சற்று முன்

சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |   

சினிமா செய்திகள்

வெப் சீரிஸில் தமிழின் முதல் 100 மில்லியனை எட்டிய குழுவின் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் ஆரம்பம் !
Updated on : 17 May 2022

இளம் வயதினரையும், குடும்பங்களையும் ஈர்க்கும் படைப்புகளுக்கு பெயர் பெற்ற Blacksheep குழு, YouTube  தளத்தில் தமிழின் முதல் 100 மில்லியன் பார்வைகளை கடந்த  வெப் சீரிஸாக சாதனை படைத்த  "ஆஹா கல்யாணம்" என்ற முக்கோணக் காதல் கதையின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இப்போது மீண்டும்  "கன்னி ராசி" என்ற தலைப்பில் (மூன்று: ஒன்று) காதல் கதையை துவங்குகிறது. 



 



Blacksheep உடைய சொந்த OTT-யான "Bs value"க்காகத் உருவாக்கப்படும் இந்த தொடரை இயக்குநர் அன்புதாசன் இயக்குகிறார். இவரது எழுத்து மற்றும் நடிப்பில் உருவான ‘கல்யாண சமையல் சாதம்’ என்ற தொடர் 100 மில்லியன்யை கடந்ததோடு, இது YouTube  தளத்தில்  அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.  மேலும் இந்த தொடர் "என்ன சொல்ல போகிறாய்" புகழ் தேஜூ அஸ்வினியை கோலிவுட்க்கு வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது. 



 



மீசைய முறுக்கு, கோலமாவு கோகிலா, ஆதித்ய வர்மா, ஓ மண பெண்ணே போன்ற திரைப்படங்களில் பங்குபெற்றதில்  பாராட்டப்பட்ட நடிகராக வலம் வருவதோடு, அன்பு டிஜிட்டல் உலகத்தில் தனது எழுத்து மற்றும் இயக்கத்திற்காக வெறித்தனமான ரசிகர்களையும் கொண்டிருக்கும் அன்புதாசன் பெரிய அளவில் இயக்குனராக பரிணமிக்கும் படைப்பாக இது இருக்கும்.  Blacksheep உடைய பல புனைகதை மற்றும் புனைகதை அல்லாத தொடர்களில் குறும்புத்தனம் மற்றும் அசத்தலான நடிப்பு மூலம், லட்சக்கணக்கான டிஜிட்டல் பார்வையாளர்கள் மத்தியில், ஏற்கனவே பிரபலமாக இருந்த சேட்டை ஷெரிப் இதில்  ஹீரோவாக நடிக்கிறார். 



 



‘கன்னிராசி’ என்பது ஒரு வேடிக்கை நிறைந்த வலைத் தொடராகும், இது திருப்பங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட தொடர். சேட்டை ஷெரிப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் அமேசான் பிரைம்  ஸ்டாண்டப் காமெடி புகழ் அபிஷேக் குமார், ஸ்வேதா, ஷாம்னி, பதின் குமார், அருண் கார்த்தி, குட்டி மூஞ்சி விவேக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



 



இந்த கதை நாயகன் கிருஷ்ணாவை (சேட்டை ஷெரீப்) சுற்றி சுழல்கிறது, ஒரு நல்ல வேலையுடன் கச்சிதமான வாழ்க்கையை வாழவேண்டும் என்ற அவரது கனவு  நிறைவேறாமல் இருக்கிறது. பின்னர் அவரது வாழ்கை Mr. X என்ற ஒருவரை சந்தித்த பிறகு, அவனது கனவு வேலை அவனுக்கு கிடைக்கிறது, அதிலிருந்து அவன் வாழ்கை சிறப்பானதாக மாறுகிறது. கிருஷ்ணா எப்படி அவனது கனவு வேலையை அடைந்தான்?, Mr. X யார்?, இது தான் கன்னிராசி வலைதொடர், இது மொத்தம் 10 எபிசோட்களை கொண்ட தொடராக உருவாகிறது .



 



இத்தொடர் ஆகஸ்ட் 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, நேற்று மாலை படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான முறையில் பூஜையுடன், இத்தொடரின் படப்பிடிப்பு தொடங்கியது.



 



படத்தின் தொழில்நுட்ப குழு, 



நவநீத கிருஷ்ணன் (இணை இயக்குனர்), ஷஷாங்க், மகிமை, நித்யா, லோகேஷ்வரி( உதவி இயக்குனர்கள்). சரவணன் & நர்மதா (எழுத்தாளர்கள்), ஃப்ரெட்ரிக் விஜய் (ஒளிப்பதிவு), டார்வின் அஜய் (கேமரா அசிஸ்டண்ட்), பிரதீப் (கலை இயக்கம்), ஹரி ( SFX), நிசாம் (DI), அர்சத், இர்ஷத்(டிசைன்ஸ்), அசார்(நடனம்), நரேஷ்-கிஷோர்(எக்ஸிகியூடிவ் புரடியூசர்).

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா