சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

'பன்னிக்குட்டி' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!
Updated on : 05 July 2022

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், Super Talkies சமீர் பரத் ராம் தயாரிப்பில், இயக்குநர் அனுசரண் இயக்கத்தில், யோகி பாபு, கருணாகரன் முதன்மை பாத்திரத்தில்  நடித்திருக்கும் திரைப்படம் “பன்னிக்குட்டி”. ஒரு அழகான காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஜீன் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழு நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். 



 



இந்நிகழ்வினில் 



இசையமைப்பாளர் K  கூறியதாவது...



 



“பன்னிக்குட்டி” எனக்கு முக்கியமான படம், தொடர்ந்து சீரியஸான படங்களை செய்துகொண்டிருக்கும் வேளையில் இந்த படம் எனக்கு மிக நெருக்கமாக அமைந்தது. படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது. இது உங்களுக்கு நிச்சயமாக பிடித்த படமாக இருக்கும். உங்களது ஆதரவு எங்களுக்கு தேவை. 



 



அறிமுக நாயகி லக்‌ஷ்மி பிரியா கூறியதாவது...



 



இந்த படத்தில் பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது. அவர்களுடன் பணிபுரிந்தது பெரிய அனுபவம். படத்தின் என்னுடைய கதாபாத்திரம் அழகாக திரையில் கொண்டுவர ஒளிப்பதிவாளர் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார்கள். இது ஒரு நேர்மையான படம். எங்கள் படம் முழுமையாக தயாராகிவிட்டது, அதை பார்வையாளர்களிடம் நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும்.



 



தயாரிப்பாளர் ஷமீர் கூறியதாவது...



 



படத்தை தியேட்டருக்கு கொண்டு வர உதவிய லைகா புரடக்‌சனுக்கு நன்றி. சிறிய படங்களுக்கு, திரைக்கதை நன்றாக இருந்தால் தான், பெரிய நடிகர்கள் இல்லாமலும் அதை சிறப்பாக எடுக்க முடியும். அனுசரண் இயக்குநர் மட்டும் அல்ல, சிறந்த படதொகுப்பாளரும் கூட. கருணாகரன் சிறந்த நடிகர், அவர் ஏற்கும் எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கும். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமையும். சின்ன படங்களுக்கு நீங்கள் தான் ஆதரவு தர வேண்டும். 



 



திண்டுக்கல் ஐ லியோனி கூறியதாவது...



 



இந்த படத்தின் மூலமாக 21 வருடத்திற்கு பிறகு நடிப்பிற்கு திரும்ப வருகிறேன். இந்த படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. நான் இந்த படத்தில் சாமியார் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதை இயக்குனர் காரணமாக தான் என்னிடம் கொடுத்திருக்கிறார். எந்தவித பதட்டமும் இல்லாமல் இயக்குனர் அனுசரண் வேலைப்பார்ப்பார். கருணாகரனுக்கு இந்தபடம் பெரிய வெற்றியாக இருக்கும். அனுசரண் நடிகர்களிடம் இருந்து நடிப்பை வாங்குவதில் திறமைக்காரர். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். இந்த படம் அனைவருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை கொடுக்கும் படமாக இருக்கும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள் நன்றி. 



 



இயக்குனர் அனுசரண் கூறியதாவது...



 



எனக்கு வாய்ப்புகொடுத்த லைகாவிற்கும், ஷமீருக்கும் நன்றி. வாழ்கையில் துவண்டு போன நிலையில் இருக்கும் போது, அதில் இருந்து மீண்டு வருவதற்காகவே காமெடி படம் கொடுக்க நினைத்தேன். ரவி முருகையா உடைய கதை தான் இந்த பன்னிகுட்டி. இந்த கதையை தயாரிப்பாளரிடம் கூறும் போது, அவருக்கு மிகவும் பிடித்து போனது. படத்தில் லியோனி சார் நடிக்க வந்தது மகிழ்ச்சியான ஒன்று. எல்லா நடிகர்களும் நெருக்கடியான சூழலில் நடித்து கொண்டிருப்பவர்கள், ஆனால் முழு அர்பணிப்பையும் கொடுத்து பணியாற்றினார்கள். இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இந்த கதைக்கு என்னுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நிஜ பன்னிகுட்டியுடன் படப்பிடிப்பை நடத்தினோம். அது மிகவும் கடினமாக இருந்தது.  விலங்குகளை வைத்து எடுப்பது சாதாரண காரியம் இல்லை, பல நெருக்கடிகளை கடந்து, சில யுக்திகளை பயன்படுத்தி தான் படம் எடுத்தோம். உசிலம்பட்டியை சுற்றி இருக்கும் கிராம மக்களுக்கு நன்றி கூற வேண்டும், அவர்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, ஒரு சிரிப்புடன் வெளியே வருவீர்கள். நம்பிக்கை தான் வாழ்கை என்பதை இந்த படம் கற்றுக்கொடுக்கும். 



 



நடிகர் கருணாகரன் கூறியதாவது...



 



ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு கிடைக்கும் போது, அந்த கதாபாத்திரத்திற்கு நான் தகுதியானவனா என்று யோசிப்பேன். இந்த கதையை இயக்குனர் கூறிய போது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் எல்லாருமே முக்கிய கதாபாத்திரங்கள் தான். இயக்குனர் உடைய பதட்டமில்லாத தன்மை, என்னை ஆச்சர்யபடவைத்தது. இசையமைப்பாளர் இந்த படத்தில் கொடுத்திருக்கும் இசை, ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.  இந்த படம் நம்பிக்கை கொடுக்கும் படம். இந்த படத்தில் யோகிபாபு நடித்திருப்பது எங்களுக்கு சந்தோசம். படத்தை மக்களிடம் நீங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.



 



“பன்னிக்குட்டி” திரைப்படத்தை  அனுசரண் இயக்கியுள்ளார்.  Lyca Productions வழங்க Super Talkies சமீர் பரத் ராம் தயாரித்துள்ளார்.  இப்படத்தில் கருணாகரன், யோகி பாபு, திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் இன்னும் பல முன்னணி பிரபலங்கள்  இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு K இசையமைத்துள்ளார் மற்றும் சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார், மேலும் இயக்குனர் அனுசரனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார். சண்டைப்பயிற்சி இயக்கத்தை ஃபயர் கார்த்திக் செய்ய, M.R.ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்), சமீர் பரத் ராம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.



 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா