சற்று முன்

எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    துல்கர் சல்மான் தனது 41 வது திரைப்படத்தில் அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார்!   |    'கிராண்ட் ஃபாதர்' டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு M. S. பாஸ்கருக்கு வாழ்த்து!   |    நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |   

சினிமா செய்திகள்

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ திரைப்பட டீசர் 80 லட்சம் பார்வைகளை கடந்து, சாதனை!
Updated on : 15 June 2022

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அகிலன்”. இப்படத்தை Screen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ரசிகர்களிடம் பேராதரவை குவித்து 80 லட்சம் பார்வைகளை கடந்து, சாதனை படைத்து வருகிறது. 



 



இப்படத்தின் கதைக்களம், நாயகன் பாத்திரம் படத்தின் தன்மை ஒவ்வொன்றையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த,  புதுவிதமான புரமோஷன் பாணியை கையாண்டிருக்கிறது படக்குழு. தமிழ் சினிமாவுக்கே புதுமையான ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்துவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்வதாக இது இருக்கும். 



 



படத்தின் தலைப்பை வெளிப்படுத்தும் விதமாக முதலில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்போது டீசருக்கு முன்பாக படத்தின் களத்தை, படமாக்கப்பட்ட பிரமாண்டத்தை வெளிப்படுத்தும்  விதமாக ஒரு சிறு வீடியோ வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து டீசரை அறிமுகப்படுத்த டீசருக்கு முன்பாக இரண்டு சிறு வீடியோக்கள் வெளியானது, இந்த முதல் வீடியோவில் அகிலன் படத்தில் ஜெயம் ரவியின் பாத்திரத்தின் பெயர் இருக்கும், இரண்டாவது டீசரில் டீசர் வெளியீட்டு தேதியுடன், ஜெயம் ரவி பாத்திரம் எப்படி பட்டது, அந்த கதாப்பாத்திரம் என்னவெல்லாம் செய்யும், என்பதற்கான காட்சிகள் இருக்கும், அந்த காட்சிகளின்  தொடர்ச்சியாகவே  டீசர் வெளியானது, டீசரில் அகிலன் திரைப்படத்தின் உலகமும் நாயகனின் பயணமும் அவன் என்ன செய்கிறான் என்பதெல்லாம் இருந்தது, டீசர் முடியும் இடத்தின் தொடர்ச்சியாக அகிலனின் மொத்த உலகத்தையும் பிரமாண்டத்தையும் காட்டுவதோடு, பல கேள்விகளை ரசிகர்களுக்கு விதைப்பதாக இருக்கும். டிரெய்லரில் இரண்டு  காட்சிகள் வரும், பாதியில் முடியும் அந்த காட்சிகளுக்கான தொடர்ச்சி தொடர்ந்து வெளியாகும் ஸ்நீக் பீக்கில் இருக்கும். இந்த முன் வெளியீட்டில் அகிலன் திரைப்படம் அறிமுகப்படுத்தும் அனைத்து கேள்விக்கான பதில்கள், படத்தில் இருக்கும். சிலந்தி வலை போல் ஒன்றோடொன்று பிணைந்ததாக, முன்னோட்டமே பிரமிப்பில் ஆழ்த்தும் விதமாக இந்த அகிலன் ஒரு புது உலத்திற்கு ரசிகனை அழைத்து செல்லும். 



 



இப்படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடிக்க, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நயாகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் ஜிராக் ஜனி, ஹரீஷ் பேரடி, ஹரீஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா