சற்று முன்

அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |   

சினிமா செய்திகள்

நாக சைதன்யாவின் 'NC 22 ' பட நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றிய அறிவிப்புடன் இனிதே ஆரம்பமானது
Updated on : 23 June 2022

இயக்குநர் வெங்கட் பிரபு, புதுமையான பாணியில்,  வித்தியாசமான பரிமாணத்தில்   கதைகளை உருவாக்குவதில் வல்லவர். அதே நேரம் அவரது படைப்புகள் ஒரு போதும்  ரசிகர்களை கவர தவறியதில்லை. கோலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிகரமான வெற்றிகளைப் தந்த அவர், அழகான மற்றும் இளம் நட்சத்திரமான நாக சைதன்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இருமொழித் திரைப்படம் மூலம் தெலுங்குத் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். தெலுங்கு திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பாளரான Srinivasaa Silver Screens தயாரிப்பாளர்  ஶ்ரீனிவாசா சிட்தூரி தயாரிப்பில் உருவாகும், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது, இதனையொட்டி தயாரிப்பாளர்கள் நாயகி மற்றும் இசையமைப்பாளர்கள் குறித்த, பெரும் உற்சாகமான இரண்டு அறிவிப்புகளை தந்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். 



 



அழகு இளம் தேவதை, நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் நடிப்பின் மீதான ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் திறமையால், தென்னிந்திய திரைத்துறையில் பிரபல நட்சத்திரமாக மாறியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர்களாக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா மற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரை வரவேற்பதில் ஒட்டுமொத்த படக்குழுவும் பெரும்  உற்சாகத்தில் உள்ளது.



 





 





 



வெங்கட் பிரபு மற்றும் நாக சைதன்யா  கூட்டணியில் ஒரு திரைப்படம்  முன்னதாகவே நடக்க இருந்தது. ஆனால் இருவரும் அவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற ஒரு சரியான திரைப்படத்திற்காக காத்திருந்தனர்,  தற்போது இந்த கூட்டணி தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி தயாரிப்பில் பிரமாண்டமாக இணைந்துள்ளது. இப்படம் வெங்கட் பிரபுவின் டிரேட்மார்க் அம்சங்கள் அனைத்தும் நிறைந்த அட்டகாசமான  கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். தவிர, நாக சைதன்யா தனது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உள்ள அனைவரையும் கவரும் ஒரு அழகான பாத்திரத்தில் தோன்றவுள்ளார். இந்த திரைப்படத்தில் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். படத்தை பற்றி  வரவிருக்கும் அடுத்தடுத்த அறிவிப்புகள் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் இன்னும் அதிகரிக்கும்.



 



Srinivasaa Silver Screens தயாரிப்பாளர்  ஶ்ரீனிவாசா சிட் தூரி, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கும்படி, இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தற்போது, அவர் ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்தைத் தயாரித்து வருகிறார், 



 



பவன் குமார் வழங்கும் இப்படத்தை  இயக்குநர் லிங்குசாமி இயக்கியுள்ளார், இப்படம் ஜூலை 14, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் ராம் பொதினேனி மற்றும் பிளாக்பஸ்டர் இயக்குனர் போயபதி ஸ்ரீனு (அகண்டா புகழ்) கூட்டணியில் மற்றுமொரு அட்டகாசமான திரைப்படத்தை இத்தயாரிப்பு நிறுவனம் உருவாக்கவுள்ளது குறிப்பிடதக்கது.



 



இத்திரைப்படம் இயக்குநராக வெங்கட் பிரபுவின் 11வது திரைப்படமாகும், டோலிவுட்டில் அவர் இயக்குநராக  அறிமுகமாகும் முதல் படம். தெலுங்கு திரையுலகின் யூத் ஐகான் நாக சைதன்யா இந்த திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாவது குறிப்பிடதக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா