சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா - ஜோதிகா
Updated on : 24 June 2022

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. நடிப்பு, நடனம், என ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, அதையடுத்து வரிசையாக முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். 



 



தற்போது சாய்பல்லவி நடிப்பில் ’கார்கி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் தலைப்பு போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.



 



இந்நிலையில் சாய்பல்லவி கார்கி படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று பகிர்ந்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். இந்த காத்திருப்புக்கு பதிலளிக்கும் விதமாக  பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து கார்கி படத்தை சூர்யா, ஜோதிகா அவர்களின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்



 



இது குறித்து படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், வாழ்க்கையின் அதிசய நிகழ்வுகள் பல நேரங்களில் நாம் எதிர்பாராத போதே நடந்து விடுகின்றது. அப்படி எங்களுக்கு நடந்த அதிசயம் தான் சூர்யா, ஜோதிகா எங்கள் படத்தில் இணைந்து இருப்பது. சூர்யாவும், ஜோதிகாவும் கார்கியை பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதை விட எங்களுக்கு பெருமகிழ்ச்சி ஏதும் இல்லை.



 



இவை அனைத்திற்கும் உறுதுணையாக நின்று செயல்படுத்திய எனது விநியோகஸ்தர் சக்திவேலன் அவர்களுக்கும், ராஜசேகர பாண்டியன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி’ என்று மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்கள்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா