சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்
Updated on : 22 December 2025

எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர்.



 



பிரபல இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய குரு சரவணன், பின்னர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் அவரையே நாயகனாக வைத்து 'கூகுள் குட்டப்பா' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது மூன்றாவது படைப்பாக இந்த புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார்.



 



இரட்டை நாயகர்கள் கொண்ட இந்த படத்தில், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நண்பன் கதாப்பாத்திரங்களில் நடித்தவரும், 'கன்ஜூரிங் கண்ணப்பன்', 'சட்டம் என் கையில்' போன்ற படங்களின் மூலம் நாயகனாக தன்னை நிலைநாட்டியவருமான சதீஷ் குமார், ஆக்‌ஷன் கலந்த முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான கதை அமைப்பைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் இந்த படத்திலும் அதை நிரூபித்துள்ளார்.



 



இந்த படத்தின் மூலம் மற்றொரு கதாநாயகனாக, பிரபல தெலுங்கு நடிகர் சாய் குமாரின் மகனும், தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஹிட் ஆக்‌ஷன் கதாநாயகனாக அறியப்பட்டு, 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவருமான ஆதி சாய் குமார், தமிழ் திரையுலகில் முதல் முறையாக அறிமுகமாகிறார்.



 



'பீஸ்ட்', 'லியோ' போன்ற படங்களின் மூலம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகங்களிலும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, படத்தின் வித்தியாசமான கதைக்களத்தால் கவரப்பட்டு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.



 



'உலக நாயகன்' கமல்ஹாசன் நடித்த பல படங்களுக்கு இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க, தமிழின் முன்னணி படங்களுக்கு கலை இயக்கம் செய்த துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.



 



எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் ஜி. சுரேஷ் தயாரிப்பில் குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா