சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

விக்ரம் பட நடிகைக்கு கொடைக்கானல் படப்பிடிப்பில் பாராட்டு விழா!
Updated on : 13 June 2022

இளையராஜா இசையமைக்கும் 1417வது படமாக ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் "நினைவெல்லாம் நீயடா" படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. இசைஞானி இளையராஜா எழுதி யுவன் சங்கர் ராஜா பாடிய "இதயமே இதயமே... உன்னைத் தேடித் தேடி..." என்ற பாடலுக்கு கதாநாயகன் பிரஜன் கதாநாயகி சினாமிகா பங்குபெற்ற நடனக் காட்சிகளை நடன இயக்குனர் தினேஷ் படமாக்கி வருகிறார்.



 



சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும்  வெற்றி பெற்று வசூலைக் குவித்துக் கொண்டிருக்கும் கமலஹாசனின் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்த வசந்தி பிரபல டான்ஸ் மாஸ்டர் தினேஷிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றுபவர். இன்று கொடைக்கானலில் நடந்துவரும் படப்பிடிப்பில் பணியாற்ற வந்த நடிகை வசந்திக்கு படக்குழு சார்பில் கதாநாயகி சினாமிகா ரோஜா மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இயக்குநர் ஆதிராஜன் மலர் கொத்து வழங்கி வாழ்த்தினார்.  படத்தின் தயாரிப்பாளர் ராயல் பாபு, நடிகர் பிரஜன், ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி,  ஆர்ட் டைரக்டர் முனிகிருஷ்ணா, மாஸ்டர் தினேஷ், மேனேஜர் இளங்கோ ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். படக்குழுவினர் அனைவரும் கைதட்டி வசந்திக்கு வாழ்த்துக்கூறினர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா