சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

சட்டமன்ற தொகுதிக்கான நிதியை 100% உபயோகப்படுத்திய ஒரே எம்எல்ஏ!
Updated on : 16 March 2021

அரசியல் வரலாற்றில்  பலரும் தொடர்ந்து பலமுறை தேர்தலில் வேட்பாளராக நிற்பது உண்டு. ஆனால் எவ்வளவு பெரிய விஐபியாக இருந்தாலும் அவர்களும் கூட அவ்வப்போது தொகுதிகளை மாற்றிக் கொண்ட வரலாற்றை நாம் அறிந்திருப்போம். ஆனால் தான் பிறந்த மண்ணில் தொடர்ந்து ஏழு முறை தொகுதி மாறாமல் களம் காணும் ஒரே மனிதர் யார் என்றால் அவர்தான் அமைச்சர் ஜெயக்குமார்.



 



 



1991 முதல் 2021 வரை ஏழு முறை ராயபுரம் தொகுதியின் ஒரே வேட்பாளர் யார் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லாமல் அதிமுக தலைமை இவரைத்தான்  வெற்றி வேட்பாளராக களம் இறங்குகிறது. காரணம்  தொகுதி மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் இவர்தான் என்பது  அசைக்க முடியாத ஆணித்தரமான உண்மை. அதை நிரூபிக்கும் வகையில் ஏழு முறை போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 1991 முதல் ராயபுரம் மக்களின்  குறைதீர்க்கும் மனுநீதிச்சோழனாய் இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.



 



 



 ராயபுரத்தில் ஏழாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்.இதில் 5 முறை அவர் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் குடிசை இல்லாத தொகுதியாக ராயபுரம் தொகுதி மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் தண்ணீர் தேங்காத தொகுதியும் மின்தடை ஏற்படாத ஒரே தொகுதியில் ராயபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தொகுதிக்கான நிதியை 100% உபயோகப்படுத்திய ஒரே எம்எல்ஏ இவர் என்பது கூடுதல் சிறப்பு.



 



 



 வடசென்னை மக்களின் மருத்துவத்திற்கு பயன்படும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ஆர்.எஸ்.ஆர். எம் மருத்துவமனைக்கு அரசிடமிருந்து அதிகமான நிதியை பெற்று மக்களுக்கு தரமான சிகிச்சை தந்ததில் இவரது பங்கு அளப்பரியது. மக்களுக்கு எல்லா விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் திமுகவினர் யாரும் களத்தில் வந்து பணியாற்றவில்லை. ஆனால் இவர் உயிரையும் பொருட்படுத்தாமல் பல இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி உதவிக்கரம் நீட்டி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.



 





 



 



கட்சி பாகுபாடுகளை மறந்து அனைவரும் நம் தொகுதி மக்கள் என்ற உணர்வோடு இருந்தவர் அமைச்சர் ஜெயக்குமார்.அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்ததில் இவருக்கு நிகர் இவர்தான் என்பது அனைவரும் அறிந்தது. அதனால்தான் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர் என்று முதலமைச்சரே இவரை வியந்து பாராட்டினார். இந்த முறையும் ராயபுரம் மக்கள்  இவரை வெற்றி வேட்பாளராக மாற்றுவார்கள் என்பதே அனைவரின் குரலாய் ஒலிக்கிறது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா