சற்று முன்

நடிகர் சசிகுமார் பிறந்தநாளை முன்னிட்டு 'யாத்திசை' படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியானது!   |    ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' டிரெய்லர்!   |    VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடிக்க 'ஹெய் லெசோ' திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது!   |    'தி பாரடைஸ்' படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபு மீண்டும் வெள்ளித் திரைக்கு வருகை!   |    தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்குமெண்ட்ரி - டிராமா!   |    முன்னணி ஓடிடி தளமான ZEE5, தமிழ் ஒரிஜினல் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது!   |    இயக்குநராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார்!   |    காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்!   |    முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !   |    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக 'மருதம்' உருவாகியுள்ளது.   |    விமர்சன ரீதியாக பாராட்டப்படும் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரெளபதி 2'   |    அப்பா -மகள் இடையிலான அன்பை சொல்லும் கவிதையாக உருவாகியுள்ளது 'மெல்லிசை'   |    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!   |    நடிகர் உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது!   |    மோதியின் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட வாழ்வை உணர்வுப்பூர்வமாக பேசும் படம் 'மா வந்தே'   |    அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |   

சினிமா செய்திகள்

அசத்தல் ரீமிக்ஸ் ஆக வெளியான காபி வித் காதல் பர்ஸ்ட் சிங்கிள்
Updated on : 01 July 2022

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் 'காபி வித் காதல்'. கலகலப்பான படங்களை இயக்குவதற்கு பெயர்பெற்ற இயக்குனர் சுந்தர்.சி இந்த படத்தை இயக்கியுள்ளார்.



 



இதற்கு முன்னதாக சுந்தர்.சி யின் டைரக்ஷனில் வெளியான  அரண்மனை 3 ஹாரர் த்ரில்லராக ரசிகர்களை மிரட்டியது என்றால் குடும்பப்பாங்கான காதல் கதையாக கலகலப்புக்கு உத்தரவாதம் தரும் விதமாக உருவாகி உள்ளது இந்த காபி வித் காதல்.



 



இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்று இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.



 



இதில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். 



 



எப்போதுமே இயக்குனர் சுந்தர்.சியின் படங்களில் நிச்சயமாக கலகலப்பான குடும்ப நடனப்பாடல் ஒன்று தவறாமல் இடம் பெறுவது வழக்கம். அதிலும் பழைய படங்களில் ஹிட்டான பாடல்களை அழகாக ரீமிக்ஸ் செய்து, அதற்கு படத்தில் இடம்பெற்ற நட்சத்திரங்கள் அத்தனை பேரையும் நடனம் ஆட வைத்து படம் ஆக்குவதில் சுந்தர் சி வித்தகர்.



 



இதற்கு முன்னதாக ஆம்பள படத்தில் இன்பம் கொஞ்சும் வெண்ணிலா வீசுதே, வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் வாங்க மச்சான் வாங்க ஆகிய சூப்பர் ஹிட் பாடல்களை இந்தக்கால இளைஞர்களும் ரசிக்கும் விதமாக குடும்ப நடன பாடலாக அழகாக படமாக்கி  இருப்பார் சுந்தர்.சி.



 



இந்த நிலையில் தற்போது அவர் இயக்கியுள்ள காபி வித் காதல் படத்திலும் அப்படி ஒரு சூப்பர் ஹிட் பாடல் குடும்ப நடன பாடலாக இடம் பெற்றுள்ளது. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமலும் குஷ்புவும் இணைந்து நடித்த எஸ்பிபியும் சித்ராவும் இணைந்து பாடிய "ரம்பம் பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்" என்கிற பாடல் இந்த படத்தில் இடம்பெறுகிறது. படத்தில் நடித்த நட்சத்திரங்களும் இந்த பாடலுக்கு ஆடிப்பாடுவதாக இந்த நடனம் படமாக்கப்பட்டுள்ளது.



 



அந்த வகையில் இந்த பாடல் படத்தின் ஹைலைட்டான அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என்பது சந்தேகம் இல்லை

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா