சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

உன்னோடு கா! மனம் திறந்த இசையமைப்பாளர்
Updated on : 07 May 2016

ஆரி மற்றும் மாயா ஆகியோர்களை முதன்மை கதாப்பாத்திரங்களாக கொண்டு அறிமுக இயக்குனர் ஆர்.கே இயக்கியுள்ள கலகலப்பான திரைப்படம் 'உன்னோடு கா'.



 



தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் இந்த படத்திற்கு கதை எழுதி தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் பிரபு, ஊர்வசி, பால சரவணன் மற்றும் மிஷா கோஷல் முக்கிய வேடங்களில் நடித்திருப்பது குறிபிடத்தக்கது. 



 



ஏற்கனவே எங்கேயும் எப்போதும், நெடுஞ்சாலை, இவன்வேறமாதிரி, கதை திரைக்கதை,வசனம்,இயக்கம் போன்ற படங்களுக்கு சிறப்பான இசையை வழங்கியதுபோல் உன்னோடு கா படத்திற்கும் ரசிக்கும்படியான பாடல்களை வழங்கியுள்ளார் சத்யா.



 



இப்படத்திற்கு இசையமைத்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள சத்யா, முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. வரிகள் + டியூன் + வாத்தியங்கள் + குரல். இது தான் எங்களின் தாரகை மந்திரமாக செயல்பட்டது. பொதுவாக பிள்ளைகள் காதலுக்காக வீட்டை விட்டு ஓடி விட்டால் வருத்தப்படும் பெற்றோறரை தான் இதுவரை அனைவரும் கண்டிருப்போம். ஆனால் இந்த படத்தில் அதை அவர்கள் கொண்டாடும் வகையில் 'ஓடிட்டாங்க' என்னும் பாடல் இடம் பெற்றுள்ளது. 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா' பாடலுக்கு பிறகு, மனோ மற்றும் கிருஷ்ணா ராஜ் ஆகிய இருவரும் 15 வருடங்கள் கழித்து இந்த பாடலில் இணைந்துள்ளனர்."



 



"இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் மகள் வைமித்ரா பாடியுள்ள 'ஊதே ஊதே' பாடல். மேலும் அபிராமி ராமநாதன் அவர்களின் பேத்தி மீனாட்சி பெரியக்கருப்பன் இந்த பாடலில் நடித்துள்ளது, படத்திற்கு அமைந்த ஒரு சிறப்பம்சம். முழுக்க முழுக்க குழந்தைகளால் உருவாக்கப்பட்ட இந்த பாடலுக்கு மதன் கார்கியின் தனித்துவமான வரிகள் மேலும் மேலும் அழகு சேர்த்துள்ளது.



 



ரா என்னும் தமிழ் வார்த்தையை தா போல் உச்சரிக்க செய்திருக்கிறார் மதன். இந்த பாடலுக்கு வாத்தியங்கள் வாசிப்பதில் இருந்து கோரஸ் பாடும் வரை அனைத்தும் குழந்தைகளால் கையாளப்பட்டவை. உலகளவில் பியானோ இசை வாத்தியத்தில் திறன் பெற்ற லிடியன், இந்திய அளவில் புல்லாங்குழலில் புகழ் பெற்ற வர்ஷினி, சிம்போனி இசையில் வயோலின் வாசிக்கும் அன்பு ஆகிய குழந்தைகள் இந்த பாடலுக்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளனர். பாடலின் குரலுக்கு சொந்தகாரர்களான சிந்தியா, சஜினி, சாஷ்வின், சினேகா மற்றும் உசீஜா ஆகியோர் நிச்சயம் பாடலின் மெல்லிசைக்கு தூணாக அமைந்து இருக்கின்றனர். இந்த பாடலுக்காக கிளாஸ்சிக்கல் கிட்டார் வாசித்த டெல்சி என்னும் சிறுவன், ஜாஸ் இசையில் கைதேர்ந்தவர் மட்டுமில்லாமல் முன்னணி இசை அமைபாளர்களுக்கு வாசிப்பது குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா