சற்று முன்

எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    துல்கர் சல்மான் தனது 41 வது திரைப்படத்தில் அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார்!   |    'கிராண்ட் ஃபாதர்' டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு M. S. பாஸ்கருக்கு வாழ்த்து!   |    நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |   

சினிமா செய்திகள்

ஜம்பு மகரிஷியின் உண்மை வரலாறோடு இணைந்த கதை தான் 'ஜம்பு மகரிஷி'
Updated on : 11 June 2022

விவசாயத்தில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவை வெளிநாடு ஒன்று தங்கள் நாட்டு அதிகாரிகள் நூறுபேரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி மரபணு விதைகளை மாற்றிகொடுத்து விவசாயத்தை அழிக்க முயல்கிறது. இதை தெரிந்துகொண்ட கதாநாயகன் அவர்களை எதிர்கொண்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதை.



 



திருவானை கோவிலில் ஜம்பு மகேஷ்வரர் கோவிலில் வெண் நாவல் மரத்தடியில் வீற்றிருக்கும் ஜம்பு மகேஸ்வரராஜ் வெண் நாவல் மரமாய் இருக்கும் ஜம்பு மகரிஷியும் பக்தர்களுக்கு அருள் வழங்கி கொண்டு இருக்கும் உண்மை வரலாறோடு இதன் திரைக்கதை அமைத்து படமாக்கப்பட்டுள்ள படம் தான் "ஜம்பு மகரிஷி ".



 



புதுமுகம் பாலாஜி நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக புதுவரவான ப்ரியா நடித்துள்ளார். மேலும் ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், பாகுபலி பிரபாகர், வையாபுரி, கராத்தே ராஜா ஆகியோருடன் " மஸ்காரா " பாடல் புகழ் அஸ்மிதா முக்கிய வேடத்தில் வருகிறார்.



 



நிறைய பொருட்செலவில் 250 அடி உயர சிவன் சிலை வடித்து சென்னை அருகே இதற்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து 2000 துணை நடிகர் நடிகையர், ஐம்பதிற்கும் மேற்பட்ட நடன குழுவினர் பங்கேற்க, பாடல் காட்சி ஒன்று அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.



 



அரக்கன் வாதாவியாக பாகுபலி பிரபாகரும்  அவனை அழிக்க நினைக்கும் ருத்ர வீரனாக பாலாஜியும் மோதும் அனல் பறக்கும் சண்டைக்காட்சியும் பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளது.



 



பிரபல இயக்குனரான பகவதி பாலா இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.சிவசங்கர் நடன பயிற்சியையும், டிராகன் பிரகாஷ் சண்டை பயிற்சியையும், ராஜ்கீர்த்தி படத்தொகுப்பையும், பி. புவனேஸ்வரன் வசனத்தையும் கவனித்துள்ளனர்.



 



தேனிசை தென்றல் தேவா இசையமைக்க பாலாஜி, புவனேஸ்வர், ஜார்ஜ் மூவரும் பாடல்களை எழுதி உள்ளனர்.



 



காசியில் உள்ள வாரணாசி, ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டை, விஜயவாடா மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.



 



டி.வி.எஸ். பிலிம்ஸ் சார்பில் பி.பாலாஜி -- பி.தனலட்சுமி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.



 



தணிக்கை அதிகாரிகளால் " யு "சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள "ஜம்பு மகரிஷி " படத்தின் கதை திரைக்கதை எழுதி நாயகனாக நடித்து பி-தனலட்சுமியுடன் இணைந்து தயாரித்துள்ள புதியவரான பி.பாலாஜி இதை தன் முதல் படமாக இயக்கி உள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா