சற்று முன்

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |    பத்திரிகையாளர்களை சந்தித்த ஆக்சன் கிங்' அர்ஜுன்!   |    ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ பட இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்   |    மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் “ராபின்ஹுட்” பட டிரெய்லர் வெளியானது!   |    இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ள 'கரிகாடன்' டீசர்!   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் குழந்தைகள் படம்!   |    'IPL (இந்தியன் பீனல் லா)' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது!   |    ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் ‘சிக்மா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!   |   

சினிமா செய்திகள்

வில்லன் ஆகும் பாண்டியராஜனின் மகன் ப்ரித்திவிராஜ்!
Updated on : 10 May 2016

7 வயது முதல் 22 வயதுக்குள் சிறையில் உள்ள இளைஞர்களின் நட்பு, காதல், ஏமாற்றம், பழி வாங்குதல் போன்றவைகளை கதைகளமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய திரைப்படம்  "சகா".



 



செல்லி சினிமாஸ் சார்பாக செல்வகுமார் மற்றும் ராம்பிரசாத் ஆகியோரது தயாரிப்பில், பல முன்னணி விளம்பரங்களில் பணியாற்றிய முருகேஷ் முதன் முறையாக இதனை இயக்கியுள்ளார்.



 



இப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் அவர்களால் கடல் படத்தில் அறிமுகபடுத்தப்பட்ட சரண் மற்றும் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் ஸ்ரீ ராம், பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் பாண்டியராஜனின் மகன் நடிகர் ப்ரித்திவிராஜ் முதன்முறையாக வில்லன் வேடம் ஏற்று நடிக்கின்றார். கதாநாயகியாக பலக் மற்றும் நீரஜா நடிக்கின்றனர்.



 



அலைபாயுதே, டிராபிக், ஸ்வாசம் - செண்ட்ஸ் ஆஃப் ப்ரோஸ் ஆகிய இசை ஆல்பம்களை வெளியிட்டு சிங்கப்பூரில் பெரும் இசைப்புரட்சியை செய்து பலரது மனதை வென்றுள்ள சிங்கப்பூரை சேர்ந்த ஷபீர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.



 



இந்த படத்தின் படபிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், விரைவில் ஷபீர் இசையமைத்துள்ள படத்தின் இசை வெளியாகவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா