சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

சாந்தி செளந்தரராஜனின் இதுவரை வெளிவராத உண்மைகள் நிறைந்த அவருடைய வாழ்க்கை படமாகிறது!
Updated on : 15 March 2021

இதுவரை பல படங்களை விநியோகம் செய்து வரும் 888 Productions நிறுவனம் முதன் முறையாக தயாரிப்புத் துறையில் தடம் பதிக்கிறது.



 





கடந்த வருடம் மம்மூட்டி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'மாமாங்கம்' திரைப்படத்தில ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பிள்ளையிடம் அசோஸியேட் ஒளிப்பதிவாளராகவும் மற்ற பல படங்களில் இணை, துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜெயசீலன் தவப்புதல்வி இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனமெழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.



 





இந்தியாவிற்கு 12 சர்வதேச பதக்கங்களையும், தன் சொந்த மாநிலமான தமிழகத்திற்கு 50 பதக்கங்களுக்கு மேல் வென்ற தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் சாந்தி செளந்தரராஜன். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடத்தப்பட்ட பாலின சோதனையின் அறிக்கையின் அடிப்படையில், பெண்களுக்கான போட்டியில் தகுதி மறுக்கப்பட்டு அவர் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடமிருந்து திரும்பி பெறப்பட்டது.



 





இந்த அவமானகரமான சோதனையின் காரணமாக சாந்தி செளந்தரராஜன் தடகள போட்டிகளில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்.



 





அவர் வாழ்க்கையில் நடந்த, இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் திருப்பங்களுடன் கதை வடிவமைக்கப்பட்டு, முழுக் கதையினையும் சாந்தி செளந்தரராஜனிடம் ஒப்புதல் பெற்று, இக்கதை படமாக்கப்பட உள்ளது.



 





இப்படத்தில், சாந்தி செளந்தரராஜனின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, 'ஆஸ்கர் விருது பெற்ற 'ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, வசனங்கள் பொன் பார்த்திபன் எழுதியுள்ளார். மேலும் இப்படத்தில், ஒளிப்பதிவு - கோபிநாத் D தேவ், படத்தொகுப்பு - சங்கத்தமிழன் , கலை - காளி. ப்ரேம் குமார், ஒப்பனை - ரஞ்சித் அம்பாடி, உடை - ஜேம்ஸ் ஆப்ரஹாம் - என பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.



 





 





ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு துவங்கும் நாளன்று படத்தின் கதாநாயகியின் அறிவிப்பு வெளியிடப்படும்.



 





இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, புதுக்கோட்டை அருகே உள்ள சாந்தி செளந்தரராஜனின் கிராமத்தில் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து பஞ்சாப், கத்தார், ஓமான் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.



 





பெண்களின் திறமை மற்றும் வலிமையையும், பெண்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் படத்தின் பல காட்சிகள் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா