சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

காமெடி கலக்கல் - விந்தை
Updated on : 23 April 2015

காமெடி கலக்கல் படம், மகேந்திரன் – மனீஷாஜித் நடிக்கும்    “ விந்தை “    லாரா இயக்குகிறார்   


அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ விந்தை “ என்று பெயரிட்டுள்ளனர்.


இந்தப்படத்தில்  மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார்.  நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர்மனோகர், டெலிபோன் ராஜ், நெல்லைசிவா, டி.ரவி, கவுதமி, செந்தி ஜெகநாதன்,  ஐசக், ஆதேஷ், சிவநாராயணமூர்த்தி, சுமதி, தவசி, சுப்புராஜ் நடிக்கிறார்கள்.


ஒளிப்பதிவு     -    ரத்தீஷ்கண்ணா /    இசை    -   வில்லியம்ஸ்                                           


பாடல்கள்    -  பாரதி, பொன்முத்துவேல்   /   கலை   -  பத்து  /   எடிட்டிங்    -   நதிபுயல்                      நடனம்   -  தினா /   தயாரிப்பு மேற்பார்வை  -  கார்த்திக் ரெட்டி                                                   


நிர்வாக தயாரிப்பு   -  பொன்ராஜ்


இணைதயாரிப்பு   -  R.Y.ஆல்வின், R.Y.கெவின்


தயாரிப்பு   -  R.L.யேசுதாஸ்


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்  -  லாரா.   இவர் ஏற்கெனவே வர்மம் என்ற படத்தை இயக்கியவர்.   படம் பற்றி இயக்குனர் லாராவிடம் கேட்டபோது .....                          


இந்த படம் முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கப் பட்டுள்ளது. 


மனித வாழ்கையில் தொலைந்து போன ஒரு விஷயத்தை தேடி போகிற இடமாக காவல்நிலையம் இருக்கிறது. அப்படி இருக்கும் காவல் நிலையத்தை அனைவரும் ஒரு வித வெறுப்புடனும், அருவருப்புடனும் தான் பார்பார்கள். அந்த இடத்திற்கு சென்றுவிட்டால் நாம் அனைவரும் சிரிப்பை  மறந்துவிடுவோம். ஆனால் இதில் ஊரில் இருந்து ஓடி வந்த  நாயகன், நாயகி இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப் படுகிறார்கள் இரவு 1 மணி முதல் மறுநாள் இரவு 1 மணிவரை அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகள் தான் காமெடி தான் இந்த படத்தின் திரைக்கதை.


படம் வெளியான பிறகு ரசிகர்கள் இது போன்று ஒரு காவல் நிலையம் நம்ம ஊரில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பார்கள். அந்த அளவிற்கு காமெடி காவல் நிலையமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.


ஒரு சில காட்சிகளை தவிர மற்ற அணைத்து காட்சிகளும் காவல் நிலையத்திலேயே படமாக்கப்பட்டது.  படத்தின் அணைத்து கட்ட வேலைகளும் முடிந்து விட்டது படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர்.


 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா