில் பணியாற்றிருக்கிறேன். நான் அங்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்வார். அவ்வளவு அக்கறையுடன் பார்த்துக் கொள்வார். அன்பை பொழிவதில் தன்னிகரற்றவர். அவருடன் பணியாற்றி 10 வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் தற்போது நான் என்ன படம் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து வைத்திருப்பார். அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வார். படம் பார்த்து பிடித்து விட்டால்.. உடனடியாக ட்வீட் செய்வார். இது போல் எனக்காக எப்போதும் அன்பு காட்டி வரும் அவருக்கு நான் திருப்பி என்ன செய்வதென்று தெரியவில்லை.
நாக சைதன்யாவை முதன் முதலில் திரையில் பார்த்த போது கூச்ச உணர்வு உள்ள ஒரு இளைஞரை அழுத்தம் கொடுத்து நடிக்க வைக்கிறார்களோ..! என தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் ஒரு அப்பாவித்தனம் தெரியும், அந்த அப்பாவித்தனத்தை தான் ஏராளமான பெண்கள் ரசிக்கிறார்கள். அவருடைய அப்பாவித்தனமும் பிடித்தது. அவருடைய அப்பாவையும் பிடித்தது. அவருடைய தாத்தாவையும் பிடித்தது. நாக சைதன்யா கடுமையாக உழைப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்தில் அவருடைய வளர்ச்சி தெரிகிறது. இந்தத் திரைப்படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் தன் உடலமைப்பையும் மாற்றி நடித்திருக்கிறார். உழைப்பு ஒரு போதும் வீண் போகாது. உங்களுடைய கடும் உழைப்புக்கு இந்த படம் சரியான பரிசை வழங்கும். இந்தப் படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
விவேகா- தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஹிட்டான பாடல்கள்- சாய் பல்லவி திரைத்தோற்றம்- உண்மை சம்பவம் - புது ஐடியா - என பல பாசிட்டிவ்வான விசயங்கள் இருப்பதால் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெரும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில், ''தண்டேல் என்றால் என்ன? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்திருக்கும். இந்திய சினிமாவில் தற்போது அனைவரும் மொழி என்ற எல்லையை கடந்து வந்து கொண்டிருக்கிறோம். தற்போது வெளியாகும் படத்தின் டைட்டில்கள் அனைவரையும் கவர்வது போல் இருக்கும். 'பாகுபலி'க்கு பிறகு இதற்கு நாம் பழகிவிட்டோம். பாகுபலி என்றால் என்ன? என்று இதுவரை யாரும் கேள்வி எழுப்பியதில்லை. அதேபோல் தண்டேல் என்பதற்கும் யாரிடமும் கேள்வி எழாமல் பெரும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். இருந்தாலும் தண்டேல் என்றால் லீடர் என இப்படத்தில் ட்ரெய்லர் மூலம் தெரிந்து கொண்டிருப்போம்.
இந்த திரைப்படத்தை பார்க்கும் போது அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பான் இந்திய அளவிலான திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல்.. ஒரு கதையை உருவாக்கி, அது பான் இந்திய ரசிகர்களுக்கு சென்றடையும் எனும் நம்பிக்கையில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கான வாய்ப்பை எங்களுடைய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியதற்காக தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத் துறையில் தயாரிப்பாளராக 10, 15 ஆண்டுகளை கடந்து செல்வது என்பது சவாலாக இருக்கும் தருணத்தில் தொடர்ந்து 50 வருடங்களாக திரைப்படங்களை வழங்கி வருகிறார் கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான அல்லு அரவிந்த். இந்த வகையில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது.
நாக சைதன்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இருக்கிறேன். ஆனால் தற்போது அவர் நடித்த படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சாய் பல்லவி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால்.. அந்தத் திரைப்படம் நன்றாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையை சாய் பல்லவி தமிழக மக்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் இந்த திரைப்படம் நன்றாக இருக்கும் என்று நானும் நம்புகிறேன். நடிகர் கருணாகரன் தற்போது பான் இந்திய நடிகராக உயர்ந்திருக்கிறார் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி அன்று திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கும் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ''ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தருணத்தில் நடிகர் கருணாகரன் இப்படத்தைப் பற்றி சொல்லி இருக்கிறார். அப்போதிருந்து இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு என்னிடமிருக்கிறது. இயக்குநர் சந்துவின் முந்தைய திரைப்படங்கள் நன்றாக இருக்கும். நாக சைதன்யா - சாய் பல்லவி போன்ற திறமையான நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடையேயான காதல் கதை. இதற்கு தனித்துவமான பின்னணி என்பதால் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
கருணாகரன் விவரிக்கும் போது நிறைய பயணம் செய்ததாக குறிப்பிட்டார். கதை நிகழும் இடத்தைப் பற்றி சொல்லும் போதும்.. அதனை முன்னோட்டத்தில் பார்க்கும் போதும்.. இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. ராக்ஸ்டாரின் பாடல்களும் நன்றாக இருந்தது. படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நடிகர் கருணாகரன் திறமையானவர். காமெடி மட்டுமல்ல அவர் எந்த கேரக்டரிலும் நடிக்கக்கூடியவர். இந்தப் படத்தின் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். அவருக்கும் தெலுங்கிலும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார்.
இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், '' மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நாக சைதன்யாவை இப்போதுதான் சந்திக்கிறேன். அவருடைய ஸ்கிரிப்ட் செலக்சன் என்பது தனித்துவமானதாக இருக்கும். நாக சைதன்யாவை கண்வின்ஸ் செய்வது கடினம்.
இந்த ஜானர் புதிது. படத்தைப் பற்றி கருணாகரன் என்னிடம் சொல்லும் போது உண்மை சம்பவத்தை தழுவி தயாரான படம் இது என்றார். படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போதே படக்குழுவினரின் கடின உழைப்பு தெரிகிறது. கடலில் படப்பிடிப்பு நடத்துவது என்பது கடினமானது. சவாலானது. ஆனால் அதனை அழகாகவும், நேர்த்தியாகவும் படமாக்கி இருக்கிறார்கள். இயக்குநருக்கும், ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நான் சாய் பல்லவியின் பெரிய ரசிகன். நான் மட்டுமல்ல ஏராளமான இயக்குநர்கள் உங்களுடைய ரசிகர்கள். நீங்கள் மீண்டும் திரையில் ஜோடியாக இணைந்திருப்பதை வரவேற்கிறேன். உங்கள் இருவரையும் திரையில் பார்க்கும்போது பாசிட்டிவ்வான எனர்ஜி இருக்கிறது.
நானும் டிஎஸ்பியும் சிறிய வயதில் இருந்து ஒன்றாக - வெட்டியாக சுற்றிக் கொண்டிருந்தோம். தற்போது தான் இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பம் பிரபலமாகி இருக்கிறது ஆனால் 90 களிலேயே தேவி ஸ்ரீ பிரசாத் - எஸ் பி பி சரண் ஆகியோர் இணைந்து இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பத்தினை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்தக் குழுவில் நான் இருந்தாலும் என்னை பாட அனுமதிக்க மாட்டார்கள். அவரும் இந்த படத்திற்காக தன்னுடைய கடும் உழைப்பை வழங்கியிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இயக்குநர் சந்து - இதற்கு முன் இயக்கிய ' கார்த்திகேயா ' உள்ளிட்ட படங்களை பார்த்திருக
வேகமாக உருவாகி வரும் அரசியல் திரில்லர் திரைப்படம் 'கராத்தே பாபு'
பல வெற்றிப் படங்களையும் 'மத்தகம்' இணையத் தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ளது.
சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் 'கராத்தே பாபு' படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாக இவர்களுடன் முக்கிய வேடங்களில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் நடிக்கின்றனர்.
படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, "அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது. உணர்வுப் பூர்வமான அரசியல் திரில்லராக இது உருவாகி வருகிறது," என்று தெரிவித்தார்.
ரவி மோகனுடன் பணியாற்றுவது குறித்து பேசிய அவர், "ஒரு முன்னணி நடிகருடன் வேலை செய்வது போல இல்லாமல் எந்த டென்ஷனும் இன்றி மிகவும் கூலாக இப்படத்தை உருவாக்கி வருகிறோம். இதற்கு காரணம் ரவி மோகன் வழங்கும் முழு ஒத்துழைப்பும், அர்ப்பணிப்பும் தான். இதை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு முதல் கட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக, திரையரங்குகளில் வெளியாகும் 'அகத்தியா'
ஜனவரி 30 2025 : மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஃபேன்டஸி-ஹாரர் த்ரில்லர், திரைப்படம் ‘அகத்தியா’ , ஜனவரி 31 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , தற்போது பிப்ரவரி 28 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்பட குழுவினர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் விரிவான VFX வேலைகளை மேம்படுத்துவதில் தயாரிப்பு குழு கவனம் செலுத்துவதால் தாமதம் ஏற்படுகிறது, இது பார்வையாளர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும், அதுமட்டுமின்றி இது ஒரு புதுவிதமான அனுபவத்தை உறுதி செய்யும். உலகத் தரம் வாய்ந்த சினிமா காட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தாமதம், என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பா.விஜய் இயக்கிய அகத்தியா படத்தில் ஜீவா, ராஷி கண்ணா, யோகி பாபு, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் இப்படம், ஃபேன்டஸி-ஹாரர் விரும்பும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளது.
அகத்தியா , ஒரு திரைப்படம், என்பதை விட மேலானது - இது கற்பனை, திகில் மற்றும் ஆழமான , உணர்ச்சிகரமான கதைசொல்லல் ! ஆகியவற்றின் பிடிமான கலவையாகும். கண்கவர் காட்சியமைப்புகள், மனதைக் கவரும் இசையமைப்பு மற்றும் தீவிரமான கதையுடன், அகத்தியா திரைப்படம் சினிமா அனுபவங்களை மறுவரையறை செய்ய தயாராக உள்ளது. பார்வையாளர்கள் புதுவிதமாக மாறுபட்ட கற்பனைக் கூறுதல் மற்றும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழுத்தமான கதைக்களம் நிரம்பிய ஒரு எட்ஜ்-ஆஃப்-தி-சீட் த்ரில்லரை எதிர்பார்க்கலாம்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் டாக்டர் கே. ஐசரி கணேஷ், மற்றும் WAM India நிறுவனத்தின் தயாரிப்பாளர் அனீஸ் அர்ஜுன் தேவ் தயாரிக்கும் இத்திரைப்படம் , பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்கும் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. காமெடி, திகில் என பல சுவாரசிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பலவிதமான சவால்கள் மற்றும் எல்லைகளை கடந்து திரைப்படத்தின் காட்சி கலைத்திறன் மேலோங்கி நிற்கிறது, அதுமட்டுமின்றி ஒரு லட்சிய ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது. தயாரிப்புக் குழுவினர்களின் உழைப்பால் இப்படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் இணையற்ற பிரம்மாண்டத்தின் காட்சிகளை தங்களுக்கு வழங்க காத்திருக்கிறது.
ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் மற்றும் உணர்ச்சிகளின் தனித்துவமான கலவையுடன் , பாரம்பரிய வகைகளை தாண்டிய அகத்தியா திரைப்படம் வரும் பிப்ரவரி 28 2025 அன்று திரையிடப்படும் போது மறக்க முடியாத ஒரு அனுபவத்திற்கு தயாராகுங்கள்
ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகும் ரொமாண்டிக் திரில்லர் 'தருணம்'
ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.
தேஜாவு திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார்.
வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால், ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
தமிழ்த்திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன், பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயர்தரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்.
ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, உலகமெங்கும் எண்ணற்ற திரையரங்குகளில் வெளியாகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா