சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முதல் சுயாதீன ஆல்பம் சாங் 'வாடி வாடி' வெளியானது
Updated on : 01 July 2022

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முதல் சுயாதீன ஆல்பம் பாடலான ‘வாடி வாடி’ பாடல் ஜூன் 29 அன்று வெளியிடப்பட்டது, இப்பாடல் அதன் அற்புதமான இசை மற்றும் அசத்தலான காட்சிகளுக்காக ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது. Think Originals’ தொடர்ந்து  இசை பிரியர்களின் இதயம் அள்ளும்  சுயாதீன ஆல்பம் பாடல்களை வழங்கி வருகிறது.  அந்த வகையில் இப்பாடல்  ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது. ஜூன் 29ஆம் தேதி வெளியான ‘வாடி வாடி’ பாடல் வெளியானதில் இருந்தே ரசிகர்களிடம் பாடலுக்கான வரவேற்பு அமோகமாக உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசைக்கோர்வை மற்றும் விவேகாவின் நவநாகரீக பாடல் வரிகள் ரசிகர்களை  ஈர்க்கும் அம்சமாக அமைந்துள்ளன. அஸ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோரின் அழகான கெமிஸ்ட்ரி மனதை கொள்ளை கொள்கிறது. ஒளிப்பதிவு நாயகன் ஆர்.டி.ராஜசேகர் தனது அற்புதமான ஒளிப்பதிவின் மூலம் பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளார். தமிழ் ஆல்பங்களிலேயே மிக பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட முதல் தமிழ் வீடியோ பாடல் ‘வாடி வாடி’ என்பது குறிப்பிடத்தக்கது.



 



வாடி வாடி' பாடலை கார்த்திக் அரசகுமார் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் ISC யும், படத்தொகுப்பை ஆண்டனியும் செய்துள்ளனர். இந்த பாடலுக்கு சாண்டி நடனம் அமைத்துள்ளார், பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ளார். மற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் DRK கிரண் (கலை), போற்றி பிரவின் (காஸ்ட்யூம் டிசைனர்), ஷங்கர், பாண்டி, கௌதம், இளன், தீபக், தாஜ், விஜய், நிதின், ராஜா, கிமி, சாம், தேவ், முகமது, விக்னேஷ் (இணை இயக்கம்), காமராஜ் (நிர்வாகத் தயாரிப்பாளர்), சரஸ்வதி (நிர்வாக மேலாளர்), திலீப் போர்கர் & ஆகாஷ் போர்கர் (லைன் புரடியூசர்ஸ்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு).

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா