சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

'தமிழ் சினிமா கம்பெனி' நடத்திய 'சினிமா பற்றிய கலந்துரையாடல்!'
Updated on : 15 March 2021

ஏற்கெனவே திரைத்துரையில் இருப்பவர்களும், புதிதாக சினிமாவுக்குள் வரத் துடிப்பவர்களும் சந்தித்துத் தங்கள் கருத்துக்களைப் பகிரவும், சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறவும் இதுவரை வாய்ப்பில்லாமல் இருந்தது. 

அந்த நிலையினை மாற்ற கஸாலி மற்றும் தன்வீர் இணைந்து நடத்தும் 'தமிழ் சினிமா கம்பெனி' வடபழனி ஜே.பி.டவரில் ஞாயிறுதோறும் இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்கிறது .



 



 



இயக்குநர் மற்றும் நடிகர் ஈ.ராம்தாஸ், ஜாகுவார் தங்கம், இயக்குநர் மற்றும் ஔிப்பதிவாளர் ஜீவன், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் திருமலை, ஆச்சார்யா ரவி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட அனுபவசாலிகளும், 90-க்கும் மேற்பட்ட புதியவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். 

நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் சேர்த்தது திருப்பூர் சுப்ரமணியம் போனில் தன் கருத்தை விபரமாகப் பதிவு செய்தது. மைக் மூலம் அனைவரும் கேட்கும்படி செய்தது அனைவரையும் கவர்ந்தது. தமிழ் சினிமா கம்பெனியின் புதிய முற்சிகள் பற்றி சுருக்கமாகவும், சுவையாகவும் தன்வீர் விவரித்தார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கஸாலி இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். 



 



 



சுவாரஸ்யமாக நடைபெற்ற நிகழ்ச்சியின் முடிவில் அன்று காலை இயற்கை எய்திய மக்கள் இயக்குநர் ஜனநாதன் அவர்களுக்கு எல்லோரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். 



 



 



இந்த நிகழ்ச்சி முழுக்க இலவசமாக நடத்தப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு இடையில் தேநீர் மற்றும் பிஸ்கட்டும், மதியம் பிரியாணி உணவும் வழங்கப்பட்டது. 



 



 



வந்திருந்த புதியவர்களில் சிலர் படம் தயாரிப்பைத் தொடங்கப் போவதாகவும், அதற்கு ஆலோசனை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். 



 



 



இதுபோன்ற சந்திப்புகளால் தேங்கியிருக்கும் சினிமா தயாரிப்பு புத்துணர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டது.



 



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா