சற்று முன்
சினிமா செய்திகள்
'நெஞ்சுக்கு நீதி' படத்தை பார்த்து வாழ்த்திய திரு. மு.க.ஸ்டாலின்
Updated on : 16 May 2022

Zee Studios - போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEOPICTURES ராகுல் இணைந்து தயாரிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “நெஞ்சுக்கு நீதி” திரைபடத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்,
மே மாதம் 20 அன்று வெளியாகவுள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
சமீபத்திய செய்திகள்
பல விருதுகள் வென்று பல சர்வதேச பட விழாக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள ‘கள்வா’ குறும்படம்
கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச சல்சித்ரா ரோலிங் திரைப்பட விருது விழாவில் சிறந்த திரில்லர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் ஆகிய நான்கு விருதுகளை ‘கள்வா’ படம் வென்றுள்ளது. இதேபோல் கொல்கத்தாவின் 6வது சர்வதேச பயாஸ்கோப் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படம், சிறந்த திரில்லர், சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகிய 3 விருதுகள் ‘கள்வா’வுக்கு கிடைத்திருக்கிறது.
பக்கிங்கம்ஷெர் நாட்டிலுள்ள ஃபர்ஸ்ட் டைம் பிலிம் மேக்கர் செஷன் திரைப்பட விழாவில் திரையிட ‘கள்வா’ தேர்வாகியுள்ளது. மும்பை சர்வதேச குறும்பட விழாவுக்கும் சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச பட விழாவுக்கும் திரையிட தேர்வாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லிஃப்ட் ஆஃப் பிலிம்மேக்கர் செஷன் திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வாகியிருக்கிறது. இதேபோல் மான்செஸ்டரில் ஃபர்ஸ்ட் டைம் ஃபிலிம் மேக்கர் செஷனிலும் திரையிட நடுவர் குழு தேர்வு செய்திருக்கிறது. மேலும் பல சர்வதேச பட விழாக்களுக்கும் ‘கள்வா’ அனுப்பப்பட்டுள்ளது.
இந்த குறும்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி ஜியா இயக்கியுள்ளார். ஜேட்ரிக்ஸ் இசையமைத்திருக்கிறார். ஷரண் தேவ்கர் சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்சல் கதை எழுதியிருக்கிறார். பிரேம் எடிட்டிங் செய்துள்ளார். விரைவில் இப்படம் யூடியூபில் வெளியாக உள்ளது.
அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் 'தருணம்' திரைப்படம் இனிதே துவங்கியது!
ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் 'தருணம்' திரைப்படம் இன்று படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தினை ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணை தயாரிப்பு செய்கிறது.
திரு அருண் பாலாஜி பேசியதாவது…
அரவிந்த் ஶ்ரீநிவாசன் என்னுடைய நெருங்கிய நண்பர். இன்றைய இயக்குநர்களில் மிகத்திறமையான இளம் இயக்குநர். தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர். நல்ல படத்தை தருவார். இந்த திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்
தயாரிப்பாளர் விஜய் பாண்டி பேசியதாவது..
இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் எப்போதும் செலவு வைக்க மாட்டார். தயாரிப்பாளருக்கான இயக்குநர். இந்தப்படத்தைக் கண்டிப்பாகச் சிக்கனமான பட்ஜெட்டில் நல்ல படைப்பாக எடுப்பார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் டில்லிபாபு பேசியதாவது…
ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. அரவிந்த் ஶ்ரீநிவாசன் முதல் படமே மிக நன்றாக இயக்கியிருந்தார். மிகப்பெரிய இடத்திற்கு செல்வார். நிறைய புது தயாரிப்பாளர்கள் வருகிறார்கள். நிறைய உதவி இயக்குநர்கள் கதைகளோடு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தயாரிப்பாளர் புகழ் வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இயக்குநர் கணேஷ் விநாயக் பேசியதாவது..
தேஜாவு படத்திலேயே மிகத்திறமையான திரைக்கதையுடன் அசத்தியவர் அரவிந்த் ஶ்ரீநிவாசன். இந்தப்படத்திலும் கண்டிப்பாக அசத்துவார். தயாரிப்பாளர் நிறையப் படங்கள் தயாரிக்க வேண்டும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் கோபி பேசியதாவது…
அரவிந்த் ஶ்ரீநிவாசன் எனக்கு பி ஆர் ஓ டீம் மூலம் தான் தெரியும். அந்தப்படம் பார்த்த பின் அவரை சந்தித்தேன். இந்தப்படத்தில் தயாரிப்பு செலவைக் குறைத்து நல்லதொரு வெற்றிப்படைப்பை தருவார்கள் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
எடிட்டர் அருள் இ சித்தார்த் பேசியதாவது..
என்னைப் புதுமுகம் என்ற தயக்கமும் இல்லாமல் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் எனக்கு தேஜாவு படத்தில் வாய்ப்பு தந்தார். இந்தப்படம் பற்றிச் சொன்னபோது சம்பளமே பேச வேண்டாம் நான் செய்கிறேன் என்றேன். கிஷனுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என் மனைவி அவரின் ரசிகை. இந்தப் படம் செய்வது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி பேசியதாவது…
இந்தப்படம் படப்பிடிப்பிற்காக ஆவலுடன் உள்ளேன். இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுடன் ரொம்ப காலமாக வேலை செய்வதற்காகப் பேசிக்கொண்டிருந்தோம். கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் உடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாய்ப்பிற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் நன்றி
நடிகை ஸ்மிருதி வெங்கட் பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு நன்றி. இந்தப்படத்தில் இதுவரை செய்யாத கதாப்பாத்திரம். முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இந்தப்படம் பெரிய வெற்றிபெறும் என நம்புகிறேன் அனைவருக்கும் நன்றி.
நடிகர் கிஷன் தாஸ் பேசியதாவது..,
நான் இன்னும் புதுமுகம் தான். இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே முதலிலிருந்தே இந்தப்படத்தைப் பெரிய படமாக ட்ரீட் செய்யலாம் என்றார். இப்போதே மோஷன் போஸ்டர், புரமோ வீடியோவுடன் ஆரம்பித்துள்ளோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் திரைத்துறையில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவாதான், அவருக்கு என் நன்றி. அவர் இந்தப்படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும் நன்றி.
தயாரிப்பாளர் புகழ் பேசியதாவது…
அரவிந்த் ஶ்ரீநிவாசனுடன் என் நட்பு 18 வருடங்களுக்கு மேலானது. ஒரு நல்ல படைப்பைத் தரவே நாங்கள் உழைக்கிறோம். அரவிந்த் ஶ்ரீநிவாசன் என் நண்பர் என்பதால் எனக்காக இன்னும் கடினமாக உழைக்கிறார். அவர் மணிரத்னம், கௌதம் மாதிரி படம் பண்ண வேண்டும் என்று சொல்வார். இந்தப்படம் அந்த கனவை நனவாக்கும். மிக நல்ல படக்குழு எங்களுக்கு அமைந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் பேசியதாவது..,
இன்று காலையில் எங்கள் படத்திற்காக வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. புகழ் 18 வருடங்களாக நெருங்கிய நண்பர். பல காலம் நாங்கள் படம் செய்யப் பேசிக்கொண்டிருந்தோம், எனக்காக என்னை நம்பி எல்லாம் செய்வார். அவருக்கு இது வெற்றிப்படமாக அமையும். கிஷன், ஸ்மிருதி வெங்கட் புதுசான இளமையான ஜோடி, தர்புகா சிவா இசையமைக்கிறார். அவரிடம் நான்கு ஹிட் பாடல்கள் கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக பண்ணிடலாம் என்றார். என் தேஜாவு பட எடிட்டர் இந்தப்படத்திலும் பணியாற்றுகிறார். தேஜாவுவை தாண்டி ஒரு நல்ல படைப்பைத் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் நன்றி. தேஜாவு படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் பண்ணக்கூடாது என்பதில் நிச்சயமாக இருந்தேன். பல கதைகள் பேசினோம். இந்தக்கதைக்காக 2 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். தயாரிப்பாளர் புகழ் என்னை எதுவுமே கேட்கவில்லை. மிக ஆதரவாக இருந்தார். இது கண்டிப்பாக அனைவருக்கும் மைல்கல் படமாக இருக்கும்.
விஜய் சேதுபதி பட படப்பிடிப்பில் திரண்ட அயல்நாட்டு சுற்றுலா பயணிகள்!
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு நடைபெற்று வரும் தளத்தில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியை சந்திக்க மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருடன் யோகி பாபு, ருக்மணி வசந்த், பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆர் கோவிந்தராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ. கே. முத்து மேற்கொண்டிருக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில், இயக்குநரான பி. ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக மலேசிய நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு தினசரி உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் படப்பிடிப்பனை பார்வையிடுவதுடன், படத்தின் நாயகனான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர், சுற்றுலா பயணிகளையும், விஜய் சேதுபதியின் ரசிகர்களையும் கட்டுப்படுத்த தெரியாமல் தவிக்கின்றனர்.
எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் பிரத்யேக முன்னோட்டம்!
நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் 'ஆதி புருஷ்' திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், பாடலாசிரியர் மனோஜ் முண்டாஷீர், இசையமைப்பாளர்கள் அஜய்- அதுல் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டு, முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
சீதையை மீட்டெடுக்க ராமன், வானர சேனையுடன் அசாதாரணமான பயணத்தை மேற்கொள்வதையும், தீமையின் மீது நன்மையின் வீரம், சக்தி மற்றும் வெற்றியின் ஒரு பார்வையையும் முன்னிறுத்தும் இந்த முன்னோட்டம், இம்மாதம் பதினாறாம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. 'ஆதி புருஷ்' படத்தினைக் காண்பதற்கான ஆவலை பார்வையாளர்களிடத்தில் மேலும் தூண்டி இருக்கிறது.
இந்த முன்னோட்ட வெளியீட்டு விழாவில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் கரவொலி மற்றும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற வாசகத்தின் குரலொலி, விண்ணை பிளந்தது. இவ்விழாவின் போது நடைபெற்ற வானவேடிக்கை, ரசிகர்களின் கொண்டாட்ட உணர்வை பிரதிபலித்தது. இந்நிகழ்வு, வரலாற்றில் பொன்னான அத்தியாயத்தை உண்டாக்கியது. குறிப்பாக இளைஞர்களின் உற்சாகத்தை உத்வேகப்படுத்தியது. மேலும் ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகரான பிரபாஸை, ராமனாக திரையில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
'ஆதி புருஷ்' திரைப்படம், காவிய கதை என்பதாலும், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நட்சத்திர கலைஞர்களின் கூட்டு முயற்சி, பரவசமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்பதனை உறுதிப்படுத்துகிறது. மேலும் இந்த திரைப்படம், பார்வையாளர்களின் இதயங்களிலும், மனதிலும் அழியாத அடையாளத்தை உண்டாக்கும்.
ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படத்தை டி சீரிஸ் பூஷன் குமார் & கிரிஷன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர், யுவி கிரியேஷன்ஸின் பிரமோத் மற்றும் வம்சி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் ஜூன் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
அமோகமான வரவேற்பு பெற்று வரும் தோனி எண்டர்டெய்ன்மென்ட்டின் 'எல் ஜி எம்' பட டீசர்!
தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் 'எல் ஜி எம்' படத்தின் டீசரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனி, அவருடைய முகநூலில் வெளியிட்டார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இப்படத்தின் டீசருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.
தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பு 'எல் ஜி எம்'. ( லெட்ஸ் கெட் மேரீட்). இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதற்கு பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், '' நகைச்சுவையையும், குடும்பத்தையும் ஒன்றாக இணைத்து குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக 'எல் ஜி எம்' தயாராகி இருக்கிறது. இந்தத் திரைப்படம், உங்கள் ஆத்மாவை தொட்டு சிரிக்க வைக்கும் இதயபூர்வமான பயணம். இப்படத்தின் டீசரை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இந்த டீசருக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி'' என்றார்.
'எல் ஜி எம்' படத்தின் டீசருக்கு கிடைத்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தின் வெளியிட்டு தேதியையும், படத்தின் வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள்.
'எல் ஜி எம்' என்பது சாக்ஷி தோனியின் தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், இசையமைப்பாளரான ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவான ஒரு பீல் குட் எண்டர்டெய்னர். இந்த திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பிரியன்ஷூ சோப்ராவும், தயாரிப்பாளராக விகாஸ் ஹசிஜாவும் பணியாற்றியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது.
டைரக்டர் என்.லிங்குசாமி - கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!
இயக்குநர் லிங்குசாமி தலைமையில், கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக கடந்த 2022ல் முதல் ஹைக்கூ கவிதை போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வென்றவர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டதுடன் இதில் வென்ற 50 ஹைக்கூ கவிதைகளும் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. முதல் வருட துவக்க விழாவில் நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான கனிமொழி எம்.பி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை இரண்டாவது வருட நிகழ்வும் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி அவர்களை நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து இயக்குனர் லிங்குசாமி கூறும்போது, "கவிஞர் கனிமொழி கடந்த வருடம் துவங்கி வைத்த முதல் வருடத்திய ஹைக்கூ போட்டியில் வெற்றி பெற்ற ஹைக்கூ கவிதைகள் தொகுக்கப்பட்ட புத்தகத்தை அவரிடம் வழங்கினேன். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக முதல் வருடம் நிறைவடைந்து உள்ளது என்கிற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு நன்றியையும் தெரிவித்தேன். மேலும் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதால் எனது வாழ்த்துக்களையும் கனிமொழி எம்.பியிடம் தெரிவித்தேன். இந்த சந்திப்பின்போது கவிஞர் அறிவுமதியும் உடன் இருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி" என்று கூறினார்..
கங்கை அமரன் அங்கிள் தான் எனக்கு காட் பாதர் - ‘ரெஜினா’ பட தயாரிப்பாளர்
யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் 'பைப்பின் சுவற்றிலே பிரணயம்' மற்றும் 'ஸ்டார்' ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்.. இவர் ஏற்கனவே "SN Musicals" மூலம் பல சுயாதீன பாடல்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே-30ல் ‘ரெஜினா’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்ற நிலையில், நேற்று (ஜூன்-5) மாலை இந்தப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் சத்யம் (PVR) திரையரங்கில் நடைபெற்றது.
நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, அனந்த் நாக், தீனா கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, அப்பாணி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு பவி K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். டோபி ஜான் படத்தொகுப்பை மேற்கொள்ள, விஜி சதீஷ் நடனம் அமைத்துள்ளார். ஆடை வடிவமைப்பை ஏகன் கவனித்துள்ளார்.
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் வெங்கட்பிரபு, எழில், தயாரிப்பாளர்கள் டி.சிவா, சித்ரா லட்சுமணன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், நடிகர் ஜெயபிரகாஷ், சிவஸ்ரீ சிவா, சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், நடிகர் சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கத்தில் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டன.
இந்த நிகழ்வில் கதாநாயகி சுனைனா பேசும்போது,
“2006ல் என்னுடைய குடும்பத்துடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கின்ற ஒரு சின்னப்பெண்ணாக இருந்தேன். அந்த சமயத்தில் சினிமாவிற்கு வருவேனா என்றெல்லாம் தீர்மானித்து இருக்கவில்லை. அப்போது விடுமுறைக்காக ஹைதராபாத்திற்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது நான் பார்த்த படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படம். அதற்கு முன்பு நடிகை ஆக வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் சந்திரமுகி. தொடர்ந்து கஜினி உள்ளிட்ட படங்களை பார்த்தபோது, நான் ஒரு தென்னிந்திய மொழி நடிகையாகத்தான் ஆகவேண்டும் என முடிவு செய்தேன்.
அந்த சமயத்தில் எனக்குள்ளே சினிமா குறித்த ஆர்வம் சின்சியாரிட்டி, நேர்மை எல்லாம் இருந்தது. இப்போது வரை அது இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ், இயக்குனர் டொமின் டி சில்வா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரிடமுமே இதே போன்ற ஒற்றுமை இருந்தது. இந்த நிகழ்விற்கு வெங்கட் பிரபு சார் வந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. அவருடைய சரோஜா படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகை. எனக்கு எப்போதெல்லாம் மனதில் வருத்தம் தோன்றுகிறதோ அந்த சமயத்தில் சரோஜா படத்தில் வரும் பிரம்மானந்தம் சார் நடித்த காமெடி காட்சிகளை பார்த்து ரசிப்பேன். நான் மட்டுமல்ல.. என் குடும்பமும் சேர்ந்து தான். இந்தப்படத்திற்காக அதிக அளவில் அன்பையும் உழைப்பையும் கொடுத்துள்ளோம்” என்றார்
தயாரிப்பாளர் சதீஷ் நாயர் பேசும்போது,
“இந்த விழாவிற்கு வர முடியவில்லையே என்று என் அப்பா கோவையில் இருந்து கண்கலங்கினார். இந்தியாவில் நம்பர் டூ பிராண்ட் ஆக இருந்த ஒரு கம்பெனியை எங்களது தாத்தா வைத்திருந்தார். பின்னர் கால மாற்றத்தில் அவையெல்லாம் கைவிட்டுப்போக, நான் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என திட்டமிட்டேன். அதை செய்தும் முடித்தேன்.
எனக்கு படம் பண்ண வேண்டும் என்கிற ஆசை எல்லாம் இல்லை. எனக்கு இசை தான் முதலில்.. அந்த வகையில் கங்கை அமரன் அங்கிள் தான் எனக்கு காட் பாதர். இந்த துறையில் நுழைய அவர்தான் காரணம். நானும் வெங்கட் பிரபுவும் கல்லூரி காலத்திலிருந்து நண்பர்கள். என்னுடைய தயாரிப்பு நிறுவனம், என்னுடைய சேனல், படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இதோ படத்தின் மியூசிக் எல்லாமே வெங்கட் பிரபு தான் ரிலீஸ் செய்தார். அந்த வகையில் வெங்கட் பிரபு இந்த படத்தில் எனக்கு அவரது மறைமுக ஆதரவை தொடர்ந்து தனது பிஸியான நேரத்திலும் கொடுத்து வந்தார்.
சக்தி பிலிம் பேக்டரி மூலமாக இந்த படம் வெளியாவதில் மகிழ்ச்சி. இந்த படத்திற்கு நான் இசையமைக்க போகிறேன் என்று கூறியதும் கங்கை அமரன் அங்கிள், விஜயன் என்பவரை எனக்கு உதவியாக கொடுத்தார். இந்த படத்தில் இடம்பெற்ற குத்துப்பாட்டை எழுதியது என் நண்பர் இஜாஸ் தான். இந்த படத்தில் இடம்பெற்ற சூறாவளி பாட்டு சினிமாவிற்க்காக எழுதப்படவில்லை. எனது மகள் நிரஞ்சனா என் மடியில் அமர்ந்தவாறு கம்போஸ் செய்தார். ஆனால் இன்று அவருடைய தோழியின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாடுவதற்காக இந்த விழாவில் கலந்துகொள்ள அவரால் வர இயலவில்லை” என்று கூறினார்.
மேலும் தனது நண்பர் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு ஒரு நினைவு பரிசையும் அவரது தந்தை கங்கை அமரனுக்கு ஒரு நினைவு பரிசையும் இந்த நிகழ்வில் வெங்கட் பிரபுவிடம் வழங்கினார் தயாரிப்பாளர் சதீஷ் நாயர்.
இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்போது,
“நானும் இந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷும் லண்டனில் கல்லூரியில் படிக்கும்போது இருந்தே நண்பர்கள். ஆனால் அவருக்குள் இசை குறித்து இவ்வளவு ஆர்வம் இருக்கும் என எனக்கு ஒருபோதும் தெரிந்ததில்லை. என்னுடைய அப்பாவுக்கு தெரிந்திருக்கும். பெரும்பாலும் சதீஷ் சீனியர் நண்பர்களுடன் தான் அதிகம் பழகுவார். இந்த கோவிட் காலகட்டத்தில் தான் என்னிடம் இப்படி ஒரு டியூன் பண்ணி இருக்கிறேன் என்று முதன் முதலாக கூறினார். உண்மையிலேயே நன்றாக இருந்தது. ஆச்சர்யமாகவும் இருந்தது. உண்மையில் இவர் தான் பண்ணுகிறாரா.. இல்ல வேறு யாரோ எழுதி இவர் பெயர் போட்டுக் கொள்கிறாரா என்கிற சந்தேகமும் கூட எழுந்தது.
ஆனால் தொடர்ந்து இரண்டு மூன்று பாடல்களை இப்படி அனுப்பியதும் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாரே என மிரண்டு விட்டேன். அதேசமயம் என்னுடைய அப்பாவுடன் இணைந்து தான் ஆஅல்பத்திற்க்காக முதல் பாடலை எழுதினார். ஆனால் படம் பண்ணும்போது அவரை கூப்பிட மறந்து விட்டார். ( சிரித்தார் ) ஆனால் என் அப்பாவுக்கு சதீஷ் தான் செல்லப்பிள்ளை. கோவை செல்லும் போது சதீஷுடன் தான் நேரத்தை செலவிடுவார்
இந்த படத்தை இயக்கியுள்ள டொமின் டி’சில்வா தான் சதீஷின் முதல் ஆல்பத்தையும் இயக்கி இருந்தார். ஆனால் இவர்கள் இப்படி ஒரு படம் எடுப்பார்கள் என அப்போது நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட வேண்டும் என என்னிடம் கூறியபோது, இதன் போஸ்டரை பிரித்துப் பார்த்ததுமே அது எனக்கே சவால் விடுவது போல இருந்தது.
அதிலும் சுனைனா இந்த மாதிரி போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் அவர் இதற்கு முன் எப்படி நடித்துள்ளார் என்பது நமக்கு தெரியும். இவர் இப்படி எல்லாம் நடிப்பாரா என ஆச்சரியமாக இருந்தது. இந்த படத்தில் அவருக்கு சவாலான, துணிச்சலான கதாபாத்திரம் தான்.
இந்த படம் குறித்து அவ்வப்போது என்னிடம் தொடர்பு கொண்டு பல சந்தேகங்களை கேட்பார் சதீஷ். நானும் படப்பிடிப்பில் இருந்தாலும் கூட நேரம் ஒதுக்கி அவருக்கு விளக்கம் அளிப்பேன். இந்த படம் வெளியாகும் ஜூன் 23ஆம் பெரிய ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.
மேலும் இந்த நிகழ்வில் விஜய் 68 பட அப்டேட் குறித்து வெங்கட் பிரபுவிடம் கேட்கப்பட்டபோது, “லியோ படம் முதலில் வரட்டும். அதன்பிறகு தளபதி 68 தான். அதற்கு முன் ஏதாவது நான் சொன்னால், எதற்கு ஒவ்வொரு பங்ஷனாக போய் படம் பற்றி பேசுகிறாய் என என்னை திட்டுவார்” என்று அப்டேட் கொடுப்பதில் இருந்து ஜாலியாக எஸ்கேப் ஆனார் வெங்கட் பிரபு.
இதை தொடர்ந்து இசையமைப்பாளர் சதீஷ் நாயர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூறாவளி என்கிற பாடலை லைவ் கான்சர்ட் ஆக மேடையிலேயே வாசித்து ஆச்சரியப்படுத்தினார். பாடகி வந்தனா மற்றும் டாக்டர் அபர்ணா ஆகியோர் பாட, பத்மா அருமையான வயலின் இசையை கொடுத்தார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காரைக்குடி பாண்டியன் தியேட்டர் அதிபர் சங்கர் நாதன் பேசும்போது,
“சதீஷ் நாயர் கிச்சன் பொருட்கள் வியாபாரத்தில் இருந்து எப்படி சினிமாவிற்கு வந்தார் என்று தெரியவில்லை. அவரைவிட சினிமா மீது எனக்கு தான் மிகப்பெரிய ஆர்வம் இருக்கிறது என நினைத்தேன். விரைவில் நானும் சதீஷும் சேர்ந்து ஒரு படம் தயாரிப்போம்” என்று கூறினார்.
எழுத்தாளர் முத்தையா பேசும்போது,
“சதீஷ் நாயருக்கு பிசினஸ்மேன், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என மூன்று முகம் இருக்கிறது. அவருடன் இணைந்து 3 மியூசிக் ஆல்பம் பண்ணி இருக்கிறேன். அவரைப்பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பிரமாதம்.. பிரம்மாண்டம்..” என்று கூறினார்.
இயக்குனர் எழில் பேசும்போது,
“சுனைனாவுக்கு ரெஜினா என்கிற டைட்டில் நல்லா இருக்கு. தயாரிப்பு, மியூசிக் இரண்டுமே பொறுமையான வேலைகள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இந்த இரண்டையும் சதீஷ் நாயர் கையாண்டிருப்பது ஆச்சரியம் தான்” என்று கூறினார்.
நடிகரும் தயாரிப்பாளருமான ஜெயப்பிரகாஷ் பேசும்போது,
“சதீஷ் நாயர் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. நாடோடிகள் பாணியில் சொல்லப்போனால் அவர் எனது நண்பரின் நண்பர். நண்பர் டாக்டர் ஹரியின் நண்பர். அவரது வேண்டுகோளை ஏற்று இந்த விழாவில் கலந்து கொண்டேன். ஆனால் இந்த விழாவிற்கு வந்த இரண்டு நிமிடங்களிலேயே அவரது விருந்தோம்பல் குணம் நன்கு தெரிந்தது” என்றார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள எழுத்தாளர் பவா செல்லதுரை பேசும்போது,
“இந்த படத்தில் ஒரு நக்சலைட் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னை நம்பி தேர்வு செய்துள்ளார் இயக்குனர் டொமின் டி’சில்வா. இயக்குனர் பாலுமகேந்திராவுடன் ஹோட்டலுக்கு செல்லும்போது எல்லோருக்கும் எல்லா உணவுகளையும் அளவாக மட்டுமே ஆர்டர் செய்வார். ஆனால் இது அனைவருக்கும் போதுமா என்று சந்தேகம் வரும்.. அதேசமயம் சாப்பிட்டு முடிக்கும்போது அனைவருக்குமே அது திருப்தியாகவும் உணவு வீணாகாமலும் இருக்கும். அந்தவகையில் இந்த படத்திற்கு தேவையான கதாபாத்திரங்களை கச்சிதமாக தேர்வு செய்துள்ளார் இயக்குனர் டொமின் டி’சில்வா. அது மட்டுமல்ல இந்த படத்தின் பல இடங்களில் கதை குறித்து என்னுடன் எந்த ஈகோவும் இல்லாமல் விவாதிப்பார். ரெஜினா கேரக்டரில் சுனைனா மிக அருமையாக நடித்துள்ளார்” என்று கூறினார்.
தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசும்போது,
“ஜெயபிரகாஷ் சொன்னது போல டாக்டர் ஹரியின் அழைப்பை ஏற்று தான் நானும் இந்த விழாவிற்கு வந்துள்ளேன்,. சதீஷின் இசை இனிமையாக இருக்கிறது. ஒரு படத்தின் ரிலீஸுக்கு பாடல் தான் விசிட்டிங் கார்டு. இது அவருக்கு ரெஜினா மூலம் அழகாக அமைந்துள்ளது. பவா செல்லத்துரை ஒரு நல்ல கதைசொல்லி. இப்போது நல்ல நடிகராகவும் மாறிவிட்டார்” என்று பேசினார்.
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா பேசும்போது,
“சதீஷ் நாயரை பொறுத்தவரை தயாரிப்பாளர் என்றாலும் பார்ப்பதற்கு அவர் மியூசிக் டைரக்டர் போலத்தான் இருக்கிறார். திரையுலகிற்கு புதியவர் போலவே தெரியவில்லை. காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய சுனைனாவுக்கு இந்த படம் அவரை பிசினஸ் வேல்யூ உள்ள ஒரு ஸ்டாராக மாற்ற வேண்டும் என விரும்புகிறேன். இரண்டாம் திருப்பூர் சுப்பிரமணியன் என்ற சொல்லும் அளவிற்கு படத்தின் வசூலை கச்சிதமாக கொண்டுவந்து சேர்க்கின்ற சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் இந்த படத்தை ரிலீஸ் செய்வது கூடுதல் சிறப்பம்சம்” என்று கூறினார்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசும்போது,
“தயாரிப்பாளருக்கு மூன்று முகம் இருப்பதாக சொன்னார்கள். மூன்றுமே நல்ல முகம் தான். ஒருமுறை அவரை நீங்கள் சந்தித்தால் வேறு வழியின்றி நிச்சயம் அவருடன் நண்பர் ஆகிவிடுவீர்கள். அந்த அளவுக்கு இனிமையானவர். சில்லுக்கருப்பட்டியில் நடிகை சுனைனா அற்புதமாக நடித்திருந்தார். அந்த படத்தை நான் தான் வெளியிட்டேன். கொரோனா காலகட்டத்தில் எழுத்தாளர் பவா செல்லதுரையின் கதை சொல்லும் வீடியோக்களை பார்த்து அந்த நாட்களை பயனுள்ளதாக பொழுது போக்கினேன். எனக்கு பிடித்த வீடியோக்களை எனது குழந்தைகளையும் அழைத்து பார்க்க வைத்தேன். தாத்தா இல்லாத கொண்ட குழந்தைகளுக்கு அந்த ஏக்கம் தீர, ஒரு கதை சொல்லியாக பாவா செல்லத்துரையின் வீடியோக்களை பார்க்கலாம்” என்று கூறினார்.
இந்த படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள விஜி சதீஷ் பேசும்போது,
“இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே பார்ட்டி வைத்த தயாரிப்பாளர் என்றால் அது சதீஷ் சார் தான். படத்தில் பணியாற்றும் அனைவரையும் ஒன்றாக அழைத்து அவர் அறிமுகம் செய்து கொண்டது புதிதாக இருந்தது. இந்த படத்தின் பாடலைக் கேட்டபோது எனக்கு இளையராஜா சார் பாடல் கேட்பது போன்று உணவு ஏற்பட்டது. இந்த படத்தின் இயக்குனர் டொமின் டி’ சில்வா உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் இருந்து எனக்கு நண்பர். அவர் ஒவ்வொரு நாளும் என்ன காட்சிகளை படமாக்க இருக்கிறாரோ, அதற்கேற்றபடி தினசரி காலையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததுமே பத்து பதினைந்து பாடல்களை தேர்வு செய்து படப்பிடிப்பு தளத்தில் ஒலிக்க செய்வார். அந்த மூடுக்கு ஏற்றபடி காட்சிகளை படமாக்கும் ஒரு வித்தியாசமான இயக்குனர் அவர். இந்த ரெஜினா டிரைலரில் சுனைனாவை பார்த்து பயந்துவிட்டேன். பாடல் காட்சிகளில் பார்த்ததை விடஅந்த அளவுக்கு வித்தியாசமாக இருக்கிறார்” என்று கூறினார்.
இயக்குனர் டொமின் டி’சில்வா பேசும்போது,
“சதீஷ் சாருடன் ஆரம்பத்தில் மியூசிக் வீடியோவில் இணைந்து பணியாற்றி உள்ளேன். ஆனால் என்னை நம்பி எப்படி இந்த படத்தைக் தயாரித்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. படம் குறித்த விவரங்களை ஒவ்வொரு நாளும் அதிகாலைலயே எனக்கு இ மெயில் பண்ணி விடுவார். நாளை என எதையுமே அவர் தள்ளிப்போட மாட்டார். ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல இந்த படத்தை அவர் அழகாக தயாரித்துள்ளார். தமிழில் நான் இயக்குனராக அறிமுகமாகும் படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபு சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொண்டது எனக்கு பெருமை” என்று கூறினார்.
இந்த படத்தில் சதீஷ் நாயருக்கு இசைப்பணியில் உறுதுணையாக இருந்து பணியாற்றிய, கங்கை அமரன் குழுவை சேர்ந்த விஜயன் பேசும்போது,
“சதீஷ் சாரின் கிரியேட்டிவிட்டிக்கு எல்லையே கிடையாது, இந்த படத்தில் பாடல்கள் டியூன் போட்டது முதல் அனைத்தையும் உருவாக்கியது அவர்தான். நான் அவர் கொடுத்த விஷயங்களை ஒருங்கிணைக்கும் பணியை மட்டுமே செய்தேன
அஜித்குமார் இயக்கத்தில் 'முகை' திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு
LIGHT HOUSE MEDIA நிறுவனம் SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார் J இயக்கத்தில், கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் 'முகை'. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வினில்...
விநியோகஸ்தர் சங்கத் தலைவர் தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது…
'முகை' ஒரு அற்புதமான தமிழ் தலைப்பு. இயக்குநர் அஜித்குமார் அவர்களை வாழ்த்துகிறேன். நல்ல தமிழ் தலைப்புகள் இருக்கின்றன, தமிழில் தலைப்பு வையுங்கள் என்று நான் நீண்டகாலமாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். மலரின் முன் பருவத்தை குறிக்கும் வகையில் இயக்குநர் தமிழில் தலைப்பு வைத்துள்ளார். இந்த படக்குழுவை வாழ்த்துகிறேன். இந்த காலத்தில் இயக்குநர்கள் ஹாலிவுட் படத்திற்கு இணையாக படத்தை உருவாக்குகிறார்கள். தயாரிப்பாளருக்கு கஷ்டம் தராமல் படத்தை உருவாக்குங்கள். அனைவருக்கும் என் வாழ்த்துகள். படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்.
நடிகர் எஸ் வி சேகர் பேசியதாவது...
சின்ன படங்கள் வெற்றி பெறுவது திரையுலகத்திற்கு மிகவும் நல்லது. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சந்தோஷ் ஜெயிக்க வேண்டும், கட்டாயம் ஜெயிப்பார். முயற்சி திருவினையாக்கும். 'முகை' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
தயாரிப்பாளர் டில்லிபாபு பேசியதாவது…
ரிஷி என்னுடைய நண்பர். அவருடைய நண்பர் தயாரிப்பாளர் சந்தோஷ். தமிழ் சினிமாவுக்கு கனவுகளோடு இவர்கள் வந்துள்ளார்கள். திறமையான இயக்குநர் அஜித்குமார். சினிமாவின் எதிர்காலம் இளைஞர்களிடம் தான் இருக்கிறது. நிறைய புதுமுக தயாரிப்பாளர்கள் தமிழுக்கு வருவது மகிழ்ச்சி. இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் தயாரிப்பாளருமான முரளி ராமசாமி பேசியதாவது...
டிரெய்லர் அருமையாக உள்ளது படமும் நன்றாக இருக்கும் என்று தெரிகிறது, படத்தின் தொழில்நுட்ப குழுவினர் அருமையாக பணி செய்துள்ளனர், மக்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பைப் பெறும், கதைக்களம் புதிதாக இருக்கிறது. இது போன்ற படங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இப்படத்தை நீங்கள்தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும், நன்றி.
இசையமைப்பாளர் சக்தி பேசியதாவது…
இது எனக்கு முதல் படம். பாடல்கள் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன், உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.
ஒளிப்பதிவாளர் அர்ஜுன் பேசியதாவது...
இயக்குநர் அஜித் மிகத்தெளிவான சிந்தனையுடன் இருந்தார், படத்தை பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருந்தார். அதனால் என் வேலை சுலபமாக இருந்தது. படம் நன்றாக இருக்கும், பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், நன்றி.
இணை தயாரிப்பாளர் கிஷோர் பேசியதாவது...
'முகை' படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள், படம் நன்றாக வந்துள்ளது டிரெய்லர் பார்த்த உங்களுக்கே தெரியும், எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி, படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது…
ஒரு சின்ன ரூமுக்குள் படம் எடுப்பது மிக சவாலான விஷயம். கிஷோர் அவர்களுக்கு சவால்கள் பிடிக்கும். டிரெய்லர் மிக அருமையாக உள்ளது. திரில்லர் படமாக தெரிகிறது. படக்குழுவினர் கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. படம் வெற்றி பெற என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன், நன்றி.
இயக்குநர் பிரவீன் காந்த் பேசியதாவது…
பாட்டிலுக்குள் மரம் இருக்கிறது, அதற்குள் வாழ்க்கை இருக்கிறது என மேடையிலேயே நிரூபித்து விட்டார்கள். இங்கு பரிசாக தந்த மரத்தை எல்லோரும் பாதுகாப்போம். 'முகை' மிகை இல்லாத அருமையான படைப்பாக தெரிகிறது. இந்தப்படம் நிச்சயம் அனைவரும் கவனிக்கும் படமாக இருக்கும். கன்னடத்தில் இருந்து தமிழ் படம் எடுக்க வந்திருக்கிறார்கள். தமிழகம் எல்லோரையும் ஏற்கும். அவர்களுக்கு என் வாழ்த்துகள். இந்தப்படம் மிகப்பெரும் வெற்றி பெறும்.
நடிகை ஆர்ஷா சாந்தினி பைஜூ பேசியதாவது...
இயக்குநர் அஜீத் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். என் மீது நம்பிக்கை வைத்த குழுவினருக்கு நன்றி, படம் வந்ததும் பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், நன்றி.
இயக்குநர் அஜித்குமார் பேசியதாவது...
இது என் முதல் படம், என் குடும்பத்திற்கு என் நன்றி. என் தயாரிப்பாளருக்கு என்னுடைய மிகப்பெரும் நன்றி. நாயகி நடித்த ஒரு யூடியூப் விடியோ பார்த்து அவரை தேர்வு செய்தேன். மிக நன்றாக நடித்துள்ளார். ஒரே இடத்தில் நடக்கும் கதை. கிஷோர் குமார் சார் இப்படத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். என்னை நம்பி உழைத்த என் படக்குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும், நன்றி.
தயாரிப்பாளர் ராஜா பேசியதாவது...
'முகை' திரைப்படத்தின் டிரெய்லர் மிகவும் அருமையாக உள்ளது. இசை சிறப்பாக உள்ளது. இசையமைப்பாளர் சக்திக்கு வாழ்த்துகள். இது திரையரங்குகளில் கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படம். இந்த படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.
தயாரிப்பாளர் சந்தோஷ் பேசியதாவது...
என் வாழ்வின் முதல் மேடை இது. நாங்கள் அழைத்து இங்கு வந்து வாழ்த்திய திரை பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை தயாரிக்க ஆதரவாக இருந்த என் குடும்பத்திற்கு என் நன்றி. லாக்டவுனில் தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அஜித்குமார் அப்போது தான் பழக்கமானார். சும்மா இருக்கிறோம் ஏதாவது கதை பண்ணு என்றேன். அவர் உருவாக்கிய கதை தான் இது. இந்தப்படத்திற்கு கிஷோர் குமார் பொருத்தமாக இருப்பார் என அவரை சந்தித்தோம். அவர் எங்கள் படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார். கிஷோர் குமார் சார் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை. நாயகி எங்களை நம்பி வந்து நடித்து தந்தார். படம் நன்றாக வரவேண்டுமென தொழில்நுட்ப கலைஞர்கள் மிகவும் உழைத்துள்ளனர். இப்படத்திற்காக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள், நன்றி.
ஜூன் 29 முதல் திரையரங்குகளில் 'இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி'
இந்திய ரசிகர்களுக்கு ஒரு பெரிய செய்தி: அதிக அளவு எதிர்பார்க்கப்பட்ட அதிரடி சாகசமான ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ இந்தியாவில் அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படும்!
ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐகானிக் ஃபிரென்ச்சைஸின் இறுதி இன்ஸ்டால்மென்ட்
இந்தியா முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு பெரிய செய்தி, அமெரிக்க சந்தைகளுக்கு ஒரு நாள் முன்னதாக திரையரங்குகள் முழுவதும் வெளியாகும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி சாகசமான ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ புகழ்பெற்ற ஹீரோ, ஹாரிசன் ஃபோர்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளராகத் திரும்புவதால், பெரிய, உலகத்தை உலுக்கும், கர்ஜிக்கும் சினிமா சாகசத்திற்காக, பெரிய திரையில் வாழ்நாளின் சிலிர்ப்பை அனுபவிப்பதில் இந்திய ரசிகர்கள் முந்திக்கொள்கிறார்கள்.
ஹாரிசன் ஃபோர்டுடன் ஃபோப் வாலர்-பிரிட்ஜ், அன்டோனியோ பண்டேராஸ், ஜான் ரைஸ்-டேவிஸ், டோபி ஜோன்ஸ், பாய்ட் ஹோல்ப்ரூக் மற்றும் மேட்ஸ் மிக்கெல்சன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜேம்ஸ் மான்கோல்ட் இயக்கிய இப்படத்தை கேத்லீன் கென்னடி, ஃபிராங்க் மார்ஷல் மற்றும் சைமன் இமானுவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஜார்ஜ் லூகாஸ் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.
இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
தபால்காரர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் “ஹர்காரா” ஃபர்ஸ்ட் லுக்!
KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ அவரே நடித்து இயக்கியிருக்கும் ஹர்காரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். தபால்காரர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை தமிழ்நாடு தபால் துறை தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார்.
நாயகனின் வித்தியாசமான தோற்றத்துடன் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் எனும் டேக்லைனுடன், வெளியாகியிருக்கும் “ஹர்காரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளது ஃபர்ஸ்ட்லுக்.
வி 1 மர்டர் கேஸ் படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையைச் சொல்லும் பின்னணியில் ஒரு அருமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன் அங்குப் படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும், பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் பற்றிய ஆச்சரிய எபிஸோடும் படத்தில் உள்ளது.
படத்தினால் ஈர்க்கப்பட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ்நாடு தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமதி சாருகேசி வெளியிட்டார்.
மேலும் படம் குறித்து அவர் கூறுகையில்.., ". பல நூற்றாண்டுகளாக தகவல் தொடர்புக்கான ஒரு ஊடகமாக சேவை செய்யும் அஞ்சல் துறை, நமது குடிமக்களின் இதயங்களில் எப்போதும் சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. தபால்காரர்களின் சிறப்பான பங்களிப்பை கவுரவிப்பதற்கும், அவர்களின் பயணம், சவால்கள் மற்றும் வெற்றிகள் குறித்து வெளிச்சமிட்டு காட்டுவதற்கும் இந்த திரைப்படம் ஒரு வாய்ப்பாகும். இப்படிப்பட்ட ஒரு சிறந்த படைப்பு மிகப்பெரிய வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சினிமா முயற்சியானது, நமது அஞ்சல் துறையின் முக்கியத்துவம் மற்றும் தபால்காரர்களால் ஆற்றப்படும் தன்னலமற்ற சேவையைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்தும் என்றார்.
இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இப்படத்தின் இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
- உலக செய்திகள்
- |
- சினிமா