சற்று முன்

நடிகர் சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு 'யாத்திசை' படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியானது!   |    ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' டிரெய்லர்!   |    VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடிக்க 'ஹெய் லெசோ' திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது!   |    'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |   

சினிமா செய்திகள்

VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடிக்க 'ஹெய் லெசோ' திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது!
Updated on : 29 September 2025

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் (சுடிகாளி சுதீர்) தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா ( Prasanna Kumar Kota) இயக்குநராக  அறிமுகமாகும் , சிவா சேர்ரி – ரவிகிரண் ஆகியோர் வஜ்ர வராஹி சினிமாஸ் (Vajra Varahi Cinema) சார்பில் தங்கள் முதல்  தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்கள்.  இது சுதீர் ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் ஐந்தாவது படமாகும். “கோர்ட்” படத்தில் வில்லனாக, தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சிவாஜி, இப்புதிய படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



 



“ஹெய் வெசோ”  எனும் தலைப்பு, விவசாயிகளிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டுப்புறச் சொல் என்பதால், படத்திற்கு இயற்கையான மண் மணத்தைக் கொடுக்கிறது. டைட்டில் டிசைன்  வெகு அற்புதமாக கப்பலின் வடிவில், அதில் பெண்ணின் கால் வடிவில் ‘S’ எழுத்தாக அமைந்திருப்பது சிறப்பு. ஆயுதம் ஏந்திய மர்ம மனித உருவமும் அதில் காணப்படுகிறது.



 



டைட்டில் போஸ்டரில் புராணத்தன்மையும் கிராமிய வட்டார சுவையும் கலந்திருக்கிறது. பொற்காலணியும் விரலணியும் அணிந்த ஒரு தெய்வீக பாதம் பெரிய பச்சை இலையில் பதித்துக் கொண்டிருக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. அந்த இலையில் சடங்கினை குறிக்கும் வகையில் சமைத்த சாதம், ஆடு-கோழி தலைகள், பூக்கள், குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. இரத்தம் சொட்டும் வாள், கதையின் தீவிரத்தன்மையையும்,  தெய்வீக சக்தியும் இருப்பதை வலியுறுத்துகிறது.



 



படம் இன்று பிரமாண்ட விழாவுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டது. ஹீரோ நிகில் டைட்டிலை வெளியிட்டார். பன்னி வாசு (Bunny Vasu)  திரைக்கதைப் பிரதியை வழங்கினார். இயக்குநர்கள் வசிஷ்டா (Vassishta) , சந்தூ மொண்டேட்டி (, Chandoo Mondeti) , மெஹர் ரமேஷ் ( Meher Ramesh )கேமரா ஸ்விட்ச் ஆன் செய்தனர். VV வினாயக் முகூர்த்தக் காட்சிக்கு க்ளாப் அடித்தார். இயக்குநர் பிரசன்னா குமார் முதல் காட்சிக்கு “ஆக்சன்” கூறினார்.



 



நடாஷா சிங் (Natasha Singh) , நக்‌ஷா சரண் (Naksha Saran) ஆகியோர் ஹீரோயின்களாகவும், பிரபல கன்னட நடிகை அக்‌ஷரா கவுதா (Akshara Gowda)  முக்கிய வேடத்திலும்  நடிக்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா உள்ளிட்டோரும் இணைந்து  நடிக்கின்றனர்.



 



இளம் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழு இந்த படத்தில் பணியாற்றுகிறது. அனுதீப் தேவ் (Anudeep Dev) இசையமைக்க, சுஜாதா சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். சோட்டா K பிரசாத் (Chota K Prasad) எடிட்டிங், பிரஹ்மா கடலி ( Brahma Kadali )ஆர்ட் டைரக்சன், சிந்தா ஸ்ரீனிவாஸ் எழுத்து ஆகிய பணிகளை மேற்கொள்கிறார்கள்.



 



“ஹெய் வெசோ”  படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா