சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

வணக்come to வாக்குச்சாவடி ! பார்த்திபனின் புதிய முயற்சி
Updated on : 14 May 2016

 



தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் வகையில் நடிகர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.



 



இதுதொடர்பில், வணக்come to வாக்குச்சாவடி! என்ற விழிப்புணர்வு அறிக்கையை அவர் விடுத்துள்ளார்.



 



இராதாகிருஷ்ணன் பார்த்திபன் விடுத்துள்ள அறிக்கை:



 



நம் வாக்கு  சாவு'அடியாகவும், சவுக்கடியாகவும், இருக்க/வலிக்க வேண்டும்....



யாருக்கு?



வாக்காளர்களுக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு நம்முடைய ஆயுளில் ஐந்தாண்டை சவக்குழிக்குள் புதைத்து அதையே அஸ்திவாரமாக்கி அதன் மீது எழுப்பப்படும் ஆஸ்தி நிறைந்த அரண்மனையில்



ராஜாங்கம் நடத்தத் திட்டமிடும் பொய்மை அரசியல்பேதிகளுக்கு!!!!!



 



கட்சிகள் யாவும் கர்ண கொடூரமாய் இரவு பகலாய் உழைக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக நம்



கண்களில் சிறு'நீரை வரவழைக்கிறது.



பாவம்!



அவர்கள் குடும்பத்திற்கு வேறு யார் உழைப்பார்கள்?



 



கட்சிகளுக்கப்பால் மக்களுக்கு (தப்பித்தவறி) நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கையிருந்தால்



(அப்படி யாரேனும் இருந்தால்) அவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவசியம் அந்த நல்லோரை(?) ஆதரியுங்கள். அப்படி நீங்கள் விரல் நீட்ட ஆளில்லையெனில், நம் விரல் நீட்டி மை பெறும் பெருமையில், தூய்மை/நேர்மை/ஆளுமை உள்ளவன் பெயர் இவ்வோட்டுச் சீட்டில்



"இல்லை"



என்ற அவல நிலைமையையாவது



'குத்தி'க்  காட்டுவோம்.



 



நோட்டே  ஜெயிக்கும் என்பவர்களுக்கு



NOTA-வால் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவர்களை செல்லா நோட்டாக்கி,



அவர்கள் Indian டாய்லெட் செல்ல,



டாட்டா காட்டுவோம் கடுங்காட்டமாய் !



 



8% பேர் கரன்ஸிக்காரர்களாக, நாட்டின்



92% வளத்தைச் சுரண்டி கொள்ளையடிக்கிறார்கள். மீதமுள்ள 92% மக்கள் 8% வறு'மை'யை  நக்க,



விரல் (நீட்டி) சூப்பிக் கொண்டிருக்கப் போகும் நிலையினி



மாறவேண்டும்.



மாற்ற வேண்டும்.



மாற்றம் வேண்டும் அதை நாம் இம்முறை



அரங்கேற்ற வேண்டும்.எப்படி?



ஒரு மௌனப் புரட்சி மூலம்!



நாளை இரவோடு திருவோடு ஏந்தும் 



(பர)பரப்புரை முடியும்.



அடுத்த விடியல் நம் கைகளில்!



 



மக்களால் தேர்ந்தெடுக்கப்படுமாட்சியே மாட்சிமைமிகு மக்களாட்சி.



 



Ok!!!!!!!!!!!!!!!!



 



மக்கள் யாரைத் தேர்ந்தெடுப்பது ?



கட்சித் தலைமை கை காட்டும் அத்தொகுதியின் அடி'யாட்களையா?  கருவிலேயே கரை வேட்டி கட்டிக் கொண்டு அக்கட்சியின் கொடிக் கம்பங்களாக வளர்ந்து நிற்கும் திரு.தண்டங்களையா?



முதலில் அதற்கே நாம் NOta காட்ட வேண்டும்.



இந்திய அரசியல் அரங்கில் முதன்முறையாக வாக்குரிமை மூலம்  ஒரு சு'தந்திரப் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.



யாருக்கும் பெரும்பான்மை கிட்டாமல்,



ஊழல் அரசியல்வாதிகள் குழம்பித் தவித்து  உணரவேண்டும் ... மக்களே MAJORITY என்று.



அடுத்தடுத்து தேர்தல் வந்தால் எங்கிருந்து எடுத்தெடுத்துக் கொடுப்பார்கள் பணத்தை?



கொடுத்து...



அரசு கஜானாவைப் போல



அவர்களின் கஜானாவும் காலியாகட்டும்.



அரசியல் என்பது மக்களுக்கான சேவை மையம் என்பதை உணர்ந்த நல்லோர்கள் வரட்டும் நம் தேசம் காக்க!



காக்க காக்க - நம்



வாக்குரிமை காக்க!



 



 



இப்படிக்கு,



இராதாகிருஷ்ணன் பார்த்திபன்



(திரைக்கலைஞனை மீறி



விலை போகாத



இந்தியக் குடிமகன் !)

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா