சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

கதையின் நாயகனாக இயக்குனர் V.C.வடிவுடையான் நடிக்கும் 'நாக பைரவா'
Updated on : 16 June 2022

ஜீவன், யாஷிகா ஆனந்த், ரித்திகா சென் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடித்துள்ள "பாம்பாட்டம்" படத்தை இயக்கிய கையோடு இயக்குனர் V.C. வடிவுடையான் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கியுள்ளார்.

பாம்பாட்டம் படத்தின் இணை தயாரிப்பாளரான பண்ணை A.இளங்கோவன் தனது பண்ணை பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் " நாக பைரவா " படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்க உள்ளதோடு நாயகனாகவும் அறிமுகமாகிறார்.



 



பிரபல இந்தி நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.



 



ஜுலை 1  முதல் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. முழுக்க முழுக்க மும்பையில் முழு படப்பிடிப்பையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.



 



படம் பற்றி இயக்குனர் V.C.வடிவுடையான் நம்மிடையே பகிர்ந்தவை...



1970 காலகட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஹாரர் திரில்லர் கலந்து இந்த  கதையை உருவாக்கி உள்ளேன்.



 



2000 ராஜபாளைய நாய்களும் ஆயிரக்கணக்கான மாம்பா பாம்புகளும் படத்தில் இடம்பெற இருக்கின்றன. தமிழ் தெலுங்கு ஹிந்தி என பான் இந்தியா படமாக இந்த நாக பைரவ உருவாக இருக்கிறது.



 



படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருப்பதால் பிரம்மாண்டமாக வர வேண்டும் என்பதற்காக பிரபல ஹாலிவுட் நிறுவனம் அந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறது என்றார் இயக்குனர் V.C.வடிவுடையான்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா