சற்று முன்

எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    துல்கர் சல்மான் தனது 41 வது திரைப்படத்தில் அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார்!   |    'கிராண்ட் ஃபாதர்' டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு M. S. பாஸ்கருக்கு வாழ்த்து!   |    நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |   

சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி நடிக்கும் 'வள்ளி மயில்' முதல் கட்ட படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது
Updated on : 11 June 2022

1980 களில் புகழ் பெற்று விளங்கிய நாடகமான ‘வள்ளி திருமணம்’ நாடகத்தை பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக “வள்ளி மயில்” திரைப்படம் உருவாகிறது.



 



வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர்,ஜீவா போன்ற பல வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார்..முதல் முறையாக இந்தக் கூட்டணி இணைவதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



 



ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, வில் அம்பு போன்ற தரமான படைப்புகளை தயாரித்து தமிழ்த் திரையுலகில் சிறந்த தயாரிப்பாளராக திகழும் தாய் சரவணன், அவரது நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.



 



திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியை கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு,  இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது.



 



மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது இனிதே  நிறைவடைந்துள்ளது.



 



விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக,பழமையான சென்னையை கட்டமைக்கும்,  பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.



 



சென்னையை தொடர்ந்து டெல்லியில் மிக முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.



 



இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பாரதிராஜா, புஷ்பா படப்புகழ் சுனில், தம்பி ராமையா,ரெடின் கிங்ஸ்லி, GP முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.



 



இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்..ஒளிப்பதிவு -  விஜய் சக்ரவர்த்தி, எடிட்டர் - ஆண்டனி, ஆர்ட் டைரக்டர் - உதயகுமார், மக்கள் தொடர்பு - சதீஷ் AIM, பப்ளிசிட்டி டிசைன்ஸ் - ட்யூனி ஜான் ஆகியோர் குழுவில் பணியாற்றுகின்றனர்.



 



படத்தின் ஃபர்ஸ்ட் லுக்,  டீஸர் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா