சற்று முன்
சினிமா செய்திகள்
ஆன்லைனில் படங்களை வெளியிட திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் முடிவு
Updated on : 02 May 2016
பிட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்.
இந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது தனது புதிய முயற்சி ஒன்றை செயல்படுத்தவுள்ளது. சிறந்த கதையம்சமுள்ள படங்களை தேர்வு செய்து ஆன்லைனில் வெளியிடவுள்ளது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.
இதன் முதல் கட்டமாக, அம்சத் மற்றும் லக்ஷ்மி பிரியா நடித்துள்ள "இஃக்லூ" என்னும் படத்தை வரும் ஜூன் மாதம் ஆன்லைனில் வெளியிட ஆயுத்தமாகியுள்ளது.
பரத்மோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
சமீபத்திய செய்திகள்
உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’
தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் சர்வதேச திரைப்படங்களுடன் ஒப்பிடும் வகையிலான அனிமேஷன் காட்சிகளுடன் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள *‘மிஷன் சாண்டா’* திரைப்படம், உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாகிறது.
வண்ணமிகு, மாயாஜாலம் நிறைந்த பெரிய திரை அனுபவமாக, விடுமுறை காலத்தில் குடும்பத்துடன் கண்டு களிப்பதற்கான திரைப்படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள *‘மிஷன் சாண்டா’*, பிரம்மாண்ட காட்சிகள், வேகமான திரைக்கதை மற்றும் கவர்ந்திழுக்கும் அனிமேஷன் மூலம் நம்பிக்கை, தைரியம் மற்றும் ஒற்றுமை போன்ற மதிப்புகளை கொண்டாடுகிறது. குடும்பத் திரைப்படங்கள் அரிதாக வெளியாகும் காலகட்டத்தில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சரியான நேரத்தில் இப்படம் திரையரங்குகளை அலங்கரிக்கிறது.
இந்திய அனிமேஷன் துறையின் முக்கிய மைல்கல்லாக திகழவுள்ள *‘மிஷன் சாண்டா’* திரைப்படத்தின் முழு அனிமேஷனும் இந்திய கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கதை, திரைக்கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்புகளை லாஸ் ஏஞ்சல்ஸை தலைமையிடமாகக் கொண்ட கியூரியாசிட்டி இங்க் மீடியா உருவாக்கியிருந்த நிலையில், அனிமேஷன் தயாரிப்புப் பொறுப்பை பெங்களூரைச் சேர்ந்த *ஸ்டுடியோ56 அனிமேஷன்* தலைமை ஏற்றது. ஜெர்மனியைச் சேர்ந்த டூன்2டாங்கோ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்தப் படம், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உலகளாவிய நிபுணர்களின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.
*ஸ்டுடியோ56-ஐ சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட திறமைமிக்க அனிமேஷன் கலைஞர்கள், கிட்டத்தட்ட 20 மாதங்கள் இப்படத்தில் பணியாற்றினர். உலகளாவிய நிபுணர்களுடன் இணைந்து செயல்பட்டு, அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பிற்கான உலகளாவிய மையமாக **இந்தியா* வளர்ந்து வரும் பயணத்தில் இவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
இதிலும் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்துவது, இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தஞ்சாவூரில் பிறந்து, திருச்சிராப்பள்ளியில் வளர்ந்த தொழில்முனைவோர் *ஸ்ரீராம் சந்திரசேகரன்* என்பதுதான்.
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஊக்கத்தால் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில், ஸ்ரீராம் 2008ஆம் ஆண்டு *Broadvision Kids & Family* நிறுவனத்தை நிறுவினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
“கடந்த 17 ஆண்டுகளில், அனிமேஷன் துறையில் நாம் படிப்படியாக வளர்ந்துள்ளோம். உள்ளூர் விளம்பரங்களிலிருந்து தொடங்கி, இன்று உலகத் தரத்தில் அனிமேஷன் முழுநீள திரைப்படங்களை உருவாக்கும் முன்னணி ஸ்டூடியோக்களில் ஒன்றாக உயர்ந்துள்ளோம். உண்மையில், தமிழ்நாடு உலகின் சிறந்த அனிமேஷன் திறமைகளை உருவாக்கும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. எங்களுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வரும் எங்கள் அனிமேஷன் இயக்குநர் ஹரிஷ், லேஅவுட் இயக்குநர் அஷ்வின், காம்போசிட்டிங் இயக்குநர் கார்த்திகேயன், அனிமேஷன் மேற்பார்வையாளர் பாலாஜி ஆகியோர் பெங்களூரு, சென்னை, மதுரை மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழர்கள்,” என்றார்.
இந்தப் படம் குறித்துப் பேசிய Broadvision நிறுவனத்தின் தயாரிப்பாளரும் நிர்வாக இயக்குநருமான திருமதி கௌரி ஸ்ரீராம்,
“*‘மிஷன் சாண்டா’* இந்திய அனிமேஷன் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவும், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் இருக்கும். 44-க்கும் மேற்பட்ட உலகளாவிய தயாரிப்புகள் மற்றும் பல சர்வதேச விருதுகளுடன் வெற்றி பயணம் மேற்கொண்டு வரும் Broadvision Kids & Family, இப்போது டிஸ்னி தரத்திலான கதை சொல்லும் பாணியை இந்த கிறிஸ்துமஸ் அன்று இந்தியக் குடும்பங்களுக்கு பெரிய திரையில் கொண்டு வருகிறது,” என்றார்.
அதிரடி காட்சிகள், நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பிரம்மாண்ட அனிமேஷன் ஆகியவற்றுடன், *‘மிஷன் சாண்டா’* ஒரு மகிழ்ச்சியான சினிமா விடுமுறை அனுபவத்தை வழங்குவதோடு, இந்திய அனிமேஷன் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும் அமைந்துள்ளது.
குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்
எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர்.
பிரபல இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய குரு சரவணன், பின்னர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் அவரையே நாயகனாக வைத்து 'கூகுள் குட்டப்பா' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது மூன்றாவது படைப்பாக இந்த புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார்.
இரட்டை நாயகர்கள் கொண்ட இந்த படத்தில், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நண்பன் கதாப்பாத்திரங்களில் நடித்தவரும், 'கன்ஜூரிங் கண்ணப்பன்', 'சட்டம் என் கையில்' போன்ற படங்களின் மூலம் நாயகனாக தன்னை நிலைநாட்டியவருமான சதீஷ் குமார், ஆக்ஷன் கலந்த முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான கதை அமைப்பைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் இந்த படத்திலும் அதை நிரூபித்துள்ளார்.
இந்த படத்தின் மூலம் மற்றொரு கதாநாயகனாக, பிரபல தெலுங்கு நடிகர் சாய் குமாரின் மகனும், தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஹிட் ஆக்ஷன் கதாநாயகனாக அறியப்பட்டு, 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவருமான ஆதி சாய் குமார், தமிழ் திரையுலகில் முதல் முறையாக அறிமுகமாகிறார்.
'பீஸ்ட்', 'லியோ' போன்ற படங்களின் மூலம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகங்களிலும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, படத்தின் வித்தியாசமான கதைக்களத்தால் கவரப்பட்டு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
'உலக நாயகன்' கமல்ஹாசன் நடித்த பல படங்களுக்கு இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க, தமிழின் முன்னணி படங்களுக்கு கலை இயக்கம் செய்த துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் ஜி. சுரேஷ் தயாரிப்பில் குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.
வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!
இந்திய ரசிகர்கள் கொண்டாடும் இருபெரும் துறைகளான சினிமா மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றை ஒரே புள்ளியில் இணைக்கும் பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) திகழ்கிறது. நாடெங்கும் உள்ள முக்கிய நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு அணிகளுடன், இந்த லீக் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த அணியின் உரிமையாளர்களாக திரைத்துறை பிரபலங்கள் உள்ள நிலையில், சென்னை அணியை வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் & வேல்ஸ் குழுமங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் நடிகை-தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீப்ரியா ராஜ்குமார் இணைந்து வாங்கியுள்ளனர்.
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருபவருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் இந்த இரு துறைகளும் இணையும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் சென்னை அணியை திருமதி ஸ்ரீப்ரியா ராஜ்குமார் உடன் இணைந்து வாங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
சென்னையில் இன்று மாலை நடைபெற்ற வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழாவில், நடிகர் சரத்குமார் மென்டர் ஆகவும், நடிகை மீனா பிராண்ட் அம்பாசிடர் ஆகவும், நடிகர் ஆர்யா அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டனர். மேலும் பல முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் அணியில் இணைந்துள்ளனர்.
பிரபல கல்வியாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் குழுமத்தை கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் வலுவான இருப்பைக் கொண்ட ஒரு பன்முக நிறுவனமாக வளர்த்துள்ளார். இந்த அணியின் இணை உரிமையாளரான பிரபல நடிகை-தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீப்ரியா ராஜ்குமார், நடிப்பு, திரைப்பட தயாரிப்பு, இயக்கம், சமூகப் பணி மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் பன்முகத் திறமை கொண்டவராக திகழ்கிறார்.
சென்னையில் இன்று நடைபெற்ற வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக நிகழ்ச்சியில் , வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் & வேல்ஸ் குழுமங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், நடிகை-தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீப்ரியா ராஜ்குமார், கிரிக்கெட் வீரர்கள் லட்சுமிபதி பாலாஜி மற்றும் முரளி விஜய், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நிறுவனர் விஷ்ணு இந்தூரி, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார், நடிகை மீனா, வேல்ஸ் குழும நிறுவனங்களின் துணைத் தலைவர் குஷ்மிதா கணேஷ், ஸ்ரீப்ரியா ராஜ்குமார் – ராஜ்குமார் சேதுபதி தம்பதியின் மகன் நாகார்ஜுனா சேதுபதி, நாடாளுமன்ற உறுப்பினரும் போஜ்புரி அணியின் கேப்டனுமான மனோஜ் திவாரி, வங்காள அணியின் உரிமையாளர்கள் போனி கபூர் மற்றும் ராஜ் ஷா, பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் புனித் சிங் மற்றும் நவராஜ் ஹன்ஸ், கேரள அணியின் கேப்டன் உன்னி முகுந்தன், தெலுங்கு அணியின் கேப்டன் சச்சின் ஜோஷி மற்றும் தெலுங்கு அணியின் முக்கிய விரரும் இசையமைப்பாளருமான தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்
பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்து 'கராத்தே பாபு' திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் 'கராத்தே பாபு' படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகி வரும் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதை குறிக்கும் வகையில், ரவி மோகன் டப்பிங் பேசும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த காணொலியில் அவர் பேசும் அரசியல் வசனம் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
'கராத்தே பாபு' திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பும் இடைவிடாமல் நடைபெற்று வரும் நிலையில், டீசர் வெகு விரைவில் வெளியிடப்படும் என்றும் படத்தை உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் விரைவில் வெளியிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, "அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது. உணர்வுப் பூர்வமான அரசியல் திரில்லராக இது உருவாகி வருகிறது," என்று தெரிவித்தார்.
'வித் லவ்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் ரொமான்ஸ் மெலடி பாடல்!
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படமான வித் லவ் ( With Love ) படத்திலிருந்து முதல் சிங்கிளான “ஐயோ காதலே” ரொமான்ஸ் மெலடி பாடல் வெளியாகியுள்ளது.
முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்பாடலை தன் சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.
பள்ளி நாட்களின் இனிய நினைவுகளை ஞாபகப்படுத்தும், ஒரு ஜாலியான, மனதுக்கு நெருக்கமான உணர்வை தரும் இப்பாடல், கேட்டவுடன் அந்த இசைக்குள் நம்மை ஈர்த்துக் கொள்கிறது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள மனதை மயக்கும் இந்த அற்புதமான மெலடி பாடலை, மோகன் ராஜன் எழுதியுள்ளார். விஜய்நரேன் பாடியுள்ளார்.
முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகிவரும் “வித் லவ் ( With Love )” படத்தில், டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார். “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.
மோகன்லாலின் ‘விருஷபா’ பட பாடலை, கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டார்!
பான்-இந்தியா அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘விருஷபா ’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, பெங்களூருவில் வெகு கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கர்நாடக மாநிலத்தின் மதிப்பிற்குரிய துணை முதல்வர் திரு.D.K.சிவகுமார் கலந்துகொண்டு, பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அவரது பங்கேற்பு விழாவுக்கு தனித்துவமான பெருமையும் மரியாதையும் சேர்த்தது.
பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் பெற்ற நடிகர் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘விருஷபா ’ திரைப்படம், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றாகும். சமர்ஜித் லங்கேஷ் மற்றும் நயன் சாரிகா நடித்துள்ள இந்தப் புதிய பாடல், இளமையும், காதல்,உணர்வுகளும் நிறைந்த மென்மையான ரொமான்டிக் பாடல். இப்பாடல் வெளியான கணத்திலிருந்தே ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.
பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய துணை முதல்வர் திரு. D.K.சிவகுமார், படத்தின் தலைப்பின் அர்த்தத்தை உணர்ச்சிப்பூர்வமாக விளக்கினார். ‘விருஷபா ’ என்றால் ‘காளை’ என்றும், அது வலிமை, உறுதி மற்றும் நேர்மறை சக்தியை குறிக்கிறது என்றும் அவர் கூறினார். தனது கையில் உள்ள காளை டாட்டூவை குறிப்பிட்டு, இப்படம் வலிமையுடனும், வெற்றியுடனும் அமைய கடவுளிடம் பிரார்த்தித்ததாக பகிர்ந்து கொண்டார்.
2025 டிசம்பரில் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுக்குத் தயாராகும் ‘விருஷபா ’ படம், மிகுந்த நேர்மறை ஆற்றலைக் கொண்டதாக அவர் தெரிவித்தார். கர்நாடக மக்களின் சார்பில் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர், தயாரிப்பாளர்கள் முதலீட்டை மீட்டெடுத்து லாபம் ஈட்டி, மேலும் நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
மேலும், மோகன்லாலின் ‘விருஷபா ’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும், இளம் நடிகர் சமர்ஜித் லங்கேஷ்க்கு 2026 வெற்றிகரமான ஆண்டாக அமையும் என்றும் வாழ்த்தினார். கன்னட திறமைகளை பான்-இந்திய அளவில் கொண்டு செல்லும் படக்குழுவின் முயற்சியைப் பாராட்டிய அவர், இளம் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் முழு ‘விருஷபா ’ குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். இந்தப் பாடல் வெளியீடு, ‘விருஷபா ’ படத்தின் விளம்பரப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
நந்த கிஷோர் ( Nanada Kishore ) இயக்கியுள்ள ‘விருஷபா ’ படத்தில் மோகன்லால், சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவேதி, நயன் சாரிகா, அஜய், நேஹா சக்ஷேனா(Neha Saxena) கருடா ராம், வினய் வர்மா, அலி, அய்யப்பா P.ஷர்மா மற்றும் கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப குழுவில் இசை – சாம் CS, ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி, வசனங்கள் – எஸ்.ஆர்.கே., ஜனார்தன் மகரிஷி, கார்த்திக், ஒளிப்பதிவு – ஆன்டனி சாம்சன், சண்டை பயிற்சி – பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, கணேஷ் குமார், நிகில் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
கனெக்ட் மீடியா ( Connekkt Media )மற்றும் பாலாஜி டெலிபிலிம்ஸ் (Balaji Telefilms Ltd), அபிஷேக் S வியாஸ் ஸ்டுடியோஸ் (Abishek S Vyas Studios) நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, ஷோபா கபூர், ஏக்தா R கபூர், CK பத்மகுமார், வருண் மாதுர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் S. வியாஸ், ப்ரவீர் சிங், விஷால் குர்னானி, ஜூஹி பாரேக் மேத்தா ஆகியோர் தயாரிக்கின்றனர். இணை தயாரிப்பு – விமல் லஹோதி.( Vimal Lahoti)
தந்தை-மகன் உறவின் ஆழமான பிணைப்பைக் கொண்டாடும் வகையில், உணர்ச்சி, பிரம்மாண்டம் மற்றும் அதிரடி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு காவியமான திரைப்பயணமாக ‘விருஷபா ’ உருவாகியுள்ளது. மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகிறது.இப்படம் உலகம் முழுக்க வரும் நவம்பர் 6, 2025 வெளியாகிறது.
யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல் ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரபூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெளியீடு, படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.
பல்வேறு ஜானர்களில் தனது திறமையை நிரூபித்து, இந்தி திரையுலகின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக நிலைபெற்றுள்ள கியாரா அத்வானி, இந்தப் படத்தில் முற்றிலும் புதிய பரிமாணத்தில் தோன்றுகிறார். இயக்குநர் கீத்து மோகன்தாஸ் உருவாக்கியுள்ள தீவிரமான, கச்சிதமான உலகத்தில், கியாராவின் இந்த பாத்திரம் அவரது திரைப்பட வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘நாடியா’வின் ஃபர்ஸ்ட் லுக், வண்ணமயமான சர்க்கஸ் பின்னணியில், கவர்ச்சியான தோற்றத்தில் கியாராவை காட்டுகிறது. ஆனால், நுணுக்கமாக கவனித்தால், அந்த பிரகாசத்தின் அடியில் ஒரு ஆழமான துயரம், வேதனை மற்றும் மனவலி மறைந்திருப்பது தெளிவாகிறது. இதனால், ‘நாடியா’ என்பது ஒரு வழக்கமான கதாபாத்திரமல்ல; நடிகையின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும், வலுவான, உணர்ச்சி மிக்க பாத்திரம் என்பதற்கான வெளிப்பாடாக இந்த ஃபர்ஸ்ட் லுக் அமைந்துள்ளது.
கியாராவின் நடிப்பைப் பற்றி இயக்குநர் கீத்து மோகன்தாஸ் கூறியதாவது..,
“சில கதாப்பாத்திரத்தின் நடிப்பு, ஒரு திரைப்படத்திற்குள் மட்டும் சுருங்கி விடாது; அவை ஒரு கலைஞரையே மறுபரிசீலனை செய்யக்கூடியதாக இருக்கும். இந்தப் படத்தில் கியாரா திரையில் உருவாக்கியிருப்பது உண்மையிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. ஒரு இயக்குநராக, அவர் இக்கதாப்பாத்திரத்தை திரையில் கொண்டு வந்த விதத்திற்கும், அவரது நம்பிக்கைக்கும், மனப்பூர்வமான அர்ப்பணிப்பிற்கும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.”
KGF: Chapter 2 மூலம் பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, யாஷ் மீண்டும் பெரிய திரைக்கு திரும்பும் படம் ‘டாக்ஸிக்’. மேலும், KGF வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்த தருணத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.
யாஷ் மற்றும் கீத்து மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படம், கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ரவி பஸ்ரூர் இசையையும், உஜ்வல் குல்கர்ணி எடிட்டிங்கையும், T.P.அபித் புரொடக்ஷன் டிசைன் கவனிக்கின்றனர். ஆக்ஷன் காட்சிகளுக்கு ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் J.J. பெரி (John Wick) மற்றும் தேசிய விருது பெற்ற அன்பறிவ் இணை இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர்.
வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் மார்ச் 19-ம் தேதி, ஈத், உகாதி, குடி பட்வா ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்
Suraj Production சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர் சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் B. ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “45”.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் திரைப்படமான ‘45’ படத்தின் தமிழ்ப்பதிப்பு வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. AGS Entertainment நிறுவனம் இப்படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் தமிழின் முன்னணி நடிகர் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இவ்விழாவில்…
தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி பேசியதாவது…
படத்தின் டிரெய்லர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். சிவாண்ணா, ராஜ் B. ஷெட்டி சூப்பராக நடித்துள்ளனர், உபேந்திரா கலக்கியுள்ளார். அர்ஜுன் ஜான்யா இப்படத்தை அற்புதமாக உருவாக்கியுள்ளார். படத்தைப் பற்றி என்னைவிட அவர்கள் தான் சொல்ல வேண்டும். இங்கு படத்தை வாழ்த்த வந்துள்ள விஜய் ஆண்டனி அவர்களுக்கு நன்றி. படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…
சிவாண்ணா அவர்களின் ரசிகன் நான். அவர் மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர்; ஆனால் அதை வெளியில் எங்கும் காட்டிக்கொள்ள மாட்டார். அவர் பற்றி சமீபத்தில் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அவருக்கு கேன்சர் வந்தது. இப்படி ஒரு சூழ்நிலை வந்தால் எல்லோரும் உடைந்து விடுவோம், குடும்பத்தோடு இருக்க ஆசைப்படுவோம். ஆனால் சிவாண்ணா தயாரிப்பாளரை அழைத்து, இன்னும் மீதமுள்ள ஷூட்டிங்கை முடித்து விடுங்கள், டப்பிங் எடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். அவரின் அர்ப்பணிப்பிற்கும் நேர்மைக்கும் தலை வணங்குகிறேன்.
உபேந்திரா அவர்களுடன் ஒரு படத்தில் வேலை செய்துள்ளேன். அவர் இயக்கத்திற்கு நான் ரசிகன். ராஜ் B. ஷெட்டியின் சமீபத்திய படங்கள் அற்புதமாக இருக்கின்றன. அவர் தமிழில் படம் செய்ய வேண்டும். 20 வருடம் இசையமைப்பாளராக இருந்த அர்ஜுன் ஜான்யா படத்தை மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். டிரெய்லர் பார்த்தேன், அட்டகாசமாக இருந்தது. நிறைய CG இருந்தது. தயாரிப்பாளர்கள் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி.
இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா பேசியதாவது…
ஒரு இசையமைப்பாளராக இருந்து இயக்குநராக ஆனால் என்ன ஆகும் என புரிந்து கொள்ளும் விஜய் ஆண்டனி இங்கு வந்து வாழ்த்தியதற்கு என் நன்றி. டாக்டர் சிவராஜ்குமார் அண்ணா சொன்னதால் தான் நான் இன்று இப்படத்தை இயக்கினேன். நான் இயக்குநராக காரணம் அவர் தான். அவருக்கு என் நன்றி. இயக்குநர் சக்கரவர்த்தி உபேந்திரா அவர்களின் ரசிகன் நான். அவர் என்னை நம்பி கதை கேட்டு, இதில் ஒரு பாத்திரத்தில் அற்புதமாக நடித்துத் தந்தார்.
ராஜ் B. ஷெட்டி கர்நாடகாவின் பெருமை. அவர் இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி முழுமையாக நம்பி இப்படத்தைத் தாங்கியுள்ளார். அவருக்கு என் நன்றிகள். நான் ஒரு ரசிகனாகத்தான் இந்த மூன்று பேரையும் இயக்கியிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன். நன்றி.
நடிகர் வின்செண்ட் அசோகன் பேசியதாவது…
என் நீண்டகால நெருங்கிய நண்பன் சிவராஜ்குமார். அவருக்காகத்தான் நான் இந்த விழாவிற்கு வந்துள்ளேன். அவர் ரசிகன் நான். அவருடன் படம் நடித்துள்ளேன். ஒரு நண்பரை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் சிவராஜ்குமார் தான். என் அப்பா இறந்த போது அவர் படம் நடித்து பெரிய ஹீரோ; ஆனால் எனக்காக ஓடோடி வந்தார். அவர் மனதுக்கு நன்றி.
உபேந்திரா அவர்களின் படங்களுக்கு நான் ரசிகன். அர்ஜுன் ஜான்யா படத்தை மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகர் ராஜ் B. ஷெட்டி பேசியதாவது…
தமிழ் ரசிகர்களின் அன்புக்கு நன்றி. தமிழ் மக்கள் கலாச்சாரத்தில் சினிமா கலந்துள்ளது. அவர்கள் சினிமாவை கொண்டாடுகிறார்கள். சிவாண்ணாவை ஜெயிலர் படத்திலும், உபேந்திராவை கூலி படத்திலும் கொண்டாடினார்கள். நல்ல சினிமா இங்கு கொண்டாடப்படும். தமிழ் சினிமா கர்நாடகாவிலும் கொண்டாடப்படுகிறது.
அர்ஜுன் ஜான்யா மூன்று வருடம் இப்படத்திற்காக உழைத்துள்ளார். நானும் இயக்குநர்தான்; ஆனால் அவர் உழைப்பைப் பார்த்துப் பொறாமைப்பட்டேன். தயாரிப்பாளர் இப்படத்தைத் தோள்மீது தாங்கியுள்ளார். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடிகர் உபேந்திரா பேசியதாவது…
நான் சிவாண்ணா பேச்சைக் கேட்க ஆர்வமாக உள்ளேன். விஜய் ஆண்டனி இங்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி. அவருடன் நான் வேலை பார்த்துள்ளேன்; அவருடைய வளர்ச்சி எனக்குப் பெரிய மகிழ்ச்சி. இயக்குநர் அர்ஜுன் ஜான்யா இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்துள்ளார். தயாரிப்பாளர் இப்படத்தில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார்.
ராஜ் B. ஷெட்டி அற்புதமாக நடித்துள்ளார். சிவாண்ணா எனக்கு ஓம் படம் மூலம் பிரேக் தந்தவர். இதில் கலக்கியுள்ளார். இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது…
நான் விஜய் ஆண்டனி ரசிகன். அவர் சினிமாவில் எல்லா வேலையும் செய்துள்ளார். அவரின் பிச்சைக்காரன் படத்தின் ரீமேக் வாய்ப்பு எனக்கு வந்தது; ஆனால் அதை மிஸ் செய்து விட்டேன். மீண்டும் அவரின் வேறு படத்தில் நடிக்கக் காத்திருக்கிறேன்.
வின்செண்ட் சின்ன வயதிலிருந்து என் நண்பர்; அவர் என் சகோதரர் போலத்தான். ரமேஷ் ரெட்டிக்கு என் நன்றி. அறிமுக இயக்குநருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு தந்துள்ளார். நான் தான் முதலில் கதை கேட்டேன்; என்னை நம்பி பெரிய செலவு செய்துள்ளார்.
அர்ஜுன் ஜான்யா இப்படத்தில் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். என்னிடம் கதை சொன்ன போது எல்லா கேரக்டர்களையும் நடித்தே காட்டிவிட்டார். இப்போது இயக்குநராகியுள்ளார்; விரைவில் நடிகராக ஆகிவிடுவார். உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை; அவர் தான் எனக்கு பிரேக் தந்தார். அவர் அட்டகாசமான கலைஞன். ராஜ் B. ஷெட்டி சமீபமாக கலக்கி வருகிறார். அவர் நல்ல இயக்குநர், நல்ல எழுத்தாளர். எங்கள் மூன்று பேரின் கெமிஸ்ட்ரி படத்தில் அட்டகாசமாக வந்துள்ளது. இது ஒரு தனி உலகம்; படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.
ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணக் காத்திருக்கும் ‘45’ திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பு 01-01-2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. AGS Entertainment நிறுவனம் இப்படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
டிசம்பர் 24 முதல் ZEE5-ல் 'மிடில் கிளாஸ்'!
இந்த பண்டிகைக் காலத்தில், ZEE5 தமிழ் ரசிகர்களுக்காக மனதைக் கொள்ளை கொள்ளும், சிரிப்பும் உணர்வும் கலந்த ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையின் கதையை கொண்டு வருகிறது. மிடில் கிளாஸ், எனும் தமிழ் காமெடி - டிராமா திரைப்படம், டிஜிட்டல் பிரீமியராக, டிசம்பர் 24 முதல் ZEE5-ல் வெளியாகிறது. கிஷோர் M. ராமலிங்கம் இயக்கத்தில், தேவ் மற்றும் K.V. துரை தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில், காளி வெங்கட், முனிஷ்காந்த், விஜயலட்சுமி மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“மிடில் கிளாஸ்” திரைப்படம், நடுத்தர வர்க்க வாழ்க்கையின் அன்றாட நடைமுறை சிக்கல்களை, ஒரு மனிதன் நீண்ட காலமாக சுமந்து வந்த கனவை அடைய முயலும் பயணத்தை, நகைச்சுவையும் உணர்ச்சியும் கலந்து சொல்லுகிறது. ஆசைகள், அழுத்தங்கள், குடும்ப உறவுகள் மற்றும் குழப்பங்கள் இவை அனைத்தையும் இயல்பாகப் பிரதிபலிக்கும் இப்படம், சிரிப்போடு சேர்த்து மனதையும் நெகிழ வைக்கிறது.
கதையின் மையத்தில், சாதாரண மனிதர்களின் ஆசைகள், ஒரு குடும்பத்தின் அன்றாட இயக்கங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இடம்பெறுகின்றன. அதிகமாக வெளிப்படுத்தாமல் சொல்ல வேண்டுமெனில், கனவும் நிஜமும் மோதும் இடங்களில் உருவாகும் சூழல்கள், சில சமயம் கலகலப்பாகவும், சில சமயம் மனதைத் தொடுவதாகவும் அமைகின்றன. எளிமையும் உண்மையும் தான் இப்படத்தின் பலம்.
இப்படம் குறித்து முனிஷ்காந்த் கூறியதாவது..,
“மிடில் கிளாஸ்” படம் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கை மற்றும் கனவுகளை பிரதிபலிப்பதால், பார்வையாளர்களுடன் எளிதாக இணையும். இப்படத்தின் நகைச்சுவை நிஜமான வாழ்க்கையிலிருந்து வருகிறது. அது தான் இப்படத்தை சிறப்பாக்குகிறது. என் கதாபாத்திரத்தில் நடித்தது அருமையான அனுபவமாக இருந்தது. இப்படத்தில் நகைச்சுவைக்கு இணையாக உணர்ச்சிப்பூர்வமான தருணங்களையும் ரசிகர்கள் ரசிப்பார்கள். இந்த பண்டிகைக் காலத்தில் ZEE5-ல் படம் வெளியாகிறது என்பது பெரும் மகிழ்ச்சி.”
இந்த கிறிஸ்துமஸில் மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரைத் தவறவிடாதீர்கள் — டிசம்பர் 24 முதல் ZEE5-ல் மட்டும்.
'தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்' என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்
பாகுபலி, சலார் , கல்கி 2898 ஏடி போன்ற மெகா ஹிட் படங்கள் மூலம் கொண்டாடப்படும், உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராக போற்றப்படும் பான்-இந்திய ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இன்று தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவலை ஒரு அற்புதமான அறிவிப்பு வீடியோ மூலம் அறிமுகப்படுத்தினார்.
தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பையும், புகழ் பெரும் வாய்ப்பையும் வழங்கி, கனவுகளை சினிமா வாழ்க்கையாக மாற்றும் புதிய காலத்தை உருவாக்குகிறது.
இந்த புரட்சிகர தளத்தை தனிப்பட்ட முறையில் ஆதரித்த பிரபாஸ், திரைப்பட உருவாக்கத்தை ஜனநாயகப்படுத்தும் இதன் சக்தியை வலியுறுத்தி பேசியுள்ளார்.
“தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்,” என்று அவர் அந்த வீடியோவில் பகிர்ந்தார்.
மேலும் அவர் பகிர்ந்துகொண்டதாவது:
ஒவ்வொரு குரலும் ஒரு ஆரம்ப வாய்ப்புக்கு தகுதியானது.
ஒவ்வொரு கனவுக் கதைக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டியது அவசியம்.
#TheScriptCraft சர்வதேச குறும்பட திரைப்பட விழா இது இங்கே உங்களுக்காக,
உலகம் முழுவதிலிருந்தும் கதை சொல்லிகளை தங்கள் பயணத்தைத் தொடங்க அழைக்கிறது.
பாரம்பரிய போட்டிகளிலிருந்து மாறுபட்டு, இந்த விழா உலகின் எந்த மூலையிலிருந்தும் கதை சொல்லிகளை ஆதரிக்கிறது. 2 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட குறும்படங்கள், எந்த ஜானரிலும், 90 நாட்கள் போட்டி காலத்தில் பங்கேற்கலாம். பார்வையாளர்களின் வாக்குகள், லைக்ஸ் மற்றும் ரேட்டிங்ஸ் அடிப்படையில் முதல் மூன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதே சமயம், சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு படமும், புதிய திறமைகளை தேடி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை பெறும்.
அந்த வீடியோவில் பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கூறியுள்ளதாவது :
“ஒரு திரைப்பட இயக்குநராக உருவாக குறும்படம் எடுப்பதே மிக முக்கியமான அம்சம். காகிதத்தில் நீங்கள் எழுதுவது மற்றும் திரையில் நீங்கள் உருவாக்குவது — இரண்டும் முற்றிலும் வேறு வேறு யதார்த்தங்கள். சாதிக்க ஆசைப்படும் இயக்குநர்களுக்கு இது சரியான நேரம். பதிவு செய்து இதை முழுமையாக பயன்படுத்துங்கள்.”
இயக்குநர் நாக் அஸ்வின் கூறியதாவது :
“YouTube-ல் பார்த்த ஒரு குறும்படம் மூலமாகத்தான் நான் அனுதீப்பை கண்டுபிடித்தேன். அதிலிருந்தே ‘ஜதி ரத்னாலு’ படம் உருவானது. ஒரு திரைப்பட பள்ளியை விட, உங்கள் வேலை மற்றும் அதைப் பற்றிய உங்கள் புரிதலே மிகவும் முக்கியம். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி, உங்கள் படங்களை சமர்ப்பித்து, சிறந்ததை சாதிக்க வேண்டும்.”
இயக்குநர் ஹனு ராகவபுடி மேலும் கூறியதாவது:
“பல இளைஞர்களுக்கு திரைப்படத் துறையில் நுழைந்து இயக்குநராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. உங்கள் பார்வையை வெளிப்படுத்துங்கள், உங்கள் கனவுகளை வெல்லுங்கள். வாழ்த்துகள்.”
ஒரு பிரத்யேக கூட்டணியாக, புதிய இயக்குநர்களுக்கான கூட்டாளியாக க்விக் டிவி இதில் இணைகிறது. க்விக் டிவியின் ஜூரி 15 சிறந்த திரைப்படக் கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையாக நிதியளிக்கப்படும் 90 நிமிட திரைப்பட ஸ்கிரிப்ட், முழு தயாரிப்பு ஆதரவு மற்றும் க்விக் டிவி தளத்தில் உலகளாவிய பிரீமியர் வழங்கப்படும். இதன் மூலம் 15 படைப்பாளிகள் குறும்படங்களில் இருந்து நேரடியாக தொழில்முறை திரைப்பட இயக்குநர்களாக, சர்வதேச அளவில் அறிமுகமாகும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இணையதளத்தில் தற்போது பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன. சரியான சமர்ப்பிப்பு தேதிகள் மற்றும் பிரிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
“அடுத்த பார்வையாளர்களை கவரும் இயக்குநர் எங்கிருந்தும் வரலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தளம் ஒவ்வொரு கதை சொல்லிக்கும் ஒரு குரல், ஒரு மேடை மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களால் காணப்படும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.”
பிரபாஸ் அவர்களின் துணிச்சலான கனவுத் திட்டமான தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட், தால்லா வைஷ்ணவ் மற்றும் பிரமோத் உப்பலபாட்டி ஆகியோரால் நிறுவப்பட்டது. புதிய திறமைகளை வளர்த்து, எழுத்தாளர்கள், கதை சொல்லிகள் மற்றும் இயக்குநர்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு வலுவான மேடையை வழங்கும் நோக்கில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களை பொறுத்தவரையில், பிரபாஸ் நடிப்பில் தி ராஜாசாப், ஃபௌஸி, ஸ்பிரிட், கல்கி 2898 ஏடி பாகம் 2, சலார் பாகம் 2. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
- உலக செய்திகள்
- |
- சினிமா













